எக்ஸெல் டிப்ஸ்…எக்ஸெல்: பேஸ்ட் பட்டன்

எக்ஸெல்: பேஸ்ட் பட்டன்

எக்ஸெல் 2003க்குப் பின் வந்த தொகுப்பில் பணியாற்றும் பலரும் இதனை அறிந்திருக்க மாட்டார்கள். அத்தொகுப்பில் தரப்பட்டிருக்கும் பேஸ்ட் பட்டன் வழக்கமான பட்டனாக இல்லாமல் மேலும் சில வசதிகள் கொண்டதாக இருப்பதைக் காணலாம். ஹோம் மெனுவில் இடது ஓரமாக இந்த ஐகான் கிடைக்கும். அதிலுள்ள சிறிய அம்புக் குறியினை அழுத்தினால் எக்ஸெல் உங்களுக்காக மேலும் சில

வேலைகளை மேற்கொள்ள தயாராக இருப்பதனைக் காணலாம். இதில் பேஸ்ட் ஸ்பெஷல் பட்டன் ஒன்று இருக்கும். அதனை அழுத்தினால் பேஸ்ட்செய்வதில் மேலும் சில கூடுதல் வசதிகளைத் தரும் பிரிவுகள் காணப்படலாம். எனவே நீங்கள் தேர்ந்தெடுத்த செல்லில் இருந்து பார்முலா வேண்டுமா, வேல்யூ வேண்டுமா, செல் டேட்டா மட்டும் வேண்டுமா, செல் பார்மட்டோடு காப்பி செய்யப்பட வேண்டுமா, யூனிகோட் டெக்ஸ்ட்டில் டெக்ஸ்ட் அமைக்கப்பட வேண்டுமா எனப் பல பிரிவுகள் இங்கு உங்கள் தேவைக்குத் தரப்பட்டிருக்கும். உங்கள் தேவைக்கேற்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க் ஷீட் பயன்படுத்த

எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்.

எக்ஸெல் சத்தம் கொடுக்கும்

நீங்கள் பயன்படுத்தும் கம்ப்யூட்டர் ஒரு மல்ட்டி மீடியா கம்ப்யூட்டர் என்றால், எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றினைப் பயன்படுத்துகையில், சில செயல்பாடுகளுக்கு ஒலிக்கச் செய்திடும் வகையில் அமைக்கலாம். ஏற்கனவே, நாம் தவறான கீயினை அழுத்துகையில் ‘டிங்’ என்று நாம் எதிர்பார்க்காத ஒலியை எக்ஸெல் ஒர்க் ஷீட் ஏற்படுத்தும். இதனைச் சற்று விரிவாக, நாம் விரும்பும் செயல்பாடுகளில், விரும்பும் ஒலி ஏற்படும் வகையில் அமைக்கலாம்.
இதற்குக் கீழே கொடுத்துள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. முதலில் எக்ஸெல் செயலியை இயக்கவும். (எக்ஸெல் 2007 புரோகிராமில், Office பட்டன் அழுத்தி, கீழாகக் கிடைக்கும் Excel Options என்ற டேப்பில் அழுத்தவும். எக்ஸெல் 2010 மற்றும் எக்ஸெல் 2013 எனில், ரிப்பனில், File டேப் அழுத்தி Options என்பதனைக் கிளிக் செய்திடவும்.
2. இப்போது கிடைக்கும் டயலாக் பாக்ஸில், இடது பக்கம் உள்ள Advanced என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இப்போது கிடைக்கும் பிரிவுகளில் Provide Feedback with Sound என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, எந்த ஒலி வேண்டும் என்பதனை கண்ட்ரோல் பேனல் சென்று, Sounds Applet மூலம் மாற்றிக் கொள்ளலாம். இந்த செயல்பாட்டினை, எக்ஸெல் உள்ளாக மேற்கொள்ள முடியாது.

Leave a Reply

%d bloggers like this: