அடுத்த “பவர் ஸ்டார்” யாரு.. ஏற்கனவே 2 பேர் காத்திருக்க.. குறுக்கே வரும் “இருவர்”.. அதிமுக டென்ஷன்!

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அதிமுகவுக்குள் உட்பூசல்கள் வெடித்து வருகின்றன

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் அதிமுகவுக்குள் உட்பூசல்கள் வெடித்து வருகின்றன

சென்னை: “மனுசனுக்கு பதவியைவிட, மானம்தான் முக்கியம்” என்று சொல்லிட்டே இருக்காராம் துணை முதல்வர் ஓபிஎஸ்.. எல்லாத்துக்கும் காரணம் அந்த இரட்டை தலைமை பிரச்சனை விவகாரம்தான்!

ஜெயலலிதா எப்படி எப்படியோ பாடுபட்டு.. கட்டிக்காத்து வந்த அதிமுக என்ற ஆலமரம் ஏற்கனவே 2 ஆக உடைந்து விட்டது.. இப்போது உட்கட்சி பூசலும் வெடித்து கிளம்பி உள்ளது.. இதன் முடிவுகள் எப்படி இருக்குமோ தெரியவில்லை.. இருந்தாலும் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் அதிமுகவை இன்னும் சில நாட்களுக்கு ஆட்டி படைக்கும் என்று மட்டும் தெரிகிறது.

கடந்த 3 வருடங்களாகவே புகைச்சல் அதிமுகவில் இருந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது.. தங்களுக்கென தனி ஆதரவாளர்கள், தங்களுக்கென மா.செ.க்கள், என 2 பிரிவாக அதிமுகவுக்குள் செயல்பட்டு வருவதையும் கண்ணெதிரே பார்த்து கொண்டுதான் வருகிறோம்.

காலண்டர்

எப்போதுமே வருடா வருடம் கட்சி சார்பில் காலண்டர் வெளியிடப்படும்.. அதில் யார் போட்டோ பதிவிடுவது என்பதில்கூட இந்த வருடம் பிரச்சனை வெடித்திருக்கிறது.. அதிருப்திகள் புகைந்து கொண்டே இருந்தாலும், அது வெடித்து சிதறியது தேனியில் ஒட்டிய போஸ்டரால்தான்!

அறிவிப்புகள்

உடனடியாக ஆளுக்கு ஒரு பக்கம் பறந்தார்கள்.. ஆலோசனை நடத்தினார்கள்.. கூட்டாக ஒரு அறிவிப்பு வெளியிட்டு தற்காலிகமாக அந்த பிரச்சனையை ஆஃப் செய்தார்கள்.. எனினும் எடப்பாடியார் – ஓபிஎஸ் இடையே பவர் போர் கனன்று கொண்டே இருக்கிறது.. அமைச்சர்கள் சிலர் இந்தவிவகாரத்துக்கு பிறகு தூது நடவடிக்கையில் இறங்கினாலும் ஓபிஎஸ் ஆதங்கம் இன்னும் குறையவில்லையாம்.. மனுசனுக்கு பதவியைவிட, மானம்தான் முக்கியம் என்று சொல்லி கொண்டே இருக்கிறாராம்.

முதல்வர்

இப்படி ஏற்கனவே அவர் கொந்தளிப்பில் இருந்தபோதுதான், இன்னொரு விஷயம் சுதந்திர தினத்தன்று வெடித்திருக்கிறது.. விருது வாங்குவோர் லிஸ்ட்டில் ஓபிஎஸ் 6வது நபராக நிற்க வைத்து, முதல்வர் விருது தந்தாராம்.. இதை ஓபிஎஸ்ஸால் சகித்து கொள்ளவே முடியவில்லை…. அதுமட்டுமல்ல, அங்கிருந்த யாரோ ஒரு ஒரு அதிகாரி, “சார்.. வரிசையில் வாங்க”ன்னு சொல்லி உள்ளார் போலும்.. “இந்த அவமானம் எல்லாம் எனக்கு தேவையா” என்று மனம் புழுங்கி கேட்கிறார் ஓபிஎஸ்!

சசிகலா

ஏற்கனவே முதல்வர் வேட்பாளர் பிரச்சனை வெடித்து கிடக்கும்போது, அந்த போட்டிக்கு 2 அமைச்சர்கள் குறி வைத்துள்ளது ஓபிஎஸ்க்கு மேலும் குடைச்சலை தந்துள்ளது. இதில் ஒருவர் வசம் 25 எம்எல்ஏக்கள் இருக்கிறார்களாம். போதாக்குறைக்கு இவர் தீவிரமான சசிகலா விசுவாசி என்பதையும் நினைவு கூர வேண்டி உள்ளது. அதிகம் சத்தம் போடாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இவர் இருந்தாலும் கூட உள்ளுக்குள் நிறைய லட்சியங்களுடன்தான் ஒவ்வொரு காயையும் நகர்த்திக் கொண்டிருக்கிறாராம்.

பொறுப்புகள்

இன்னொருவரும் முக்கியத் துறையை தன் வசம் வைத்துள்ள அமைச்சர்தான் என்று சொல்கிறார்கள். செல்வாக்கு மிக்க அமைச்சர்களில் மிக முக்கியமானவர்.. டெல்லிக்கும் – தமிழக அரசுக்கும் இடையே பாலம் போல உள்ளவர்களில் முக்கியமானவர். அதுமட்டுமல்ல, இப்பவே தன்னை முதல்வராக்கினால், பாஜக கூட்டணியை நிச்சயம் வர போகிற தேர்தலில் ஜெயிக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு என்றும் சொல்லி வருகிறாராம்.

சலசலப்புகள்

இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை… இருந்தாலும், இந்த இரு அமைச்சர்களும் ரகசிய திட்டங்களுடன் காய் நகர்த்தி வருவது அதிமுகவின் உயர் மட்ட அளவில் சலசலப்புகளையும், அதிர்ச்சி அலைகளையும் ஏற்படுத்தியுள்ளதாம். சசிகலா வெளியே வந்தவுடன்தான் இவர்களின் போக்கு எப்படி இருக்கும் என்பது தெரிய வரும் என்றும் சொல்கிறார்கள்.

பவர் ஸ்டார்

ஆனால், பாஜக தலைமையோ, எல்லாவற்றையும் அமைதியாக கவனித்து வருகிறது.. யாருக்கும் எந்த ஆதரவான பதிலையும், உத்தரவாதத்தையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தரவும் இல்லை.. அதேசமயம், தமிழகத்தில் என்ன செய்து தாமரையை மலர வைக்கலாம் என்பதையும் அது மறந்துவிடவில்லை.. அதன் கைவசம் ஏகப்பட்ட வாய்ப்புகள் இப்போது உள்ளது என்றாலும் கூட இதுவரை எந்த ஆப்ஷனும் லாபம் தருவது போல தெரியவில்லை என்பதால் பாஜகவுக்கும் குழப்பமாகத்தான் இருக்கிறதாம்.. அதேசமயம், தமிழகத்தின் அடுத்த “பவர் ஸ்டார்” யார் என்பது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது,

Leave a Reply

%d bloggers like this: