பிடிங்க உங்களுக்கான ஸ்பெஷல் டிப்சை…!

சமையல் செய்ய தெரிந்தால் மட்டும் போதாது. அதை சிறப்பாக்க சில டிப்ஸ்களையும்  அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சமையலில் ருசி ஒரு பிடி தூக்கலாக இருக்கும். சரியா..? பிடிங்க உங்களுக்கான ஸ்பெஷல் டிப்சை…!
1. காளானை அலுமினிய பாத்திரத்தில்  சமைக்காதீர்கள். அதன் கருமை பாத்திரத்தில் இறுகப்படிந்து அவற்றை  போக்குவதற்கு படாதபாடு பட வேண்டியதிருக்கும்.

2. முட்டையை வேகவைக்கும் போது பல நேரங்களில் ஓடு வெடித்து கரு வெளியில் வந்து  விடும். இதனைத்தவிர்க்க வேக வைக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் வினிகரை  கரைத்து விடுங்கள். கீறல் இல்லாத அவித்த முட்டை ரெடி.
3. தோசை மாவை அரைக்கும்போது, கொஞ்சம் ஜவ்வரிசியை சேர்த்து அரைத்தால் தோசை மெல்லியதாகவும், சுவையாகவும் இருக்கும்.
4. பக்கோடா செய்வதற்கு கடலை மாவிற்கு பதில் கடலைப்பருப்பை பயன்படுத்தலாம்.  அரை மணி நேரம் பருப்பை ஊற வைத்து மிக்சியில் கரகரப்பாக அரைத்து, நறுக்கிய  வெங்காயம், உப்பு, மிளகாய் கலந்து பக்கோடா செய்தால் மொறுமொறுப்பாக  இருக்கும்.

Leave a Reply

%d bloggers like this: