கடுகு உடல் எடையை குறைக்க உதவுமா..? நன்மைகளும்.. பயன்படுத்தும் முறைகளும்…

தற்போது நிலவி வரும் கிளைமேட் சேஞ்ச் சூழலில் எடை குறைவது சற்று கடினமாக இருக்கும். ஏனென்றால் வானிலை மாற்றத்தின் போது அதிக பசி உணர்வு ஏற்படுகிறது மற்றும் சோம்பல் காரணமாக தினசரி தவறாமல் உடற்பயிற்சி செய்வதும் சவாலானது
ஆரோக்கியமான உணவு என்றால் சாஃப்ட்டான மற்றும் வேக வைத்த உணவு என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல.

ஆரோக்கியமான உணவு கூட சுவையாக இருக்கும், நீங்கள் சரியான பொருட்களை உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டும். நம் இந்திய மசாலா பொருட்களில் பல வகையான மருத்துவ குணங்கள் மற்றும் நன்மைகள் நிறைந்து உள்ளன. அந்த வகையில் கடுகு விதைகள் அதாவது கடுகு நம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது. எடையை குறைக்க விரும்பும் ஒருவர் தினசரி தனது டயட்டில் குறைந்தபட்சம் அரை டீஸ்பூன் அளவு கடுகை சேர்த்து வந்தால் சிறந்த பலனை பெறலாம்.

கறிகளில் கடுகு பேஸ்ட் சேர்ப்பது அல்லது காய்கறிகள் அல்லது பருப்புகளை வறுப்பது அல்லது உங்கள் சாலட்டின் மேல் சிறிது கடுகு விதைகளை தூவுவது என இந்த சிறிய விதைகளை உங்கள் உணவில் சேர்க்க பல வழிகள் உள்ளன.

உங்கள் டயட்டில் கடுகுகளை சேர்ப்பதால் அதன் ஊட்டச்சத்து அளவை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் உடல் உறுப்புகள் மிகவும் திறமையாக வேலை செய்ய உதவுகிறது. எனவே, உடல் எடையை குறைக்க, உடற்பயிற்சியுடன் சேர்த்து, கடுகு சேர்க்கப்பட்ட ஆரோக்கியமான உணவை உண்ண முக்கியத்துவம் கொடுக்கலாம். கடுகின் விதைகள் மட்டுமல்ல கடுகு செடியின் மற்ற பகுதிகளும் உண்ணக்கூடியவை மற்றும் அதிக சத்தானவை.

எடையை குறைக்க கடுகு எப்படி உதவும்.?

சில ஆராய்ச்சிகளின்படி, கடுகு விதைகளின் நார்ச்சத்து ஜீரணிக்க கடினமாக உள்ளது. இதனால் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது மற்றும் செயல்பாட்டில் அதிக கலோரிகளை எரிக்கிறது. நார்ச்சத்து உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும் மற்றும் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும். கடுகில் காணப்படும் பல ஊட்டச்சத்துக்கள் எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல், நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடைய அபாயங்களை குறைக்கவும் உதவும்.

கடுகில் இருக்கும் இரும்பு, கால்சியம், செலினியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுக்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பின்னர் எடை குறைக்கவும் உதவுகின்றன. மஞ்சள் மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும் இந்த சிறிய விதைகள் குளுக்கோசினோலேட்டுகளின் வளமான மூலமாக இருக்கின்றன. உடல் பருமன், எடை அதிகரிப்பு மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு குவிதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆக்ஸிஜனேற்ற சேதத்தை எதிர்த்துப் போராடுவதன் மூலம் கடுகுகள் நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்க உதவுகின்றன.

உடம்ப குறைக்கும் ஐடியா இருந்தா முதலில் இதை கவனிங்க!

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பாலிடெக்னிக் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஆய்வின்படி, கடுகு விதைகளை 1 டேபிள் ஸ்பூன் சாப்பிடுவது, அடுத்த 3-4 மணி நேரத்தில் உடலின் வளர்சிதை மாற்றத்தை 25 சதவீதம் வரை அதிகரிக்க செய்யும் என்பது கண்டறியப்பட்டு உள்ளது.

டயட்டில்..

கடுகு பேஸ்ட்டை சாலட் டிரஸ்ஸிங்காகப் பயன்படுத்தலாம் அல்லது வெங்காய கறிக்கு பதில் கடுகு கறி சேர்க்கலாம். அரைத்த கடுகு மற்றொரு வழி. சாலட் அல்லது காய்கறிகளில் சேர்க்கலாம். கடுகு எண்ணெயில் சமைப்பது ஆரோக்கியத்திற்கும் எடை இழப்புக்கும் நன்மை பயக்கும். கடுகு விதைகளை விட அதன் பச்சை இலைகளில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

கவனம்..

பல நன்மைகளை தருகிறது என்பதற்காக டயட்டில் கடுகை அதிகம் சேர்த்து கொள்வது பாதுகாப்பானது அல்ல. தினசரி போதுமான அல்லது குறைந்த அளவில் எடுத்துக் கொண்டால் அவை பாதுகாப்பானவை. கடுகுகளை அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். நீரிழிவு நோயாளிகள் கடுகு விதைகளை குறைந்த அளவில் உட்கொள்ள வேண்டும். கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் கூட கடுகு நுகர்வில் கவனமாக இருக்க வேண்டும்,

%d bloggers like this: