சைக்கிளில் ஏன் குறுக்கே பார் வைத்து இருகிறார்கள் தெரியுமா.?

1980 மற்றும் 90களின் காலகட்டத்தில் இந்தியாவில் சைக்கிள் பயன்படுத்தும் மக்கள் மட்டுமே பெரும்பாலும் இருந்து வந்தனர்.

ஆனாலும் பெரும்பாலான இடங்களில் இன்றளவும் சைக்கிளை பயன்படுத்திய வணிகம் செய்து வருகின்றனர். பார் வைத்த சைக்கிள் தான் பெரும்பாலும் உபயோகம்

செய்வார்கள். இதில், பெண்கள் உபயோகம் செய்யும் சைக்கிளில் பார் கம்பிகள் இருப்பது இல்லை. ஆனால், பெருமளவில் ஆண்கள் உபயோகம் செய்யும் சைக்கிள்களில் பார் கம்பிகள் இருக்கும். சைக்கிளில் இதை ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம் அதை பற்றி பார்க்கலாம்.

ஆண்கள் உபயோகம் செய்யும் சைக்கிள் பெரும்பாலும் இரண்டு பேர் அமர்ந்து செல்லும் வகையில் இருக்கும். ஒரு சில சமியத்தில் பார் மீது அமர்ந்து கொண்டு 4 பேர் வரை பயணம் செய்யல்லாம். எனவே இது போன்று பெரிய சைக்கிள்களில் மட்டுமே அதிக அளவிலான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். ஆனால் சிறிய ரக சைக்கிளில் கேரியரில் பெரிய அளவிலான பொதிகளை ஏற்றி பாரத்தை அதிகரித்தால், சைக்கிள் தடுமாற தொடங்கிவிடும். ஒரு சமயத்திற்கு மேல் பாரம் தாங்காமல் Handel பார் அருகேயுள்ள கம்பி உடைந்துவிடும். பெரிய சைக்கிள் பாரத்தை ஏற்றிச்செல்ல உதவி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டது. அதனால் அதன் பின்னால் உள்ள கேரியரில் பாரத்தை ஏற்றினாலும், சைக்கிளை ஓட்டும் போது அது தடுமாற்றத்தை கொடுக்காது, அதிக பாரமாக இருந்தாலும், அதனால் ஏற்படும் அழுத்தத்தை கம்பி சமமான அளவு பிரித்துக்கொள்வதால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சைக்கிள் கம்பி உடையும் அபாயம் குறைவாக இருக்கும். எனவே தான் வணிகத்திற்கு பெரும்பலாலும் பார் வைத்த சைக்கிள் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் சமிப காலமாக மீண்டும் சைக்கிள் மீது இளம் தலைமுறையின் கவனம் திரும்பியிருக்கிறது. உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறை, உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக உடல், நோய்களின் கூடாரமாக மாறிவருகிறது. இது ஒரு பக்கமிருக்க நாட்டில் பெட்ரோல் டீசல் விலையும் அதிகரித்து வருவதன் காரணமாக மக்கள் சைக்கிளில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

%d bloggers like this: