உங்க உடம்புல சதையில்லாம இருக்க,இந்த விதை போதும்.

நம் அனைவருக்குமே உடல் எடை கூடாமல் வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது . உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடையை குறைக்க பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அவர்களுக்கு சியா விதை ஒரு நல்ல நிவாரணமாக இருக்கும்.சியா விதையில் கொழுப்பை குறைக்கும் சக்தி உள்ளது. இதனால் உடல் பருமனை கட்டுப்படுத்தி நம்மை ஆரோக்கியமாக வைத்து கொள்ள உதவும்.

ஒமேகா-3:

நம்முடைய உடலுக்கு ஒமேகா-3 மிகவும் முக்கியமாகும். அத்தகைய ஒமேகா-3 அதிகமாக சால்மீனில் தான் இருக்கும் என நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் இந்த சால் மீனில் உள்ள ஒமேகா-3 அளவை விட சியா விதையில் 8 மடங்கு ஒமேகா-3 சத்து உள்ளது. எனவே இந்த விதையை உணவில் சேர்த்து கொண்டு ஆற்றலை பெற வேண்டும்.

கால்சியம்:

நம்முடைய உடலில் ஏற்படும் மூட்டுவலி, மற்றும் இரும்புசத்து குறைபாட்டிற்கு கால்சியம் அளவு குறைவாக இருப்பதே ஆகும். அத்தகைய கால்சியத்தின் அளவு பாலில் அதிகமாக இருக்கும். ஆனால் பாலில் இருக்கும் கால்சியத்தின் அளவை விட 6 மடங்கு அதிகமாக இந்த சியா விதையில் உள்ளது மேலும் இதில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது. எனவே நம்முடைய எலும்புகளுக்கு மிகவும் நல்லது. கீரையில் இருக்கும் இரும்பு சத்துக்களை விட 3 மடங்கு அதிகமாக இந்த சியா விதையில் உள்ளது.

கூந்தலுக்கு நல்லது:

இந்த சியா விதையில் அதிக அளவு புரதமும்,கெராட்டினும் உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பீன்ஸை விட 20 மடங்கு புரதம் இதில் உள்ளது. இதில் உள்ள கெராட்டின் கூந்தலை நீளமாகவும் அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.

Leave a Reply

%d bloggers like this: