ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (கடகம் – புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)

முன் வைத்த காலைப் பின் வைக்காத நீங்கள், சொன்ன சொல் தவறமாட்டீர்கள். மனத்துக்குப் பிடித்துவிட்டால் கணக்குவழக்கு பார்க்காமல் வாரி வழங்குவீர்கள். உங்களுக்கு இந்த ராகுப் பெயர்ச்சி, திடீர் யோகங்களைத் தருவதாகவும், கேது மாற்றம் அவ்வப்போது மனஇறுக்கத்தைத் தருவதாகவும் அமையும்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு 12-ல் அமர்ந்து கொண்டு அலைக்கழிப்புகளையும், செலவு களையும், தூக்கமின்மையையும், எதிர்காலம் பற்றிய பயத்தையும் ஏற்படுத்திய ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவ தால், உங்களின் செல்வம் – செல்வாக்கு கூடும்.

பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர்களெல்லாம் திருப்பித் தருவார்கள். பங்குச்சந்தை மூலம் லாபம் வரும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். அனுபவம் மற்றும் அறிவு பூர்வமாகப் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.

மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வருவீர்கள். மூத்த சகோதர வகையில் மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் சந்தோஷம் குடிகொள்ளும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புது பதவிகள், பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் சாதகமாக முடியும்.

பூர்வீகச் சொத்தை மாற்றிப் புதிதாக வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். மனத்தில் தொக்கி நிற்கும் தாழ்வு எண்ணங்களைத் தூக்கி எறிவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழி உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வெளி வட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராகும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும்.

வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பற்று வரவு உயரும். உங்கள் ரசனைக்கேற்ப கடையை அழகுபடுத்தி, நவீனமாக்கு வீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நல்ல வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். தரகு, அழகு சாதனப் பொருள்கள், கணினி உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் மத்தியில் சலசலப்புகள் நீங்கும். மதிப்பு கூடும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் ராஜ தந்திரத்தை உடைத்தெறிவீர்கள். பதவி உயர்வுக் கான தேர்வில் வெற்றி பெற்று புது பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமைத் தருவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் சிலருக்கு வேலை அமையும். விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தையும், மக்களின் ரசனைகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப பொருள்களைக் கொள்முதல் செய்து லாபம் ஈட்டப் பாருங்கள். பெரிய முதலீடுகள் வேண்டாம். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.

உத்தியோகத்தில் உயரதிகாரிகளுக்குத் தகுதாற்போல் பேசும் வித்தையையும் கற்றுக் கொள்ள வேண்டுமென்ற முடிவிற்கு வருவீர்கள். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் பூர்வ புண்யாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால், வேலை கிடைக்கும். தடைகள் நீங்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவு வீர்கள். புது பொறுப்புகள் தேடி வரும். சகோதர வகையில் ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் மதிப்பார்கள்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை ராசி நாதனான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால் தோற்றப் பொலிவு கூடும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பேச்சில் கனிவு பிறக்கும். சமையலறை, படுக்கை அறையை நவீனமாக்குவீர்கள். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்களை மாற்றுவீர்கள். திருமணம் தடைப்பட்டிருந்தவர்களுக்குத் தடைகள் நீங்கி திருமணம் கூடி வரும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார். அவர்வழி உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை ராகுபகவான் உங்களின் தனாதிபதியான சூரியனின் கார்த் திகை நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்ப்பு கள் அடங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்க விஷயங்கள் விரைந்து முடியும்.

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு 6-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகளின் பட்டியலில் உங்களை இடம்பிடிக்க வைத்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்குப் பூர்வபுண்ணிய வீடான ஐந்தாம் வீட்டிற்குள் வந்து அமர்கிறார். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்பு வீர்கள். புதிய திட்டங்களை நிறைவேற்று வதில் தடை, தாமதங்கள் ஏற்படும்.

பூர்விகச் சொத்துப் பிரச்னை தலைதூக்கும். குடும்பத்தினருடன் செலவிடக்கூடிய நேரம் குறையும். கணவன் -மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். உணவு விஷயத் தில் கட்டுப்பாடு அவசியம்.

தவணை முறையில் பணம் செலுத்தி புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர், நண்பர் களுடன் கருத்து மோதல்கள், சலசலப்புகள் உண்டாகும். அதிக உரிமை எடுத்துக் கொண்டு யாரிடமும் பேசவோ, பழகவோ வேண்டாம். பழைய கடன் பிரச்னைகளை நினைத்துக் கலங்குவீர்கள். முதுகுக்குப் பின்னால் விமர்சிப்பவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை, உங்களின் விரயாதிபதியும் சேவகாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் மனோபலம் கூடும். மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையும் சுலபமாகச் செய்து முடிப்பீர்கள்.

வர வேண்டிய பணம் கைக்கு வரும். பயணங் களால் பயனடைவீர்கள். புதியவரின் நட்பால் மகிழ்ச்சியடைவீர்கள். இளைய சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் சப்தம அஷ்டமாதிபதியான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால், உள்மனத்தில் இனம்புரியாத பயம் ஏற்படும். உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை. குடும்பத்திலும், வெளி வட்டாரத்திலும் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னைகளைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது உணர்ச்சிவசப் படுவீர்கள். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். அந்தரங்க விஷயங் களை வெளியிடாமல் தேக்கி வைப்பது நல்லது.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேதுபகவான் பாக்கியாதிபதியும் சஷ்டமாதிபதியுமான குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், அடிப்படை வசதிகள் பெருகும்.

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சேமிக்கும் எண்ணம் வரும். பிதுர்வழிச் சொத் தைப் போராடி பெறுவீர்கள். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். மறைமுக எதிரி களால் ஆதாயமடைவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்:

யிலாடுதுறை- தரங்கம்பாடிக்கு அருகேயுள்ள திருக்களாஞ்சேரி எனும் தலத்தில் சுயம்பு லிங்கமாக அருளும் நாகநாதரை வணங்கி வாருங்கள்.பழைய பள்ளிக்கூடம் அல்லது கோயிலைப் புதுப்பிக்க உதவி செய்யுங்கள்; வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகும்.

Leave a Reply

%d bloggers like this: