ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (-மிதுனம் – மிருகசீரிடம் 3,4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2,3-ம் பாதம்)

சிந்தனையாற்றலும், பகுத்தறிவுத்திறனும் கொண்ட உங்களை, இந்த ராகு கேது மாற்றம் புகழின் உச்சிக்குக் கொண்டு வருவதுடன் அனைத்து வளங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.

ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசியில் அமர்ந்து உங்களைப் பல விதமான பிரச்னைகளில் சிக்க வைத்தார் ராகு பகவான். யோசிக்கவிடாமல் ஒரு பதற்றத்தையும், படபடப்பையும் ஏற்படுத்தினார்.

இப்போது ராசிக்கு 12-ம் வீட்டிற்கு வந்தமர்வதால், பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமையிலிருந்த விடுபடுவீர்கள். மருத்துவச் செலவுகள் குறையும். ஏமாற்றங்கள், தர்ம சங்கடமான சூழல்களிலிருந்து விடுபடுவீர்கள். உங்கள் முகம் இனி மலரும்.

எல்லோருடனும் மனம் விட்டுப் பேசும் சூழ்நிலை உருவாகும். பிரிந்திருந்த கணவன் – மனைவி ஒன்று சேருவீர்கள். எதிரும், புதிருமாகப் பேசிக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்து நட்புப் பாராட்டுவார்கள். தடைப்பட்டிருந்த சுப நிகழ்ச்சிகள் இனி அடுத்தடுத்து நடந்தேறும்.

வெகுநாள் கனவாக இருந்த வீடு வாங்கும் ஆசை இப்போது நிறைவேறும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். என்றாலும் விரய ஸ்தானத்தில் ராகு அமர்வதால், எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவினங்கள் இருந்து கொண்டேயிருக்கும்.

சில நாள்களில் தூக்கம் குறையும். ஆன்மிக வாதிகளின் ஆசியைப் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாட்டைச் செய்து முடிப்பீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். சில தந்திரங் களைக் கற்றுக் கொள்வீர்கள். அனுபவம் மிக்கவர்களைப் பணியில் அமர்த்துவீர்கள். புதிய தொழிலில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது.

புதிய நண்பர்களால் வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் வரும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய சலுகைகளை அறிமுகப் படுத்துவீர்கள். உணவு, ஷேர், சிமென்ட், கல்விக்கூடங்களால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில், ஒதுக்கிவைக்கப் பட்டிருந்த உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சமயோஜித புத்தியுடன் செயல்பட்டு மூத்த அதிகாரிகளின் மனத்தில் இடம் பிடிப்பீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 4.1.2021 வரை செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள், சகோதர வகையில் சச்சரவு, வரவுக்கு மிஞ்சிய செலவுகள், வீண் சந்தேகம் வந்து செல்லும்.

புதுப் பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது. வெளிவட்டாரத்தில் தனி நபர் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. சொத்து வாங்கும்போது பட்டா, வில்லங்கச் சான்றிதழ்களைச் சரி பார்த்து வாங்குங்கள்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை தனாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகு பகவான் செல்வதால், தேங்கிக் கிடந்த வேலை களை முடிப்பீர்கள். பணப்பற்றாக்குறையைச் சமாளிக்க அதிகம் உழைப்பீர்கள்.

குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். வீட்டில் கூடுதல் அறை அல்லது தளம் அமைக்கும் முயற்சிகள் நல்ல விதத்தில் முடிவடையும். அடகிலிருந்த நகையை மீட்க வழி பிறக்கும்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை ராகு பகவான் உங்களின் சேவகாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால் தைரியமாகச் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கம்பீரமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. புது வேலை கிடைக்கும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயம் நல்ல விதத்தில் முடிவடையும். இளைய சகோதர வகையில் ஆதாயமடைவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காவிட்டாலும் திடீர் உதவிகள் புது வகையில் வந்து சேரும்.

கேதுவின் பலன்கள் :

இதுவரை உங்களின் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து, கணவன் – மனைவிக்குள் பிரிவையும், கருத்துமோதல்களையும், மருத்துவச் செலவு களையும் தந்த கேது பகவான், இப்போது உங்கள் ராசிக்கு 6 – ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார்.

ஆகவே, தடைகள் விலகும்; எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஷேர் மூலமாகப் பணம் வரும்.

உங்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியவர் களெல்லாம் பணத்தை வட்டியுடன் திருப்பித் தருவார்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. ஆன்மிக அறிஞர்களின் நட்பால் தெளிவு பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டு. கோயில் வழிபாடுகளில் கலந்து கொள்வீர்கள்.

உத்தியோகத்தில் சவால்களைச் சந்திக்க நேரிடும். மனைவிவழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள்.

பங்குதாரர்கள் உங்களைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பார்கள். புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். முக்கிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள், உங்களிடம் அலுவலக ரகசியங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள். எதிர்பார்த்த இடத்திற்கே மாற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் ராசிநாதனும் சுகாதி பதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். அழகு, அறிவு, ஆரோக்கியம் கூடும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழிச் சொத்துகளைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். ஆடை, அணிகலன் சேரும். வீட்டை அழகுப் படுத்துவீர்கள். உங்களில் சிலர் நல்ல காற்றோட்டம், குடிநீர் வசதியுள்ள வீட்டிற்கு மாறுவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் அஷ்டம பாக்கியாதிபதியான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். பணவரவு உண்டு. அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.

பிரச்னைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து சாதுர்யமாகத் தீர்ப்பீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாகும். வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். புது பதவிகள், பொறுப்புகளுக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். தந்தையாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை கேதுபகவான் ஜீவனாதிபதியும் சப்தமாதிபதியுமான குரு பகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரயம், ஏமாற்றம், வேலைச்சுமை வந்து செல்லும்.

தம்பதிக்கு இடையே வீண் மனஸ்தாபம் வர வாய்ப்பு உண்டு. ஆகவே, கணவன் – மனைவிக்குள் வீண் சந்தேகத்தைத் தவிர்க்கப்பாருங்கள். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

முக்கியமான விஷயங் களில் கவனச் சிதறல் ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கிய ஆவணங்களில் கையெழுத் திடுமுன் வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறுவது மிக அவசியம். வி.ஐ.பிகளால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டு.

பரிகாரம்:

வேலூர், வாணியம் பாடிக்கு அருகிலுள்ள ஆம்பூரில் அருள்பாலிக்கும் அபயவல்லி சமேத நாக ரத்தின சுவாமியை வணங்குங்கள். கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள்; வெற்றிகள் தொடரும்.

Leave a Reply

%d bloggers like this: