Archives by date

You are browsing the site archives by date.

கொரோனா காலம்… அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்..! சமாளிக்க உதவும் ஹெல்த் பாலிசி டாப்அப்!

நம்மில் பலரும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருக்கிறோம். ஆனால், நமக்கும் நம் குடும்பத்தினருக்கும் தேவையான கவரேஜ் இருக்கிறதா? பல நேரங்களில் இருப்பதில்லை. இதனால், கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், ஹெல்த் பாலிசி இருந்தும் கையைவிட்டு பணத்தைச் செலவு செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதைச் சமாளிக்க இன்னொரு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க முடியாது. ஏனெனில், பிரீமியம் செலவு அதிகரிக்கும். அதனால், டாப் அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதுதான் சரியான… Read More

‘முருகன் எனும் மாமருந்து!’

மே 25 – வைகாசி விசாகம் முழு நிலவோடு பொலியும் வைகாசி விசாகம் ஆறுமுகனின் அவதார நன்னாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. `விசாகம் ஸர்வ பூதானாம் ஸ்வாமினம் கிருத்திகா சுதம்’ என்று வடமொழியும் `இன்சொல் விசாகா க்ருபாகர’ என்று தென்மொழியும் கந்தனைப் போற்றிப் புகழ்கின்றன.கந்தனின் கதையும் அவன் குறித்த வழிபாடுகளும் நம் வாழ்வுக்கு வரமாகும்; அவனைப் பாடும் துதிப்பாடல்களோ நம் உள்ளப் பிணியையும் உடற்பிணியையும் போக்கும் மாமருந்தாகும். `ஆறு தாங்கிய ஜோதியான முருகன் ஆறெழுத்து மந்திர மூர்த்தி, ஆறுதலைக் கொடுக்கும்… Read More

தேர்தல் தோல்வி… அண்ணனிடம் பேச மறுக்கும் முன்னாள் அமைச்சர்!

விஷ்ஷ்க்க்’ என்ற சப்தம்… சிறகுகள் படபடக்க வந்தமர்ந்தார் கழுகார். எலுமிச்சை கலந்த இளநீர் சர்பத்தை அவருக்கு நீட்டிவிட்டு, “புதுச்சேரியில் பா.ஜ.க-வைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாக மத்திய அரசு நியமித்திருக்கிறது. கூட்டணியிலுள்ள என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க கட்சிகள் கொந்தளிப்பதை கவனித்தீரா?” என்றோம். சர்பத்தைப் பருகியபடி, நமது நிருபர் அனுப்பியிருந்த புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான கட்டுரையில் பார்வையை ஓடவிட்ட கழுகார், “கவனித்தேன். உமது நிருபர்தான் தெளிவாகக் கூறியிருக்கிறாரே… அதைவிடப் பெரிய சர்ச்சை ஒன்று புதுச்சேரி பா.ஜ.க-வில் வெடித்திருக்கிறது”… Read More

ஹாய்! இன்னைக்கு எவ்வளவு தண்ணீர் குடிச்சீங்க?

வெயில் காலம் வந்துவிட்டது, இந்நேரத்தில் ஒழுங்காக தண்ணீர் பருகாமல் போனால் அது நம் சிறுநீரகத்தை வெகுவாக பாதிக்கும் என்பது நாம் அறிந்ததே. இதன் நீண்ட கால விளைவுதான் கிட்னியில் தோன்றும் கற்கள். ஆண்கள், பெண்கள், ஏன் ஓடியாடித் திரியும் குழந்தைகளுக்குக் கூட இப்போதெல்லாம் சிறுநீரகக் கல் பாதிப்பு ஏற்படுகிறது.… Read More

கொரோனா தடுப்பூசி; 10 லட்சம் பேரில் 0.61% மட்டுமே பக்கவிளைவு: ஆய்வுக் குழு

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுவதாக தேசிய ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் 18 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டால் பக்கவிளைவுகள் மற்றும் இறப்பு நேரிடுவதாக… Read More