முத்து போன்ற பற்களுக்கு!

சிரிப்பு. மனிதர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம். மற்றவர் கவரும் வகையில் சிரிப்பு இருக்க வேண்டும் என்றால், பற்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பற்கள் மஞ்சள் நிறத்தில் இருந்தால், பார்ப்போருக்கு, சங்கடத்தை ஏற்படுத்தலாம்.

பொதுவாக, எல்லோருக்கும், சர்க்கரை மாதிரி பற்கள் வெள்ளையாக இருக்காது; வயதாக ஆக, பற்களில் பொலிவு குறைந்து, கொஞ்சம் மஞ்சள் நிறத்துக்கு மாறும். எனாமல் எனும் வெளிப்பூச்சு தேய்ந்து “டென்டின் எனும் உள்பகுதி வெளியில் தெரியத் தொடங்குவதே முதுமையில் ஏற்படுகிற பல்லின் நிறமாற்றத்துக்கு அடிப்படைக் காரணம். ஆனால், பலருக்கும் இளமையிலேயே பற்களின் நிறம் மாறிவிடுகிறது.
தீயதை விடுங்கள்
பொதுவாக, பற்கள் மஞ்சளாக தெரிவதற்கு, வயது, பரம்பரை காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிகளவில் டீ, காபி அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற காரணங்கள் இடம் பிடிக்கின்றன. பற்களில் மஞ்சள் கறை இருப்போர், பல் மருத்துவரிடம் சென்று, சரிப்படுத்துவதும் உண்டு. ஆனால், எளிதான வகையில், வீட்டுக்குள்ளேயே இருக்கிறது, மஞ்சள் கறை போக்கும் மருத்துவம்.
பற்களை வெண்மையாக்குவதில், பேக்கிங் சோடா பெரிதும் உதவியாக இருக்கும். சிறிதளவு பேக்கிங் சோடாவை, அரை கப் குளிர்ந்த நீரில் கலந்து, தினமும் மூன்று முறை வாய் கொப்பளித்து வந்தால், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகள் நீங்கி விடும்.
எலுமிச்சை சாறில், ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து பற்களை தேய்க்கலாம் அல்லது எலுமிச்சையின் தோலைக் கொண்டு பற்களை தேய்த்து, பின் குளிர்ந்த நீரில் வாயை கொப்பளிக்கலாம். இதன் மூலமும் பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை நீங்கும்.
பயன்படும் ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறைகளும் நீங்கி விடும். ஏனெனில், அதில் இயற்கையாக உள்ள அசிட்டிக் தன்மையானது, பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் இன்னமும் எளிதான வழி இருக்கிறதா என்றால், கைவசம் இருக்கிறது உப்பு. இந்த உப்பை கொண்டு, பற்களை தினமும் தேய்த்தால், பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் அகன்றுவிடும். அதே சமயம், உப்பை அளவாக பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அளவுக்கு அதிகமாக உப்பை பயன்படுத்தினால், அவை ஈறுகளையும், எனாமலையும் பாதிக்கும்.
இயற்கையாகவே, ஸ்ட்ராபெர்ரி ஒரு டூத் பேஸ்ட். இதில் சிட்ரஸ் ஆசிட் இருக்கிறது. இதனால் இதை உண்பதால் பற்களானது சுத்தமாவதோடு, வெள்ளையாகவும் ஆகும். வேண்டுமானால், தினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதை பற்களில் தேய்த்தால், பற்களானது சுத்தமாகும். பற்கள் வெள்ளையாக வேண்டுமென்றால், ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அத்துடன் பேக்கிங் சோடாவை சேர்த்து, பின் துலக்க வேண்டும்.
துளசி இலையை, வெயிலில் சில மணிநேரம் உலர வைத்து, பின் அதனை பொடி செய்து, தினமும் பேஸ்ட் உடன் சேர்த்து பற்களை துலக்கி வந்தால், மஞ்சள் கறைகள் அகலும். அக்காலத்தில், சாம்பல் கொண்டு பற்களை துலக்கி வந்ததால் தான் என்னவோ, நமது பாட்டி, தாத்தாவின் பற்கள் ஆரோக்கியமாகவும், வெள்ளையாகவும் இன்று வரை உள்ளது. ஆகவே இத்தகைய சாம்பலை, டூத் பேஸ்ட் உடன் சேர்த்து பற்களை, தினமும்,
இருமுறை துலக்கினால், பலன் கிடைக்கும்.

Leave a Reply

%d bloggers like this: