senthilvayal

தீயநட்பு வேண்டவே வேண்டாம்

தீயநட்பு வேண்டவே வேண்டாம் அறிவாளியின் நட்பு, உறவினர்களைக் காண்பதைப் போன்று இன்பத்தை அளிக்கும். மூடர்களுடைய நட்பு பகைவனுடைய கூட்டுறவைப் போல துன்பம் தரும். நல்ல அறிவும், நல்லொழுக்கமும் உடைய தீமைகளைக் களைந்து நிதானமாக வாழ்கிற நண்பர் ஒருவர் உனக்குக் கிடைப்பாரானால் விருப்பமோடு அவருடன் கலந்து பழகு. எதிரிக்கும் நண்பனாய் இரு. தேவைக்கு உதவி செய். அறிவாளியாயும், ஒத்துப் போகக்கூடியவனாயும், அடக்கமும், நல்லொழுக்கமும் உடைய ஒரு தோழன் கிடைப்பானாகில் எல்லா இடையூறுகளையும் கடந்து அவனுடன் கருத்துடனும் மகிழ்ச்சியுடனும் நட்புக்… Read More

துன்பம் ஏற்படாமலிருக்க வழி-(புத்தரின் பொன்மொழிகள் )

துன்பம் ஏற்படாமலிருக்க வழி மனிதன் தீய எண்ணத்தோடு பேசினாலும், செயல் புரிந்தாலும் வண்டிச்சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வதுபோல துக்கம் அவனைத் தொடர்ந்து செல்லும். துன்பம் இத்தகையது என்று உணர்ந்தால், நாம் துன்பப்படுவோர் அனைவரையும் நம் சகோதரர்களாகப் பாவிப்போம். தன் பகைவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், தன்னை வெறுப்பவனால் ஏற்படும் துன்பத்தைக் காட்டிலும், அடக்கம் இல்லாத மனம் ஒருவனுக்கு அதிகத் துன்பத்தைத் தருகிறது. சம்சார யாத்திரையை முடித்துக் கொண்டவனுக்கு, துக்கத்திலிருந்து நீங்கியவனுக்கு, பற்றுக்களிலிருந்து விடுதலை பெற்றவனுக்கு எல்லா விலங்குகளையும்… Read More

மரணமே வந்தாலும் கலங்காதீர்கள -(புத்தரின் பொன்மொழிகள் )

மரணமே வந்தாலும் கலங்காதீர்கள் * நாம் அனைவரும் உண்மையானவர்களாகத் திகழ்வோமாக. லட்சியத்தை நம்மால் பின்பற்ற முடியவில்லை என்றால், நமது பலவீனத்தை நாம் ஒப்புக் கொள்வோம். லட்சியத்தை நாம் இழிவுபடுத்தாமல் இருக்க வேண்டும். லட்சியத்தைத் தாழ்ந்த நிலைமைக்குக் கொண்டு செல்ல எவரும் வேண்டாம். * முன்னேறிக் கொண்டேயிரு! முறையற்ற ஒரு செயலைச் செய்து விட்டதாக நீ நினைத்தாலும், அதற்காக நீ திரும்பிப் பார்க்க வேண்டாம். அவை போன்ற தவறுகளை முன்பு செய்யாமல் இருந்திருந்தால்; இன்று நீ இருக்கும் நிலையை… Read More

மனதால் முதிர்ச்சியடையுங்கள -(புத்தரின் பொன்மொழிகள் )

மனதால் முதிர்ச்சியடையுங்கள் * மனிதனாகப் பிறப்பது அரிது. மனிதனாக வாழ்வது அரிது. உயர்ந்த அறநெறிகளைக் கேட்பது அரிது. * உண்மையே பேச வேண்டும். கோபத்தை தவிர்க்க வேண்டும். கைவசம் இருப்பது கொஞ்சமே ஆனாலும் இருப்பவர்களுக்கு ஈதல் வேண்டும். இவ்மூன்று செயல்களும் ஒருவனைத் தேவர்களிடம் அழைத்துச் செல்கின்றன. * தலைமயிர் நரைத்து விட்டதனால் மட்டும் ஒருவர் முதிர்ச்சியடைந்த பெரியவர் ஆக இயலாது. அவ்வாறு அவர் அடைந்த முதிர்ச்சி பயனற்ற முதுமையாகும். மனதால் முதிர்ச்சியடைய வேண்டும். * புத்தரையும் தருமத்தையும்… Read More

யாரையும் துன்புறுத்தாதீர்கள்-(குழந்தையானந்தசாமி)

யாரையும் துன்புறுத்தாதீர்கள் திருப்தி அடையாதவன் ஒருவரையும் திருப்தி செய்ய மாட்டான். எவன் எப் பொழுதும் சந்தோஷத்துடனும், திருப் தியுடனும் இருக்கிறானோ, அவனே எல்லாரையும் சந்தோஷத்துடன் இருக் கச் செய்வான். நாக்கு பாவ காரியங்களைப் பேசுவதில் மிகவும் தயாராக உள்ளது. அதனால் அதனைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். சோம்பல் எல்லா விபரீதங்களுக்கும் மூலகாரணமாகிறது. அதனால் அதனை எப்பாடுபட்டாவது விட்டுவிட வேண்டும். உலகமாவது தர்ம, அதர்ம காரியங்களில் பரிட்சை ஸ்தலமாகும். அதனால் மிகுந்த கவனத்துடன் தர்ம, அதர்மங்களைப் பரிட்சித்துப் பார்த்து… Read More

பிறரை அழ வைக்காதே-(குழந்தையானந்தசாமி)

பிறரை அழ வைக்காதே * சில மனிதர்கள் தான் சம்சாரத்தின் அக்கரையை அடைகிறார்கள். அதிகமான மனிதர்கள் தர்மத்தை கேலி செய்து இக்கரையிலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள். * ஒருவன் யுத்தத்தில் லட்சக்கணக்கான மனிதர்களை ஜெயித்தாலும், உண்மையில் வீரனில்லை. எவன் தன்னைத் தானே ஜெயித்துக் கொள்கிறானோ அவன்தான் உண்மையான வீரன். * பாபம் நம்மை அடைவதில்லை என்று கவலையில்லாமல் இருக்கக் கூடாது. எப்படி சொட்டு சொட்டாக நீர் விழுந்து பானை நிரம்பிவிடுகிறதோ, அப்படியே மனிதனும் படிப்படியாக பாவியாகிறான். * யாரையும்… Read More

பிறரை பழித்துப் பேசாதீர -(ஔவையார்)

பிறரை பழித்துப் பேசாதீர் * உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர் களோ, அதே அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாக பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய செயல்களால் வீண் பகை வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை உண்டாகாது. மேலும் இத்தகைய குணமுடையவர்களிடம் பாசம், பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய நற்பண்புகளும் இருக்காது. * மனிதர்களுக்கு… Read More

மந்திரத்தின் பலன்-(அமிர்தானந்தமயி)

ஒருவர் தனது கையில் கிடைத்த மாத்திரையை தூக்கமாத்திரை என தெரியாமல் விழுங்கி வைக்கிறார். அடித்துப்போட்டாற்போல் தூங்கிவிடுகிறார். மந்திரத்தின் அர்த்தத்தை அறியாமல் நீங்கள் உச்சரித்தாலும், அதற்குரிய பலன் இருக்கவே செய்யும். மந்திரத்தை சிரத்தையோடும், அன்போடும் உச்சரிக்க வேண்டும். தீவிர கவனம் இருப்பதும் அவசியம். நீங்கள் ரயிலிலோ, பஸ்சிலோ பயணம் செய்கிறீர்கள். வண்டியை யார் ஓட்டிச்செல்கிறார் என்று தெரியாவிட்டாலும், சேரவேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்துவிடுகிறீர்கள். ரயில் கட்டும் தொழிற்சாலை எங்கிருக்கிறது, பஸ்சுக்கான உதிரிபாகங்கள் எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க… Read More

இறைவனின் வடிவங்கள்-(அமிர்தானந்தமயி)

* நாம் விரும்பி நினைக்கிற வடிவில் கடவுள் நமக்குக் காட்சியளிப்பார். அவரை வணங்கும் போது, ”படைப்பும் நீயே, படைப்பாளியும் நீயே. சக்தியாகவும், சத்தியமாகவும் நீதானிருக்கிறாய். நீயே தொடக்கம். நீயே முடிவு. தாயே! ஆன்மாவின் சாரமாகவும், ஐம்பூதங்களின் ரூபமாகவும் நீதானிருக்கிறாய்” என சொல்ல வேண்டும்.<BR> * நாம் நினைக்கிற வடிவில் கடவுள் காட்சியளிப்பார் என்றாலும், அவர் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கு முன்பாகவே, அவரைக் காண்கிற விருப்பத்தோடு நாம் தயாராயிருக்க வேண்டும். * இறைவன் தனக்கென்று குணங்களேதும் இல்லாதவனாயினும், தன்னுடைய… Read More

எந்தப்பணியும் நல்ல பணியே!-(அமிர்தானந்தமயி)

மனதைஒருமுகப்படுத்தி கண்களை மூடி, அம்பிகையின் திருநாமத்தை உச்சரியுங்கள். அப்போது அவளது உருவம் உங்களுக்கு தெரியும். அவ்வாறு உருவம் தெரியாவிட்டால் அவள் எதிரே நிற்பதாக எண்ணிக்கொண்டு அம்மா!’ என்று ஆசையுடனும், மனதில் பக்தியுடனும் அழையுங்கள். உங்களது குரலுக்கு அம்பிகை நிச்சயம் காட்சி தருவாள். நிலையான அன்பே, நிலையான கருணையே, நீ என்னை வழி நடத்துவாயாக!’ என்று பொருள். இறைவன் உள்ளத்தில் இருக்கும்போது, எதற்காக சத்தமிட்டு வணங்க வேண்டும் என்பர் சிலர். இறைவன் உள்ளத்தில் இருப்பது உண்மைதான். ஆனால், உங்களது… Read More

குழந்தையாய் நினைத்து பார்

ஆணோ, பெண்ணோ பலமுள்ளவர்கள்தாம். அதே சமயம் பலவீனமானவர்களும் தான். இருபாலருமே சாதனைக்குரிய காலத்தில் இச்சையைத் தூண்டக் கூடிய சூழ்நிலைகளைத் தவிர்ப்பது நல்லது.ஆன்மிகத்தில் மாற்றினத்தைப் பகையாய்க் கருத வேண்டியதன் அவசியம் என்ன? நம்முடைய பெற்றோர்கள் உடலுறவு கொள்ளும் போது ஒரு பண்புமிக்க நேர்த்தியான குழந்தையைப் பெற வேண்டுமென்கிற எண்ணம் அவர்களுக்கு இருந்திருக்காது. அவர்கள் விரும்பியது இன்பந்தான். அதே எண்ணந்தானே அவர்களுடைய ரத்தத்தில் தோன்றிய நமக்கும் இருக்கும். மாற்றினத்தவரைப் பார்க்கும்போது அவர்கள் நமக்கு இன்பசுகம் தருகிறவர்கள் என்கிற எண்ணமே மேலோங்கியிருக்கிறது.… Read More

பறவைகளுக்கு சாலைகள் இல்லை-(அமிர்தானந்தமயி)

கண்ணுக்குத் தெரியாத அஸ்திவாரத்தின் மீதுதான் கட்டடம் நிற்கிறது. வேர்கள்தாம் மரத்தை விழுந்துவிடாமல் தாங்கி நிறுத்துகிறது. உயர்வின் பின்னணியில் பணிவு இருக்கும். இருக்க வேண்டும். நீரில் மிதக்கும் கட்டை இழுபடுமே தவிர, அதற்கென்று சுயேச்சையான போக்கு இல்லை. அகந்தையின் போக்கில் மனிதர்கள் இழுபடுகிறர்கள். அவர்கள் ஞானம் பெறவேண்டுமென்றால் அகந்தையை விடவேண்டும். ‘நான் யார்’ என்ற விசாரத்தில் ‘எல்லாம் என்னுள் இருக்கிறது’ என்கிற எண்ணந்தான் முதற்படி. அனைத்தும் பரமாத்மாவின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொண்டு விட்டால் அவனிடம் நம்மை ஒப்புவித்துக்கொள்வது… Read More

பெண்களே கவனம் கவனம்-(அமிர்தானந்தமயி)

ருசியான மாங்காய் ஊறுகாயைப் பார்த்ததும் வாயில் நீர் சுரக்கும். மாற்றினத்தவரைக் காணும்போது நம்மையறியாமலே அப்படியொரு உணர்வு ஏற்படும். அது இயல்பான விஷயம்தான். மழை லேசாய் பெய்தால் தரை ஈரமாகிறது. அதே மழை பலமாகப் பெய்துவிட்டால் தரை சகதியாகி விடுகிறது. சாதனையை தொடங்கிய காலத்தில் மாற்றினத்தவருடன் அதிகம் நெருங்கிப் பழகாமல் இருப்பது சாதகருக்கு நல்லது. எப்போதுமே ஒரு இடைவெளி இருக்க வேண்டும். பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ கொள்ள வேண்டும். ஆணை தந்தையாகவோ, சகோதரனாகவோ பாவித்துப் பழக வேண்டும். பாலுணர்வைக்… Read More

பெண்ணைத் தாயாகப் பாருங்கள-(அமிர்தானந்தமயி)

ருசியான மாங்காய் ஊறுகாயைப் பார்த்ததும் வாயில் நீர் சுரக்கும். மாற்றினத்தவரைக் காணும்போது (அதாவது ஆண் பெண்ணையும், பெண் ஆணையும்) நம்மையறியாமலே அப்படியொரு உணர்வு ஏற்படும். அது இயல்பான விஷயம் தான். மழை இலேசாய் பெய்தால் தரை ஈரமாகிறது, அதே மழை பலமாக பெய்துவிட்டால் தரை சகதியாகி விடுகிறதில்லையா? சாதனையை தொடங்கிய காலத்தில் மாற்றினத்தவருடன் அதிகம் நெருங்கிப் பழகாமல் இருப்பது சாதகருக்கு நல்லது. எப்போதுமே ஒரு இடைவெளி இருக்க வேண்டும். பெண்ணை தாயாகவோ, சகோதரியாகவோ கொள்ள வேண்டும். ஆணை… Read More

நிறைவான வாழ்க்கை வேண்டுமா

ஒருவருக்குத் தீங்கு செய்பவர்கள் தம்மால் தீங்கு செய்யப்பட்டவர்களின் கண்களின் முன்பாகவே கேடு அடைவது திண்ணம். தூரத்திலிருந்து துன்பம் செய்கிறவனை வெறுப்பதைக் காட்டிலும் அருகிலிருந்து துன்பம் செய்கிறவனை அதிகம் வெறுக்க வேண்டும். புறப்பகையைவிட உட்பகையே அபாயகரமானது. புண்ணியத்தினால் கிடைத்த தனம் குறைவுபடாது. தன்னுடைய தனத்தைத் தான் மட்டுமே அனுபவிப்பது தகுதியுடையதல்ல. யாசகர்கள் எதைக் கேட்க நினைத்தார்களோ அதைக் கொடுத்தால் அல்லாமல் அவரால் தரப்பட்ட புகழ் நில்லாது. ஒருவருக்கு லாபத்துக்குக் கொடுப்பதைக் காட்டிலும் இரப்பவர்க்குக் கொடுப்பதில் அனேகங்கோடி இன்பமுண்டாகும். சிங்கத்துக்கு… Read More

உள்ளம் தூய்மை பெற வழி-(அதிவீரராமபாண்டியன்)

* வானம், நெருப்பு, நீர், காற்று, மண் என்கின்ற பஞ்ச பூதங்களுக்கு அமைந்த முக்குணங்களும், அந்த கரணங்கள் நான்கும் ஆகிய இவை முதலிய யாவுமாய், தனக்கு ஆதியுமில்லாமல், அந்தமுமில்லாமல், உடலுக்கு உயிராய், உயிருக்கு உணர்ச்சியாய் ஒன்றினும் தோய்வின்றி நிற்பவனே அறிவுமயமான ஆண்டவன்.<BR> * ஆண்டவனை வணங்கத் தலை இருக்கிறது. வாழ்த்த வாய் இருக்கிறது. மனமும் இருக்கிறது. ஆனால், அந்த மனம் கட்டுக்கடங்காமல் திரியும் காட்டுக் குரங்கினைப் போன்றது. ஆகவே, இறைவனை எப்போதும் எண்ணிக்கிடக்க இறைவனடியார்களிடம் எக்காலத்தும் பழகியிருக்க… Read More

ஆளை பார்த்து அறிவை எடை போடாதீர்-(அதிவீரராமபாண்டியன்)

அறிஞர்கள் நல்ல நூல்களைக் கற்று அவற்றின் பொருள்களை சந்தேகமின்றி உணர்ந்து ஐம்புலன்களையும் கட்டுக்குள் அடக்கி தன்னிலேயே அடங்கி வாழ்பவர்கள். அடக்கம் தான் அறிஞருக்கு உண்மையான அழகாகும்! வறுமை வந்தபோதும் ஒழுக்க நெறியில தவறாமல் நடந்து கொள்ள வேண்டும். அவ்வாறு வறுமையிலும் செம்மையாக விளங்குவது தான் ஏழைகளுக்கு அழகாகும்! பெரிய பனம் விதை முளைத்து உயரமாக வானுற ஓங்கி வளர்ந்திருந்தாலும், அதனுடைய நிழல் ஒருவர் இருந்து இளைப்பாறவும் போதுமானதாக இருக்காது. அதாவது, வளர்ச்சியால் உயர்ந்து காணப்படுகிறவர்கள் எல்லாரும், பண்பால்… Read More

ஆண்டவன் அருளை நாடுங்கள் -(அதிவீரராமபாண்டியன்)

* காலமெல்லாம் சென்றுவிட்டது. இளமை நம்மைவிட்டு நீங்கிவிட்டது. நம் எதிரே இப்போது காத்துக்கொண்டிருப்பது இறப்பு ஒன்றுதான் என்பதனை எண்ணியேனும் இறைவனை எண்ணிக்கிடக்க வேண்டும். * நம் உயிர் நம்மைவிட்டு நீங்கும் சமயத்தில், அலைந்து தேடி வைத்த செல்வமும், அருமை மனையாளும், மக்களும் ஏது செய்தும் நம் இறப்பைத் தவிர்க்க முடியாது ‘இறைவா’ என்று வேண்டினால், அப்போதும் ஆண்டவன் அருள் கிடைக்கும். * பூமிக்குப் பாரமாய், அவல வாழ்க்கையில் ஆசை வைத்து உடலைச் சுமந்து திரியும் உயிருக்கு நற்கதியைத்… Read More

மனப்புயலை அடக்கிவிடு-(பகவத் கீதை)

* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும். * சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான். * எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள்,… Read More

பெண்களைத் திட்டாதீர்கள்

குடும்பத்தை விடுவோன் கடவுளைத் துறக்க முயற்சி பண்ணுகிறான். குடும்பம் நாகரிகமடையா விட்டால் தேசம் நாகரிகமடையாது. குடும்பத்தில் விடுதலையிராவிடில், தேசத்தில் விடுதலை இராது. குடும்பத்திலிருந்து பொறுமை என்பதொரு தெய்வீக குணத்தையும், அதனால் விளையும் எண்ணற்ற சக்திகளையும் எய்த விரும்புவோர், தாய், மனைவி முதலிய ஸ்திரீகள் தமக்கு வெறுப்புண்டாகத் தகுந்த வார்த்தை பேசும் போது, வாயை மூடிக் கொண்டு பொறுமையுடன், கேட்டுக் கேட்டுப் பழக வேண்டும். அவ்வாறின்றி ஒரு ஸ்திரீ வாயைத் திறந்த மாத்திரத்திலேயே, அவள் மீது புலிப்பாய்ச்சல் பாயும்… Read More