வீட்டில் என்னென்ன வாஸ்து செடிகள் வளர்க்கலாம்?

பொதுவாக அனைவருமே வாஸ்து சாஸ்திரப்படி தான் வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பார்கள்.

வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டியாச்சு. அப்புறம் என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? அதற்கு வாஸ்து செடிகள் வளர்க்க வேண்டும். அது குறித்து தான் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

வீட்டில் வளர்க்க வேண்டிய வாஸ்து செடிகள்:

கோழிக்கொண்டை:

வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் வளர்க்க வேண்டிய செடிகளில் இந்த கோழிக்கொண்டை செடியும் ஒன்று.

வீட்டில் பூஜை செய்யும் போது, சுப நிகழ்ச்சிகளுக்கும் தேவைப்படும் மாலைகளுக்கு இந்த கோழிக்கொண்டையிலிருந்து பூக்கும் பூக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த செடி வாடாத நிலை கொண்டது.

வாடாமல்லி:

மலர் வகைகளில் வாடாமல் இருக்கும் குணம் கொண்ட பூ எது என்றால் அது வாடாமல்லி தான். வாஸ்து சாஸ்திரப்படி வாடாமல்லி பூவை வீட்டில் வைத்து வளர்த்து வந்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.

பொன் அரளி:

வீட்டில் உள்ள அனைத்து கஷ்டங்களும் நீங்குவதற்கு மஞ்சள் நிறம் கொண்ட பொன் அரளி செடியினை வளர்த்து வரலாம். மேலும், செல்வ செழிப்பும் அதிகரிக்கும்.

கற்றாழை:

கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

வாஸ்து தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்க வீட்டில் கற்றாழை செடியினை வளர்த்து வரலாம்.

செம்பருத்தி:

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செம்பருத்தி செடியினை வளர்த்து வரலாம். இந்த செடியினை வளர்த்து வந்தால் செவ்வாய் தோஷம் நீங்கும்.

தலைமுடி தொடர்பான பிரச்சனைகளுக்கு செம்பருத்தி சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

மணி பிளாண்ட்:

கடன் தொல்லை நீங்கி, செல்வ வளம் அதிகரிக்க வீட்டில் மணி பிளாண்ட் செடியினை வளர்த்து வரலாம்.

தொட்டாற்சிணுங்கி:

முட்கள் அதிகமாக இருப்பதால், வீட்டில் தொட்டாறுசிணுங்கி வளர்க்க கூடாது என்று நினைக்கிறார்கள்.

உண்மையில், இந்த தொட்டாற்சிணுங்கி செடியினை வளர்த்து வந்தால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

மூங்கில்:

வீட்டில் மூங்கில் செடியினை வளர்த்து வந்தால் உடலுக்கு தேவையான சுத்தமான ஆக்சிஜன் கிடைக்கும்.

செல்வ வளம் அதிகரிக்கவும் மூங்கில் செடியினை வீட்டில் வளர்க்கலாம்.

துளசி:

துளசி செடி மகாலஷ்மியின் அம்சமாக விளங்குகிறது.

துளசி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

துளசி வாஸ்து செடியாகவும் விளங்குகிறது. அனைவரும் தங்களது வீடுகளில் வளர்க்க வேண்டிய செடி தான் துளசி.

சங்கு பூ:

2 வகைகளை கொண்ட சங்கு பூவில் ஒன்று நீல நிறமாகவும், மற்றொன்று வெள்ளை நிறமாகவும் இருக்கும்.

சங்கு பூவானது வீட்டிற்கு மிகவும் அழகு சேர்க்க கூடியது.

நீல நிற சங்கு பூ சிவபெருமானுக்கு உகந்ததாகவும், வெள்ளை நிறம் கொண்ட சங்குப் பூ விநாயகப் பெருமானுக்கு உகந்ததாகவும் கருதப்படுகிறது.

இந்த சங்குப் பூவை வீட்டில் வளர்த்து வரலாம்.

%d bloggers like this: