இணையதளங்களிலிருந்து ஸ்ட்ரீமிங் விடீயோக்களை டவுன்லோட் செய்வது எப்படி.?

இன்றைக்கு இணையம் ஆனது மனிதனுடைய வாழ்வுதனில் தவிர்க்க இயலாத முக்கியப்பங்கு வகிக்கிறது.எந்த அளவினுக்கு மனிதர்கள்தம் வேலைகளை குறைத்து சிக்கலான வேலைகளையும்,குறைவான நேரத்திற்குள்ளாக செய்திட உதவிபுரிகிறதோ அதனைப்போலவே இன்றைய காலகட்டத்தில் மனிதர்தான் பொழுதுபோக்கு தேவைகளையும் பூர்த்திச் செய்யக்கூடிய இடத்திலும் இணையமே முதன்மையாக இருக்கிறது.

அத்தகைய இணையம் வாயிலாக ஒளிபரப்பப்படுகிற லைவ் ஸ்ட்ரீமிங் விடீயோக்களை எவ்வாறு டவுன்லோட் செய்வதென பார்ப்போம்.

இணைய வளர்ச்சியின் மற்றுமொரு அத்தியாயத்தின் துவக்கமே இணையம் வழி நிகழ்படங்களை நேரடியாக ஒளிபரப்பக்கூடிய செயல்முறையாகும்.தனியொரு மனிதன் சமூகத்தின் அப்போதைய நிகழ்வுகள் குறித்து தமது கருத்துக்களை வெளியிட அடித்தளம் இட்டுக்கொடுத்த இணையம் தான் இன்றைக்கு விடீயோக்களை லைவ் செய்கிற வசதியினையும் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.

சமூகத்தில் அவ்வப்போது நடைபெறுகிற நிகழ்வுகள் குறித்து தனிமனிதர்களும் தமது கருத்துக்களை பதிவு செய்திடவும்,உலகின் ஏதோ ஓர் முலையில் நடைபெறுகிற சம்பவங்கள் குறித்தான செய்திகள் குறித்து உடனுக்குடன் அறிந்துகொள்கிற வாய்ப்பினையும் எல்லோருக்கும் இங்கே ஏற்படுத்தித்தந்தவை சமூகவலைத்தளங்களே ஆகும்.

மேலும்,வாக்குச் செலுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் இந்த சமூக ஊடங்கங்கள் வழி விழிப்புணர்வு மேற்கொள்கின்றது என்கிற செயலே நமக்கு இன்றைய சமூகம் தனில் இவற்றின் தாக்கத்தை புரிய வைக்கும்.
இத்தகைய சமூக வலைத்தளங்களும் இப்போது தமது பயனாளர்கள் லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித்தந்துள்ளன.

தற்போதைய கணக்கீட்டின்படி,10ல் 6 பேர் இணையம் வழியாக விடீயோக்களைப் பார்த்துக்கொண்டுள்ளனர்.மேலும் 60நொடிகளுக்குள்ளாக 400 மணிநேரங்கள் ஓடக்கூடிய விடியோக்கள் யூட் யூப்பில் அப்லோட் செய்யப்படுகிறது.

 

இணையத்திலோ அல்லது சமூகவலைத்தளத்திலோ இவ்வாறு ஒளிபரப்படுகிற ஸ்ட்ரீமிங் விடியோக்கள் பயனுள்ளவையாகவோ அல்லது பொழுதுபோக்குக்காகவோ இருக்கலாம்.அவற்றை டவுன்லோட் செய்துகொள்ள இந்த எளிய வழிகளைப் பின்பற்றினால் போதும்.

உங்கள் கம்ப்யூட்டரில் ஜே டவுன்லோடர் 2 என்ற செயலியை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு டவுன்லோட் செய்ய வேண்டிய வலைதளத்தின் யுஆர்எல் லினை ஜே டவுன்லோடர் 2 ஆப்பில் பதிவிட்டு ஜே டவுன்லோடர் 2 வழியாக உங்களுக்கு அந்த தளத்தில் தேவையான விடீயோக்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

http://jdownloader.org/download/offline

Leave a Reply

%d bloggers like this: