பார்சுவ கோணாசனம்

செய்முறை:
1. விரிப்பில் நேராக நின்று, 3 அடி இடைவெளியில், இரண்டு கால்களையும் விலக்கி நிற்க வேண்டும்.
2. வலது காலை வலது பக்கம் திருப்ப வேண்டும்.
3. கைகளை பக்கவாட்டில் திருப்ப வேண்டும்.
4. இப்போது மெதுவாக மூச்சை இழுத்துக் கொண்டே, வலது காலை ‘எல்’ வடிவில் மடக்க வேண்டும்.

5. பின் மூச்சை வெளிவிட்டுக் கொண்டே வலது பக்கம் சாய்ந்து, வலது கையின் விரல்களை, வலது கால் விரல்களுக்கு இணையாக அருகில் வைக்க வேண்டும்.
6. பின் மூச்சை இழுத்துக் கொண்டே, இடது கை, இடது காதை அணைத்தவாறு, முழங்கையை மடக்காமல் இருக்க வேண்டும்.
7. இப்போது முகத்தை சற்று மேல் நோக்கி திருப்ப வேண்டும்.
8. இந்த நிலையில், ஆழ்ந்த சுவாசத்தில் சிறிது நேரம் இருந்து, பின் மூச்சை இழுத்துக் கொண்டே சாதாரண நிலைக்கு வர வேண்டும்.
9. அடுத்து இதேபோன்று, கால்களை மாற்றி செய்ய வேண்டும்.
குறிப்பு:
கைகளை தரையில் வைத்து செய்ய முடியாதவர்கள், சற்று உயரத்திற்கு செங்கல் போன்று ஏதாவது வைத்து, அதன் மேல் கைகளை வைத்து செய்யலாம்.
பயன்கள்:
1. இடுப்பு சதை பகுதி குறையும்.
2. ஜீரண மண்டலம் நன்கு தூண்டப்பட்டு, கழிவுகள் முறையாக வெளியேற்றப்படும்.
3. சுவாச மண்டலம் நன்கு வேலை
செய்யும்.

Leave a Reply

%d bloggers like this: