Archives by date

You are browsing the site archives by date.

தொடர்ந்து 8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள் !!

பொதுவாக நடைப்பயிற்சி செய்வதனால் உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும். அதிலும் 8 வடிவ நடைபயிற்சி உடலுக்கு பலவகையான நன்மைகளை தரும். 8 வடிவ நடைப்பயிற்சி காலையில் அல்லது மாலையில் செய்வது நல்லது.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மீனம்

மீனம் அடிப்படை உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காதவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை லாப ஸ்தானத்தில் அமர்ந்து நல்ல தீர்வுகளைத் தரப்போகிறார். கடினமான காரியங்களையும் எளிதில் முடிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். கடனில் பெரும் பகுதியை அடைப்பீர்கள்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கும்பம்

கும்பம் கடினமான உழைப்பாளி நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 12-ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால், வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுவீர்கள். சிலர் பழைய வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வீட்டுப் ப்ளான் அப்ரூவலாகும். வங்கி லோன் கிடைக்கும்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மகரம்

மகரம் அனைவரையும் சமமாக மதிக்கும் குணம் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ஜன்ம குருவாக அமர்வதால் பொறுப்புகளும், வேலைச் சுமையும் அதிகரிக்கும். ஒரு தேடலும், நிம்மதியற்றப் போக்கும் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களை எதிர்ப்பீர்கள். அவசரப் பட்டு வாக்குறுதி தரவேண்டாம். வெளி உணவு களைத் தவிர்ப்பது நல்லது.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -தனுசு

தனுசு நியாயத்துக்காகப் போராடும் குணம் கொண்டவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசியை விட்டு விலகி, தன வீடான 2-ம் வீட்டில் அமர்வதால், எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -விருச்சிகம்

விருச்சிகம் விரிவான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும் கொண்டவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய வேண்டும். வேலைகளில் அலைச்சல் இருக்கும். இளைய சகோதர வகையில் பிணக்குகள் வரும். வீண் கௌரவத்திற்காகச் சேமிப்பைக் கரைக்க வேண்டாம். யாருக்காகவும் ஜாமீன் அளிக்கவேண்டாம்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -துலாம்

துலாம் பழைய வாழ்வை என்றும் மறவாதவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கன்னி

கன்னி எல்லோரிடமும் சமமாகப் பழகும் அன்பர் நீங்கள். குரு 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 5 – ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணிக்க வைப்பார். வாழ்வில் அதிரடி மாற்றங்கள் உண்டாகும். வசதி, வாய்ப்புகள் உயரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். மகளின் திருமணம் கோலாகலமாக நடக்கும்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -சிம்மம்

சிம்மம் போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் சலனப்படாதவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 6-ம் வீட்டில் மறைகிறார். சகட குருவாச்சே சங்கடங்களைத் தருவாரே என்று கலங்காதீர்கள். ஒரளவு நல்லதே நடக்கும். வாழ்வின் சூட்சுமங் களைக் கற்றுக்கொள்வீர்கள். மற்றவர்களை நம்பாமல் சுய முயற்சியால் முன்னேற பாருங்கள்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -கடகம்

கடகம் தொலைதூரச் சிந்தனையுடையவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை வரை ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களை நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடன் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மிதுனம்

மிதுனம் எதிலும் புதுமையைப் புகுத்துவதில் வல்லவர் நீங்கள். குருபகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால் அலைச்சலுடன் ஆதாயத்தைத் தருவார். வருமானம் குறையாது. எதையும் சமாளிக்கும் சாமர்த்தியத்தையும் தருவார்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -ரிஷபம்

ரிஷபம் பெருந்தன்மையும், சகிப்புத் தன்மையும் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9-ம் வீட்டில் நுழைவ தால், புது வியூகங்களை அமைத்து முன்னேறத் தொடங்குவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும்.… Read More

குருப்பெயர்ச்சி ராசிபலன்கள்-15.11.2020 முதல் 13.11.2021 -மேஷம்

மேஷம் வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அறிந்தவர் நீங்கள். உங்கள் ராசிக்குக் குரு பகவான் 15.11.2020 முதல் 13.11.2021 வரை 10-ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார். `பத்தாம் இடமென்றால் பதவியை பறித்து விடுவாரே’ என்ற பயம் வேண்டாம்!… Read More

கட்டாயக் கூட்டணி… கதறும் எடப்பாடி! – இலையை நசுக்கும் தாமரை-விகடன்

சமீபத்தில் சென்னை வந்திருந்த பா.ஜ.க பொதுச்செயலாளர் சி.டி.ரவி, “தமிழகத்தில் பா.ஜ.க-வை வலிமையான கட்சியாக மாற்றி, 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதே எங்கள் இலக்கு” என்றார். இது வழக்கமாக எல்லா கட்சிகளும் விடும் ‘உதார்’தானே என்று சாதாரணமாகக் கடந்து சென்றுவிட முடியாது. ஏனெனில், இந்தியாவில் வடகிழக்கு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அந்தக் கட்சி கடந்துவந்த ‘ஹைஜாக்’ வரலாறு அப்படி. இப்போதும்கூட தமிழகத்தின் கிராமப் பகுதிகளில் அந்தக் கட்சிக்கு ஆட்கள் இருக்கிறார்களோ, இல்லையோ… பெரும்பாலான கிராமங்களில் பா.ஜ.க கொடி ஏற்றப்பட்டிருக்கிறது.… Read More

ஐந்து எம்.பி-க்களுக்கு குறி! – தி.மு.க-வை நெருக்கும் ‘டெல்லி’

“ஆக… வரும் சட்டமன்றத் தேர்தலில் பணம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று சொல்லியிருக்கிறாரே!” – என்றபடி என்ட்ரி கொடுத்தார் கழுகார். குழிப்பணியாரங்களைத் தட்டில் நிரப்பிவிட்டு, “ஸ்டாலினைத்தானே சொல்கிறீர்கள்…” என்றோம். பதிலுக்கு, “ஆக… ஆகா… சரியாகச் சொல்லிவிட்டீர்களே!” என்று கலாய்த்துவிட்டு, பணியாரங்களைச் சுவைத்தபடியே செய்திகளைத் தொடர்ந்தார் கழுகார். “கொங்கு மண்டல தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் அக்டோபர் 21-ம் தேதி அறிவாலயத்தில் நடந்தது.… Read More

தக்ஷிணாமூர்த்தியும் குருபகவான் இருவரும் ஒருவரா? இல்லை வேறா? அதற்கான பதில் இதோ?

தட்சிணா மூர்த்தி வேறு. குருபகவான் வேறு. இருவரும் ஒருவர் அல்ல! ஆனால் நிறைய பேர் இருவரும் ஒருவர்தான் என்று நினைத்து வழிப்பட்டு பரிகாரங்களை செய்து வருகிறார்கள். நிஜத்தில் தட்சிணா மூர்த்தி மற்றும் குரு பகவானுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.… Read More

2 நிமிடம் போதும்! ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்! எப்படி?

இந்தியாவில் அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கார்டு ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகின்றது. இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் எங்கே போனாலும் ஆதார் கார்டு தான் முதலில் கேட்கிறார்கள். அதனால் உங்கள் மொபைலில் மின்னணு ஆதார் அட்டையை டவுன்லோட் செய்வது எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.… Read More

பித்தத்தை போக்க அற்புதமான 11 நாட்டு வைத்திய குறிப்புகள்! நலமுடன் வாழ இதனை பின்பற்றுங்கள்!

ஒவ்வொருவரும் வாழ்வில் பல பிரச்சனைகளை தினந்தோறும் சந்தித்து வருகிறோம். ஆனால் எதற்கு எடுத்தாலும் மருத்துவரை அணுக ஓடுகிறோம். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் மருத்துவரை சென்று பார்த்தர்களா? இல்லை… Read More