Archives by date

You are browsing the site archives by date.

முட்டிமோதும் முன்னாள் முதல்வர்கள்!

அ.தி.மு.க-வுக்குள் சத்தமில்லாமல் ஒரு நிலநடுக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமியிடம் பறிகொடுத்த ஓ.பன்னீர்செல்வம் ‘புரட்சிப் புயலாகிக் கிளம்புவார்’ என அவரின் ஆதரவாளர்கள் வழக்கம்போல பெரிதும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எந்த ரியாக்‌ஷனையும் காட்டாமல், மே 12-ம் தேதி எடப்பாடியின் பிறந்த நாளன்று அவரது இல்லத்துக்கே சென்று நேரில் வாழ்த்தினார் பன்னீர். இதை எதிர்பார்க்காத பன்னீரின் ஆதரவாளர்கள், ‘அவர் மொத்தமாகப் பதுங்கிவிட்டார்’ எனச் சோர்வடைந்து போனார்கள். ஆனால், மீண்டும் தான் பதுங்கியதே பாயத்தான் எனக் காட்ட… Read More

ஆபரேஷன் ஸ்பைடர்! – பீதியில் முன்னாள் அமைச்சர்கள்…

விஷ்ஷ்க்க்’ என்ற சப்தம்… சிறகுகள் படபடக்க வந்தமர்ந்த கழுகாரிடம், “அ.தி.மு.க-வில் ரகளை களைகட்டுகிறதே” என்றபடி இளநீரை நீட்டினோம். இளநீரை பருகியபடி கவர் ஸ்டோரியில் பார்வையை ஓடவிட்ட கழுகார், “தொண்டர்களுடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியானதில் எடப்பாடி தரப்பு கடும் அப்செட் என்கிறார்கள். அதுமட்டுமல்ல… சசிகலா விரைவில் தன் ஆதரவாளர்களைச் சந்திக்க முடிவெடுத்திருப்பதாகவும் தகவல். அதன்பிறகு, அ.தி.மு.க-வில் குழப்பங்கள் மேலும் அதிகரிக்கலாம்” என்றபடி செய்திகளுக்குள் நுழைந்தார்.… Read More

ஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ!’ – எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

`சசிக,லா அதிமுக தொண்டர்கள் உடன் பேசியதாக சொல்கிறீர்கள். ஆனால் அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. எந்த ஆதாரமும் இல்லை. நானும் அதிமுக-வில் தான் இருக்கிறேன். திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக இப்படியான ஆடியோக்கள் வெளியிடுகிறார்கள்’ – எடப்பாடி பழனிசாமி… Read More

பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும் காரணிகள்!

மியுக்கர் மைகோசிஸ்’ என்பது பூஞ்சை காளான் வகை. பொதுவாக பூஞ்சை எல்லா இடத்திலும் இருக்கும். குறிப்பாக கெட்டுப் போன உணவுகளில் வளரும்; காற்றிலும் இருக்கும்.. அழுகிய உணவு பொருட்கள் மேல் வெள்ளையாக படியும்.யாருக்கு வரும்?… Read More