வைட்டமின் ஈ யால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன..!

வைட்டமின்கள் உடலின் சீரான இயக்கத்திற்கு மிகவும் துணைபுரிகின்றன. குறிப்பாக வைட்டமின் ஈ உடல் உள் உறுப்புகளுக்கும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் பெரிதும் உதவுகிறது.

புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்தை காப்பதற்கு வைட்டமின் ஈ மிகவும் உதவுகிறது. இரண்டு வைட்டமின் இ மாத்திரைகளுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து தூங்க செல்வதற்கு முன்பாக சருமத்தில் தடவி காலையில் கழுவி வர சரும அழகு மேம்படும்.

ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை சூடுபடுத்தி அதனுடன் வைட்டமின் ஈ மாத்திரையை சேர்த்து கலந்து பிரசவத்தின்போது வயிற்றில் உருவாகிய தழும்பில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவி வர வேண்டும். இப்படி செய்தால் தழும்புகள் விரைவில் மறையும்.

ஐந்து வைட்டமின் ஈ மாத்திரைகளுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தடவி வரமுகம் பொலிவு பெறும்.

டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, சிறிதளவு தேன் மற்றும் வைட்டமின் ஈ மாத்திரை நீரில் கலந்துகொள்ளவும். அந்த நீரில் கை, கால்களை 15 நிமிடம் வைத்து அதன்பின் விரும்பிய மாய்ச்சரைசரை தடவி வர சருமம் மென்மையாகும்.

%d bloggers like this: