இந்த கோடைக்கு ஐரோப்பா போகலாமே!

இந்தியாவின் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அலுத்துப் போனவர்கள், ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான நீர்வழி சுற்றுலா மூலமாக, பல்வேறு நாடுகளின் சுற்றுலாத் தலங்களை பார்த்து ரசிக்கலாம்.
ஹாலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நீர் வழிச் சுற்றுலா செல்லும் போது வண்ண, வண்ணமாக பூத்து குலுங்கும் மரங்கள், வித்தியாசமான கனிகள், பிரமிக்க வைக்கும் விண்ட் மில்கள் கண்களை கவரும்.
ஆம்ஸ்டர்டாம் – புடாபெஸ்ட் இடையேயுள்ள இடங்களை, இரண்டு வாரங்களில் நீர்வழி மூலம் பயணம் செய்து ரசிக்கலாம். நீர் வழிச் சுற்றுலா குறித்த தகவல்கள், ஆன் லைனில் சுலபமாக கிடைக்கின்றன. அவற்றின் மூலம் செல்ல வேண்டிய இடங்களையும், அங்குள்ள வசதிகளையும் அறிந்து, சுற்றுலா மேற்கொள்ளலாம்.
ஹங்கேரியில் புடாபெஸ்ட், போலந்தில் கிராகவ், ஜெர்மனியில் மியூனிச், ஆஸ்திரியாவில் வியன்னா உள்ளிட்ட நகரங்கள் பார்க்க வேண்டியவை.
ஐரோப்பிய நகரங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள், வரலாற்று சிறப்பு மிக்க பரபரப்பான நகரங்கள், நெரிசலான நகரங்கள், காண்பவர்களை வியக்க வைக்கும் கட்டடங்கள், நினைவு சின்னங்கள், சிறந்த <உணவு, மது வகைகள் ஆகியவைகளுடன் ஐரோப்பிய கலாசாரத்தையும் தெரிந்து கொள்ளலாம்.
நீர் வழிச் சுற்றுலா நடத்தும் நிறுவனங்கள், பல்வேறு, “பேக்கேஜ்’ திட்டங்களை வைத்துள்ளன. வழிநெடுக உள்ள துறை முகங்களில் பொழுது போக்கு விளை யாட்டுக்கள், பாட்டு, நடனம் போன்றவை ஏற்பாடு செய்யப்படுகின்றன. துறைமுகங்களில் இருந்து நகரங்களுக்குள் சென்று, சுற்றிப் பார்க்கவும் முடியும். பெரிய கப்பல்கள் துவங்கி, சிறிய படகுகள் வரை பயணத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் உள்ளது போல, சுற்றுலா கப்பல்களில் (குரூசஸ்) அலங்கார கூடம், உணவகம், ஓய்வு எடுத்தபடி இயற்கை காட்சிகளை முழுமையாக பார்த்து ரசிக்க, அகன்ற ஜன்னல்கள் போன்றவை உள்ளன. சுற்றுலா பயணிகள் கோல்ப் விளையாடவும், தோட்ட பராமரிப்பில் ஈடுபடவும் முடியும். இசை ரசிகர்களுக்கு இனிமையான இசை விருந்தும் உண்டு.
நீர் வழிச் சுற்றுலாவிற்கு பொருத்தமான கப்பல், உணவு, தங்கும் அறை தேர்வு மிக முக்கியம். போதுமான உடைகள், காலணிகள், கையுறைகள் உள்ளிட்டவைகளை உடன் கொண்டு செல்ல வேண்டும். நீர் வழிச் சுற்றுலா செல்பவர்கள், வழக்கமான <உடைகளை அணியலாம் என்றாலும், சீதோஷ்ண நிலைக்கேற்ற ஆடைகளையும் எடுத்துச் செல்வது நல்லது.
நீர்வழிச் சுற்றுலா செல்லும் நாடுகளுக்கான விசா, டபுள் செக் பாஸ்போர்ட் ஆகியவை அவசியம். எந்த ஆற்றில் பயணம் செய்வது சிறப்பானது; நான்கு நாள் குறுகிய பயணம் முதல், 16 நாள் நீண்ட பயணம் வரை உள்ளதில் எதை தேர்ந்தெடுப்பது; பயணம் செய்வதற்கு எது சிறந்த நிறுவனம்; கப்பல், படகு இவற்றில் எது சிறந்தது; அதில் அளிக்கப்படும் வசதிகள், சலுகைகள் என்ன; மருத்துவ வசதி உள்ளதா; கிரடிட் கார்டு ஏற்றுக் கொள்ளும் வசதி உள்ளதா ஆகியவற்றை ஐரோப்பாவில் முதல் முறையாக சுற்றுலா செல்பவர்கள் தெரிந்து கொண்டால், பயணம் சுகமாகவும், இனிமையாகவும் இருக்கும் .

Leave a Reply

%d bloggers like this: