தப்பி தவறி கூட மெக்கானிக்கிடம் இந்த விஷயங்களை சொல்லீராதீங்க..!

கார் மெக்கானிக்கிடம் என்னென்ன விஷயங்களை எல்லாம் சொல்லக்கூடாது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார்களில் எப்போது வேண்டுமானாலும் பழுது ஏற்படலாம் என்பது இந்த உலகில் உள்ள ஒவ்வொரு டிரைவருக்கும் தெரியும். கார்களும் கூட மனிதர்களை போன்றவைதான். சில சமயங்களில் நமக்கு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போகிறது. ஒரு கப் சூடு தண்ணீரோ அல்லது ஒரு சில மணி நேர ஓய்வோ நம் உடல் நிலையை சரி செய்து விடும்.

ஆனால் சில சமயங்களில் டாக்டரை பார்த்தாக வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படும். கார்களுக்கும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான். கார்கள் பற்றி அதிக அறிவு உடையவர்களுக்கு கூட சில சமயங்களில்

மெக்கானிக்கை நாட வேண்டிய நிலைமைதான் இருக்கிறது. ஆனால் மெக்கானிக்குகள் என்றாலே தவறானவர்கள் என்ற பொது புத்தி நம்மிடம் புரையோடி போய் உள்ளது.

மெக்கானிக்கை நாட வேண்டிய நிலைமைதான் இருக்கிறது. ஆனால் மெக்கானிக்குகள் என்றாலே தவறானவர்கள் என்ற பொது புத்தி நம்மிடம் புரையோடி போய் உள்ளது.
எனவே அவர்களிடம் பேசும் போதெல்லாம் சந்தேகத்துடன் பேசுவதையே பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒரு சில மெக்கானிக்குகள் தவறானவர்கள் என்பதற்காக அனைத்து மெக்கானிக்குகளையும் சந்தேகப்பட்டு விட முடியாது. அனைத்து துறைகளிலும்தான் தவறானவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
மெக்கானிக்காக இருப்பது உண்மையில் எளிதாக வேலை கிடையாது. சில சமயங்களில் வேண்டுமானால் மெக்கானிக்குகளின் பணி உங்களுக்கு எளிதாக தோன்றலாம். ஆனால் பெரும்பாலான சமயங்களில் உங்கள் காரை சரி செய்ய அவர்கள் அதிகம் மெனக்கெட வேண்டும். எனவே வாடிக்கையாளர்கள் அவர்களை சரியாக புரிந்து கொண்டால், அவர்கள் தங்கள் முழு திறமையையும் வெளிப்படுத்தி வேலையை சரியாக முடிப்பார்கள்.
ஒரு சில பழுதுகளை சரி செய்வதற்கு அதிக காலம் ஆகும் என்பதை வாடிக்கையாளர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். குறிப்பாக காரின் பாகங்களை ஆர்டர் செய்திருக்கும் சமயங்களில், பழுதை நீக்குவதற்கு நிச்சயமாக அதிக காலம் தேவைப்படும். ஆனால் உண்மையில் நம்மில் பலரும் அப்படி நடந்து கொள்வது கிடையாது.
ஒரு சில வாடிக்கையாளர்கள் தங்கள் கேள்விகளால் மெக்கானிக்குகளை காயப்படுத்துகின்றனர். நீங்கள் அவர்களாக இருந்து பார்த்தால் மட்டுமே அவர்களின் கஷ்டம் புரியும். ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை. எனினும் மெக்கானிக்குகளிடம் ஒரு சில விஷயங்களை சொல்வதை தவிர்ப்பது உங்களுக்கும், அவர்களுக்கும் நன்மை பயக்கும். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீங்க சொல்ற பிரச்னை இல்ல… என் மாமா வேற ஒரு பிரச்னைனு சொன்னாரே…”

இதுபோன்று பேசி மெக்கானிக்குகளின் மனதை காயப்படுத்துபவர்கள் பேசாமல் அவர்கள் மாமாவையே காரை சரி செய்து தரும்படி கூறி விடலாம். உங்கள் காரில் என்ன பிரச்னை? என்பதை உங்கள் மாமா சரியாக கண்டுபிடித்திருப்பதற்கான வாய்ப்புகள் மிக மிக முறைவு. கார்களை பற்றிய அறிவுடன், காரை முழுமையாக பரிசோதனை செய்திருந்தால் மட்டுமே என்ன பிரச்னை என்பதை சரியாக கூற முடியும்.

எனவே உங்கள் மாமா முதலில் தனது மனதில் பட்ட விஷயத்தை கூறியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நம்மில் பலரும் இந்த தவறை செய்கிறோம். நம்மை சுற்றியிருப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த ஏதேதோ விஷயங்களை சொல்லி நம்மை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றனர். எடுத்த எடுப்பிலேயே மெக்கானிக்குகளிடம் இப்படி பேசுவது சரியாக இருக்காது.

என் ஃபிரண்ட் கார்ல பொருள் காணாம போயிருச்சு… ”

மெக்கானிக்குகளின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஏராளமான விஷயங்களை பேசுவதை நம்மில் பலரும் வாடிக்கையாக வைத்துள்ளனர். எனது நண்பனின் காரை வேறு ஒரு மெக்கானிக்கிடம் சர்வீஸ் விட்டு எடுக்கும்போது இது காணாமல் போய் விட்டது, அது காணாமல் போய் விட்டது என இன்னொரு மெக்கானிக்கிடம் குற்றம் சாட்டுவதை போல், அவர்களின் நடத்தையை சந்தேகப்பட்டு பேசாதீர்கள்.

நீங்க தப்பா பண்றீங்கன்னு நெனைக்கறேன்… உண்மையான பிரச்னை என்னனா…”

இப்படி பேசுபவர்களால் மெக்கானிக்குகள் நிச்சயமாக விரக்தியடைவார்கள். காரில் என்ன பிரச்னை? என்பதை சரியாக கூறி தங்களை ஸ்மார்ட்டாக காட்டி கொள்ள சிலர் நினைக்கின்றனர். ஆனால் ஒரு சில சமயங்களில் மட்டுமே என்ன பிரச்னை? என்பதை அவர்களால் துல்லியமாக கூற முடியும். மற்ற பெரும்பாலான சமயங்களில் அவர்கள் நடிக்கிறார்கள் என்பதுதான் யதார்த்தம்.

உதாரணத்திற்கு புகையானது பல்வேறு பிரச்னைகளுக்கான அறிகுறியாக இருக்கும். ஆனால் ஒரு சில வாடிக்கையாளர்கள் புகையை காரணம் காட்டி இதுதான் பிரச்னை என அடித்து கூறுவார்கள். அது சரியானது கிடையாது. வேறு பிரச்னையாக கூட இருக்கலாம். இப்படிப்பட்ட பேச்சு மெக்கானிக்குகளுக்கு விரக்தியை ஏற்படுத்தும்.
தங்களுக்குதான் எல்லாம் தெரியும் என்ற மதமதப்பு இந்த விரக்திக்கு காரணமாக இருக்காது. வாடிக்கையாளர்களின் அறியாமையால்தான் இந்த விரக்தி ஏற்படும். முதலில் அவர்களின் வேலை என்ன? என்பதை புரிந்து கொள்ளுங்கள். காரை அவர்கள் முதலில் ஆய்வு செய்ய வேண்டும். என்னென்ன பிரச்னைகள் என்பதை குறிக்க வேண்டும். அதை உங்களுக்கு காட்ட வேண்டும்.
இவையெல்லாம் கார் உரிமையாளர்களின் வேலை கிடையாது. ஆனால் எந்த பிரச்னையால் நீங்கள் சிரமப்படுகிறீர்கள்? என்பதை அவர்களுக்கு தெரிவிக்கலாம். அதற்காக தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில் பேச கூடாது. ஏனெனில் தொழில்முறையில் பார்த்தால் கார்களை பற்றிய அறிவு நம்மை காட்டிலும் அவர்களுக்கு அதிகம்.

கார் உண்மையிலேயே சரி ஆயிருச்சா? கண்டிப்பா வேற பிரச்னை இருக்குமே…”

உங்கள் காரில் என்ன பிரச்னை என்பதை கண்டறிவதற்கு மெக்கானிக்குகள் ஒரு சில வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அவர்கள் உங்களுக்கு சேவை செய்கிறார்கள். எனவே அவர்கள் சரியாக செயல்பட வேண்டும். உங்கள் காரில் பிரச்னை சரி செய்யப்பட்டு விட்டது என அவர்கள் கூறினால், கார் தற்போது நன்றாக உள்ளது என்றுதான் அர்த்தம்.

எனவே அதிருப்தியடையாதீர்கள். ஒரு சிலரிடம் உண்மையிலேயே இந்த பழக்கம் இருக்கிறது. கார் சரியாகி விட்டது என மெக்கானிக்குகள் கூறினாலும், ஒரு சிலர் திருப்தியடைவதில்லை. காரில் இன்னமும் ஏதோ பிரச்னை இருக்கிறது என்ற சந்தேகத்துடனே மெக்கானிக்குகளை கேள்விகளால் துளைத்து எடுப்பதை அவர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
உங்களுக்கு சந்தேகம் என்றால், இன்னொரு மெக்கானிக்கிடம் கொண்டு சென்று காரை காட்டி விடுங்கள். அதை விடுத்து விட்டு அறைகுறை அறிவுடன், தொழில்முறையில் சிறந்த மெக்கானிக்குகளை துளைத்து எடுப்பது சரியல்ல. இப்படிப்பட்ட பேச்சுக்கள் அவர்கள் மனதை காயப்படுத்தும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

%d bloggers like this: