ஈரக்கையால் மின் சாதனங்களை தொடக்கூடாது ஏன்…?

ஈரக்கையால் மின்சாதனப் பொருட்களை கையாளக்கூடாது என்று அனைவரும் எச்சரிக்கப்படுகிறோம். காரணம் நீரில் உப்பு மின் கடத்தியாக செயல்படுவது தான். நீரில் உப்புக்கள் அதிகளவில் கரைந்துள்ளன. அதன்மூலம் எளிதில் மின்சாரம் கடத்தப்பட்டுவிடும். 

மேலும் நமது உடலானது 70 சதவீதம் நீர் மற்றும் அதில் கரைந்துள்ள பல்வேறு  தாதுப்பொருட்களால் ஆனது. எனவே நமது உடலும் மிகச்சிறந்த மின்கடத்தியாக  செயல்படும். இதனாலேயே நாம் மின்சார கம்பிகளை வெறும் கைகளால் தொடக்கூடாது. ரப்பர் கையுறைகள், காலணிகளை அணிவதின் மூலம் மின் அதிர்ச்சியில் இருந்து நம்மை ஓரளவு காத்துக்கொள்ளலாம்.

Leave a Reply

%d bloggers like this: