தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் அற்புத மூலிகை நாயுருவி !!

நாயுருவியின் சாறு புண்களின் காயங்களைக் குணப்படுத்த உதவுகிறது. இந்த தாவரத்தினை காயங்களைக் குணப்படுத்த நேரடியாகத் தோலில் தடவலாம்.

வெட்டுகாயம் குணமாக நாயுருவி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, வெட்டுக் காயத்தின் மீது பூசி வர விரைவில் ஆறிவிடும்.


நாயுருவி இலைகளின் சாற்றை உட்கொள்வதன் மூலம் சிறுநீரக கற்களைக் கரைக்க உதவுகிறது. நாயுருவி உடலில் சர்க்கரை அளவைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது கணையநீர் அதிகம் சுரக்க உதவுகிறது.

ஆயுர்வேதத்தில், நாயுருவி வேரின் பசை தோல் வெடிப்பு மற்றும் அரிப்புக்குச் சிகிச்சை தர பயன்படுகிறது. தோல் பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்க இந்த நாயுருவி இலையின் வேரைப் பசையாகச் செய்து சருமத்தில் பயன்படுத்தி வந்தால் ஒவ்வாமை தோல் தடிப்புப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இந்த நாயுருவி இரத்தத்தில் கெட்ட கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைட்களைக் குறைக்க உதவுகின்றன, மேலும் இது உடலில் உள்ள நல்ல கொழுப்பைப் பராமரிக்க உதவுகிறது.

இந்த மூலிகைச் செடியின் சாற்றை உட்கொள்வது இதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள், நாயுருவி சீராக மாதவிடாய் வெளியேற உதவுகிறது. மேலும், இது நல்ல கருப்பை ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.

இந்த நாயுருவி இலைகளின் சாறு மாதவிடாய் தொந்தரவின் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது.

%d bloggers like this: