அதிர்ஷ்டம் உண்டாக்கக் கூடிய செடி வகைகள், துரதிர்ஷ்டத்தை தரும் செடி வகைகள் !

மரங்கள், செடிகள், கொடிகளை வீட்டில் வளர்ப்பது வாஸ்து தோஷத்தை நீக்கும் என்பது உண்மையான ஒன்று. உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் பசுமையான

மரங்களையும், செடிகளையும் நீங்கள் வளர்த்து வந்தாலே போதும். எல்லாவிதமான வாஸ்து தோஷங்களும் நீங்கி விடும். இருப்பினும் மரம், செடி, கொடிகளை வளர்ப்பவர்கள் எது கிடைத்தாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும் வளர்க்க கூடாது? ஏன் வளர்க்கக் கூடாது? என்பதை பற்றிய தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்…

அதிர்ஷ்டம் உண்டாக்கக் கூடிய செடி வகைகள், துரதிர்ஷ்டத்தை தரும் செடி வகைகள் என்று இரண்டாக பிரிக்கப்படுகிறது.

இதிலும் விதி விலக்காக மருதாணி, ரோஜா போன்ற செடிகள் உள்ளன. இவைகளும் முட்கள் நிறைந்த செடிகள் தான். ஆனால் இவைகள் அதிர்ஷ்டத்தை தரக் கூடியது. இதுபோல் ஒவ்வொரு செடி வகைகளுக்கும் ஒவ்வொரு விதமான பலன்களை தரும் குணம் உள்ளது. அந்த வகையில் வீட்டின் முன்னால் அரளிச் செடியை கட்டாயம் வளர்க்கக் கூடாது என்கிறார்கள். அரளிச் செடி தெய்வீக குணங்களை கொண்டது அல்ல. அரளிச் செடி தோஷ நிவர்த்திக்காக பயன்படுத்தி வருகின்றனர். பூஜைகளிலும், அரச்சனைகளுக்கும் அரளிப் பூ பயன்பட்டாலும் அதை வீட்டின் முன்னால் வளர்ப்பது நல்லதல்ல.

அரளிச்செடிகளை தோட்டம், வீட்டின் பின்புறம் போன்ற பகுதிகளில் வளர்க்கலாம். வீட்டின் முன்னால் அரளிச் செடி வளர்ப்பவர்களுக்கு அக்கம் பக்கத்தினர் ஆதரவும், நட்பும் பிரச்சனையாகவே இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவும். எவ்வளவு தான் நீங்கள் ஒற்றுமையாக வாழ நினைத்தாலும், இந்த செடியின் அதிர்வலைகள் அதனை சீர்குலைக்கும். தெய்வீக செடிகளுக்கு நல்ல அதிர்வலைகளை உண்டாக்கக் கூடிய தன்மை இருக்கும். அத்தகைய செடி வகைகளை நீங்கள் வீட்டில் முன்னால் வளர்த்து வந்தால் நிறைய நன்மைகள் உண்டாகும்.

வாசனை மிக்க மலர்களும், தெய்வீக குணங்களும், நல்ல அதிர்வலைகளை உண்டாக்க வல்லதுமான செடிகளை நிலைவாசல் படியின் நேரெதிரே வீட்டிற்கு முன்னால் வளர்த்து வந்தால் அந்த வீட்டில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பார்கள். அந்த வகையில் முதலில் இருப்பது துளசி செடி. இந்த மூன்று குணங்களும் துளசிச் செடிக்கு நிறையவே உள்ளன. அதே போல் மருதாணி முட்கள் நிறைந்ததாக இருந்தாலும், மருதாணியை மகாலட்சுமிக்கு இணையாக பார்ப்பதால், அதை வளர்ப்பது நல்லதுதான்.

அதே போல் மல்லிகை, பாரிஜாதம், செண்பகம், மாதுளை போன்ற செடி வகைகள் வீட்டின் முன்னால் வளர்ப்பது அனைத்து ஐஸ்வர்யத்தையும் வழங்கும் என்பார்கள். முட்கள் நிறைந்த ரோஜா செடியை வீட்டின் முன்னால் வளர்க்காமல் தோட்டத்தில் அல்லது பின்புறமாக வளர்க்கலாம். அதே போல் அரளி, வெற்றிலை, முருங்கை போன்றவற்றையும் வீட்டிற்கு பின்புறம் வளர்ப்பதுதான் நல்லது. முட்கள் இருக்கும் கள்ளிச் செடியை கட்டாயமாக வீட்டில் வளர்க்கவே கூடாது. இதை வீட்டில் வளர்ப்பதால் துரதிஷ்டம் தான் வரும். உங்களுக்கு கிடைக்க வேண்டிய அதிர்ஷ்டமும் கிடைக்காமல் செய்துவிடும்.

%d bloggers like this: