பாசியில் இருந்து எரிபொருள்

பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு மாற்றாக புதிய எரிபொருளை உருவாக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி வாகனங்களை இயக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் வாகனத்துக்கு தேவையான ஹைட்ரஜனை உருவாக்க `பாசி’கள் பயனுள்ளதாக இருக்கும் என்று இப்போது அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அமெரிக்க எரிசக்தி துறை விஞ்ஞானி டேவிட் டைடி கூறி இருப்பதாவது:-

ஒரு செல் தாவரமான பச்சை நிற பாசிகள் ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் பெருமளவு காணப்படுகின்றன. இவற்றில் ஹைட்ரோஜெனசிஸ் என்ற பொருள் அதிக அளவு உள்ளது. இதன் மூலம் ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்ய முடியும். எனவே வருங்காலத்தில் பாசியை பயன்படுத்தி ஹைட்ரஜன் வாயுவை உற்பத்தி செய்து அதன் மூலம் வாகனங்களை இயக்க முடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

%d bloggers like this: