ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா? இதோ!

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நமது உடை, உணவு, பழக்கவழக்கம், நாம் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தும் மாறிவிட்டது. இதில் குறிப்பான ஓன்று பெண்கள் அணியும் உயரமான செருப்புகள். ஹை ஹீல்ஸ் என்று சொல்லப்படும் இந்த

வித்தியாசமான காலணிகளை இன்று பல பெண்கள் அணிகின்றனர்.

சற்று உயரம் குறைவாக இருக்கும் பெண்கள் தங்களது உயரத்தை அதிகரித்துக்காட்ட ஹை ஹீல்ஸ் காலணிகளை அணிகின்றனர். இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இதனால் விளைவுகள் ஏதேனும் வருமா? வாங்க பாக்கலாம்.

இதனால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் உள்ளதாக செய்திகள் கூறுகிறது. அதன்படி, ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு இடுப்பு வலி, முதுகு கூன் விழுதல், கெண்டைக்கால் வலி, தலைச் சுற்று போன்ற பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

இந்த வகையான காலணிகள் அணிவதால் இடுப்பு, மூட்டு மற்றும் எலும்பு பகுதிகள் வேகமாக வலுவிழக்கின்றன. அதுமட்டுமின்றி இடுப்பு எலும்பில் ஏற்படும் நிலை மாற்றதினால், பிரசவத்தின் போது அதிக வலியும், பிரச்சனைகளும் எழும் அபாயங்கள் இருக்கின்றன.

எலும்புகளில் இருக்கும் கால்சியம் அளவு வெகுவாக குறைகிறது, இதனால் கால்களில் விரிசல்கள், முறிவுகள் ஏற்படலாம். நரம்புகளை கிள்ளும் உணர்வால் அதிகபட்சவலி ஏற்படலாம். காலை உயர்த்திய நிலையிலேயே வைத்திருப்பது, குறுகிய கால்தசைநார் வலியை உருவாக்கலாம்.

இதுபோன்ற காலணிகளை அணிந்து வேகமாக நடப்பது என்பது சற்று கடினம். இந்த உயரமான காலணிகள் சற்று சறுக்கினால் கூட கீழே விழும் அபாயம் மிக அதிகம்.

Leave a Reply

%d bloggers like this: