ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (- மேஷம் – அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம்

புதுமையாக சிந்திக்கும் உங்களுக்கு இந்த ராகு கேதுப் பெயர்ச்சி, சுற்றுச் சூழலுக்குத் தகுந்தாற் போல் நடந்துகொள்ளும் மனப் பக்குவத்தையும் தருவதாக அமையும்.

ராகுவின் பலன்கள்

ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் வந்து அமர்கிறார். பணவரவு திருப்திகரமாக இருக்கும்; என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் அடுத்தடுத்து வரும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. எல்லா வேலைகளையும் முன்னெச்சரிக்கையுடன் செய்ய பாருங்கள்.

வெற்றி நிச்சயம் என்றாலும் வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால் உணர்ச்சி வசப்பட்டுப் பேசாதீர்கள். இளைய சகோதரருட னான மனக்கசப்பு நீங்கும். சகோதரியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள்.

உங்களிடம் கடன் வாங்கிய ஏமாற்றியவர்கள் இனி திருப்பித் தருவார்கள். பால்ய நண்பர்கள் உங்களை நாடி வருவார்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. கண், காது, பல் சம்பந்தப்பட்ட உடல் ரீதியான பிரச்னைகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன்பாக மற்றொரு மருத்துவரிடம் இரண்டாம் கருத்தையும் கேட்டறிந்து முடிவெடுப்பது நல்லது. அவ்வப்போது தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள்.

பத்திரங்களில் கையெழுத்திடும்போது ஒருமுறைக்குப் பலமுறை படித்துப் பாருங்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பெண்கள் அலட்சியம், சோம்பல், பயம் ஆகியவற் றிலிருந்து விடுபடுவார்கள். தடைப்பட்டுக் கொண்டிருந்த கல்யாணம் சிறப்பாக நடக்கும். விலையுயர்ந்த தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் ராசிநாதனான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் 1.9.2020 முதல் 4.1.2021 வரை ராகுபகவான் செல்வதால், பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த சொத்துக்கு, மீதிப் பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள்.

சகோதரர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும்.

சுகாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 5.1.2021 முதல் 12.9.2021 வரை ராகுபகவான் செல்வதால் மனத்தில் ஒரு தெளிவு, முகமலர்ச்சி, அழகு, ஆற்றல், உற்சாகம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். தள்ளிப்போன விஷயங்கள் முடியும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தாயாரின் உடல் நிலை சீராகும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு பெருகும்.

ராகுபகவான் உங்களின் பூர்வ புண்யாதி பதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் 13.9.2021 முதல் 21.3.2022 வரை செல்வதால், பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகிச் சென்ற சொந்தபந்தங்கள் வலிய வந்து பேசுவார்கள். அரசியலில் செல்வாக்கு கூடும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் முன்புபோல் நஷ்டம் வராமல் இருக்க, விளம்பர யுக்திகளைக் கையாளுவீர்கள். புது வகையில் யோசிப்பீர்கள். லாபம் உயரும். வேலையாள்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். பணியாளர்களுக்குச் சம்பளத்தை உயர்த்தி ஊக்குவிப்பீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் மோதல்போக்கு மறையும். மேலதிகாரி உங்களின் பொறுப்பு உணர்வைக் கண்டு புதிய பதவி தருவார். உங்களின் ஆலோசனையையும் ஏற்பார். சக ஊழியர்களுடன் வாக்குவாதம் வேண்டாம். கணினித் துறையினருக்கு வேறு நல்ல வாய்ப்பு தேடி வரும். சம்பளம் உயரும். கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கேதுவின் பலன்கள்:

கேது இப்போது உங்களின் ராசிக்கு எட்டில் வந்து அமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். அடிமனத்தில் ஒரு பயம் வரும். சட்டத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம். குறுக்குவழியில் சம்பாதிப்ப வர்களின் நட்பைத் தவிர்ப்பது நல்லது. கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும்.

வாழ்க்கைத் துணைவருடன் விட்டுக் கொடுத்துப் போவதனால் பிரச்னைகள் விலகும். வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமை யையும் கடைப்பிடிப்பது நல்லது.

சமூக வலைத்தளங்களில் உங்களின் கருத்தைப் பதிவிட்டுப் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். உறவினர்கள் அவ்வப்போது தொந்தரவு தருவார்கள்.

கேது 8 – ல் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். அலைபேசியில் பேசியபடி வாகனங்களை இயக்க வேண்டாம். மற்றவர்களின் பிரச்னைகளில் மூக்கை நுழைக்காதீர்கள்.

எட்டில் நிற்கும் கேது ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாட்டை ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்களின் திருதியாதி பதியும் சஷ்டமாதிபதியு மான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் 1.9.2020 முதல் 10.5.2021 வரை கேது பகவான் செல்கிறார்.

ஆகவே, எல்லாவற் றையும் சமாளிக்கும் மனோ பலம் கிடைக்கும். இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டாகும்.

பாகப்பிரிவினை சம்பந்தப் பட்ட பிரச்னைக்குச் சுமூகத் தீர்வு காண்பது நல்லது. வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். என்றாலும் மறைமுக எதிர்ப்புகள், வீண் பழி, முன்கோபம் ஆகியன வந்து செல்லும். மிகுந்த கவனம் தேவை.

உங்கள் ஜீவனாதிபதியும் லாபாதிபதியுமான சனிபகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் 11.5.2021 முதல் 16.1.2022 வரை கேது செல்கிறார்.

இந்தக் காலத்தில் வேலைச்சுமை, குடும்பத்தில் சச்சரவு, பணப் பற்றாக்குறை ஆகியன உண்டாகும். அநாவசியமாக யாருக்காகவும் உறுதிமொழி தர வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

கேது பகவான், பாக்கியாதிபதியும் விரையாதி பதியுமான குருபகவானின் விசாகம் நட்சத் திரத்தில் 17.1.2022 முதல் 21.3.2022 வரை செல்கிறார். அதன் பலனாக உங்களின் தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.

தாழ்வு மனப்பான்மை நீங்கி, மனத்தில் நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வருமானத்தை உயர்த்தப் புதுப் புது முயற்சிகளை மேற்

கொள்வீர்கள். தந்தையாரின் ஆரோக்கியம் சீராகும். அவருடனான மோதல்கள் விலகும்.

பிதுர்வழிச் சொத்து கைக்கு வரும். சித்தர் பீடங்கள், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யோகா, தியானம் இவற்றுள் ஈடுபாடு அதிகரிக்கும்.

வியாபாரத்தில், நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பற்று- வரவு இல்லாவிட்டாலும் ஓரளவு லாபம் உண்டு. வேலையாள்களை அனுசரித்துச் செல்லவும். அவர்களிடம் அதிகம் கண்டிப்பு காட்டாதீர்கள்.

உத்தியோகத்தில், உரிய நேரத்தில் வீட்டுக்குச் செல்ல முடியாதபடி அதிக வேலைச்சுமை உண்டு. எனினும் உழைப்புக்கேற்ற பலனும் கிடைக்கும்.

பரிகாரம்:

புதுக்கோட்டைக்கு அருகே, திருமயத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது பேரையூர். ஒருமுறை இவ்வூருக்குச் சென்று அங்கே அருள் பாலிக்கும் ஸ்ரீநாகநாதரையும், ஸ்ரீபிரகதாம் பாளையும் வணங்கி வாருங்கள். ஏழைகளின் திருமணத்துக்கு உதவுங்கள்; வாழ்க்கை இனிக்கும்.

Leave a Reply

%d bloggers like this: