வாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி?

வாட்ஸ்அப் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சங்களில் ஒன்றாக
டார்க் மோட் இருந்தது. செயலியில் டார்க் அம்சத்தை வழங்க பலர் கோரிக்கை

விடுத்து வரும் நிலையில், வெப் பதிப்பிலும் டார்க் மோட் வழங்கப்படுமா என்ற
கேள்வியை சிலர் எழுப்பி வருகின்றனர். இதற்கு ஃபேஸ்புக்கை தவிர வேறு யாரும்
சரியான பதில் அளிக்க முடியாது. வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட்
அம்சத்தை இயக்க ஒரு வழி இருக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை
பின்பற்றி வாட்ஸ்ப் வெப் சேவையிலும் டார்க் மோட் வசதியை பெற முடியும்.

வாட்ஸ்அப்
வெப் சேவையில் டார்க் மோட் வசதியை பெற கூகுள் க்ரோம் அல்லது மொசில்லா
ஃபயர்ஃபாக்ஸ் போன்ற தளங்களின் மேம்பட்ட வெர்ஷன் பயன்படுத்த வேண்டும். இந்த
அம்சம் இரு பிரவுசர்கள் அல்லாமல் மற்ற பிரவுசர்களில் பயன்படுத்த முடியாது.
இத்துடன் ஸ்டைலஸ் எனும் எக்ஸ்டென்ஷன் அவசியம் ஆகும்.

வாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி?

ஸ்டைலஸ் எக்ஸ்டென்ஷன் டவுன்லோடு செய்வது எப்படி?

1- கூகுள் க்ரோம் அல்லது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் பிரவுசர் செல்ல வேண்டும்

2 – எக்ஸ்டென்ஷன் பிரவுசர் சென்று ஸ்டைலஸ் என சர்ச் செய்ய வேண்டும்

3 – எக்ஸ்டென்ஷனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்

வாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் அம்சத்தை இயக்குவது எப்படி?

வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் தீம் இயக்குவது எப்படி?

1 – எக்ஸ்டென்ஷன் இன்ஸ்டால் செய்யப்பட்டதும், அதனை திறந்து வாட்ஸ்அப் வெப் டார்க் தீம் கண்டறிய வேண்டும்

2 – வாட்ஸ்அப் வெப் சேவையில் புதிய டேப் திறக்க வேண்டும்

3 – ஸ்டைலஸ் பாப்-அப் விண்டோவில் ஃபைன்ட் ஸ்டைல்ஸ் லின்க் க்ளிக் செய்ய வேண்டும்

4 – இனி வாட்ஸ்அப் வெப் தளத்திற்கு கிடைக்கும் தீம்களை பார்க்க முடியும்

5 – அதில் டார்க் தீம் க்ளிக் செய்து ஆப்ஷனை உறுதிப்படுத்த வேண்டும்

6 – ஆப்ஷன் இன்ஸ்டால் ஆனதும் திரையின் நிறம் மாறியிருப்பதை பார்க்க முடியும்

7
– இதேபோன்று வலைத்தளம் சென்று குறிப்பிட்ட தீம்களில் ஒன்றை தேர்வு செய்து
கொள்ளலாம். இதுதவிர உங்களது விருப்பம் போல் புதிய தீமை உருவாக்கலாம்

குறிப்பு:
ஸ்டைலஸ் என்பது க்ரோம் மற்றும் ஃபயர்ஃபாக்ஸ் தளத்திற்கான மூன்றாம் தரப்பு
சேவையாகும். இதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு நாங்கள் பொருப்பேற்க
முடியாது.

Leave a Reply

%d bloggers like this: