நாம் முதுகு வலியை சாதாரணமாக எண்ணி புறக்கணிக்க கூடாது, அதற்க்கு தகுந்த சிகிச்சையை வீட்டிலேயே (back pain home remedies) செய்து பார்க்கலாம், அவ்வாறு செய்தும் வலி குறையவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை அணுகி ட்ரீட்மெண்ட் எடுப்பது அவசியம்.
உங்கள் முதுகு வலியை தணிக்க பல்வேறு வகையான இயற்கை வைத்தியங்கள் உள்ளன, இது மருந்து உட்கொள்வதைக் குறைத்து அல்லது உங்கள் மருத்துவ சிகிச்சைக்கு கூடுதல் பலனை அளிக்க உதவும்.
முதுகு வலி உள்ளவர்கள் அடிக்கடி கொள்ளு ரசம் செய்து அருந்தலாம், இதனால் முதுகு வலி குணமாகும். அதேபோல் தினமும் உறங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள், நாட்டு சர்க்கரை மற்றும் சிறிதளவு ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக காய்ச்சி பின் பருகிவரலாம். இதனால் முதுகு வலி நீங்கும்
1. உட்காரும் விதம்
அலுவகத்திலோ வீட்டில் டிவி பார்க்கும் போதோ உட்காரும் நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். உட்காரும் போது நேராகவும், குனியாமல் நிமிர்ந்து அமர்ந்தாலும், வேலை பளுவால் நீங்கள் சற்று சாய்ந்து செளகரியமாக உட்கார நேர்ந்திடும். இந்த சூழ்நிலைகளில் சில நிமிடங்கள் என்பது, சில மணி நேரங்களாக மாற்றி உங்களை சோம்பல் அடைய செய்யும். இதனை மனதில் கொண்டு அவ்வப்போது நீங்கள் அமர்ந்திருக்கும் நிலையை மாற்றி கொண்டு நேராக உட்கார பழகி கொள்ள வேண்டும்.
வேலையின் நடுவே அவ்வப்போது கழுத்தை நேரகவும், வலது இடது புறமாகவும் திருப்பி கண்களை மூடி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம்.
2. உடற்பயிற்சி
கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர் மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காரலாம். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உயர்த்துங்கள்.
3. வைட்டமின்கள்
கால்ஷியம் எலும்பின் வலிமைக்கு முக்கியமானதாகும். உணவில் உள்ள கால்ஷியத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல் நீங்கள் எடுத்துகொள்ளும் கால்சியம் நிறைந்த உணவுகளை உடல் ஏற்று கொள்ளாது. இது தவிற வைட்டமின் ஏ, வைட்டமின், சி, கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய ஆற்றல் பெற்றதாகும்.
4. உணவு முறை
நாம் சாப்பிடும் உணவுகளில் பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க கொள்ள வேண்டும். கொழுப்பு சத்து இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பச்சை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள்.
5. தாதுக்கள்
எலும்பின் வளர்ச்சி மற்றும் வலிமையை மேம்படுத்த கால்ஷியம், மெக்னிஷியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். வைட்டமின்களுடன், தாதுக்களும் நமது உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும்.
6. சூடான குளியல்
முதுகு வலி அதிகமாக இருக்கும் நேரங்களில் சூடான குளியல் மேற்கொள்வது நல்லது. இது முதுவலியை கட்டுபடுத்துவதோடு உடலுக்கு உற்சாகத்தையும் வழங்கும்.
முதுகு வலி நீங்க
7. கடுகு எண்ணெய்
எலும்புகளை வலுவாக்க கடுகு எண்ணெயை உடலில் தேய்த்து சிறிது நேரம் வெயிலில் நடக்க வேண்டும். கடுகு எண்ணெய் எலும்பின் வளர்ச்சிக்கு உகந்ததாகும்.