senthilvayal

கடவுளே அறிவின் வடிவம்

* உடலுக்கு உயிர் எப்படி அவசியமோ, அது போலவே உயிருக்கு அறிவு அவசியம். ஒருவருக்கு கிடைக்கும் செல்வத்திற்கு அறிவு மட்டுமே வேராக இருக்கிறது. அறிவே, வலிமைகளில் எல்லாம் உயர்ந்ததாகத் திகழ்கிறது. அறிவின் சொல்படிதான் மனமும் செயல்பட வேண்டும். அத்தகைய மனிதனே அனைத்திலும் முன்னிலை பெறுவான். * அறிவால் உயர்ந்தவர்களே, வாழ்க்கையில் அனைத்து நிலைகளிலும் சிறப்பிடம் பெற்று உயர்கிறார்கள். செல்வத்தால் உயர்ந்திருப்பவர்களைக் காட்டிலும், அறிவால் சிறந்தோரே உண்மையில் உயர்ந்தவர் ஆவர். அறிவாளிகளை யாரும் அடிமைப்படுத்தவோ, கீழ்த்தரமாகவோ நடத்தவோ முடியாது.… Read More

சத்தியவான் சாவித்திரி போல் வாழுங்கள்

மூன்று நாட்களில் மாறக்கூடிய புதுமை உணர்ச்சிக்குக் காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் மனப்பிராந்தி. காதல் என்பது தேவலோகத்து வஸ்து. இவ்வுலகத்திற்கு வாழ்க்கை மாறியபோதிலும் அது மாறாது. சாவித்திரியும், சத்தியவானும் (திருமணத்திற்கு பின்) கொண்டிருந்தார்களே…அதன் பெயர் தான் உண்மைக் காதல். அதுஅழியாத நித்திய வஸ்து. இமயமலை கடலில் மிதந்தபோதிலும், காதல் பொய்த்துப்போகாது. அது தெய்வீகமானது. உண்மையான காதல் ஜீவன்முக்திக்குப் பெரிய சாதனமாகும். பொருளில்லாவிடினும், கல்வியில்லாவிடினும் ஒருவன் ஜீவன் முக்தி பதமெய்தலாம். ஆனால், காதல் விஷயத்தில் வெற்றி பெறாதவன்… Read More

பயம், சந்தேகம், சலனம் வேண்டாம்

ஒன்று கூடிக் கடவுளை வணங்கச் செல்லும் போது, மனிதர்களின் மனங்கள் ஒருமைப்பட்டுத் தமக்குள் இருக்கும். ஆத்மவொருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடமுண்டாகும். எனவே தான் நம் முன்னோர் கோயில்களை உருவாக்கினார்கள். சிவன் நீ; சக்தி உன் மனைவி. விஷ்ணு நீ; லட்சுமி உன் மனைவி. பிரம்மா நீ; சரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரை தேவநிலைக்கு கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப்பள்ளிக்கூடங்களே கோயில்கள் ஆகும். சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந்தடையாக… Read More

மருத்துவ குறிப்புகள்

01. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது ஏன்? மனித உயிருக்கு உத்திரவாதமில்லை. நேற்று இருந்தவர் இன்றில்லை. “10 நிமிடங்களுக்கு முன் நன்றாக பேசிக் கொண்டிருந்தவர், திடீரென போய் விட்டாரே. இன்று காலை கூட என்னிடம் தொலைபேசியில் பேசினார். இறந்து விட்டதாக செய்தி வருகிறதே. நேற்று நன்றாக நடமாடிக் கொண்டிருந்தவர் இன்று பக்கவாதம் தாக்கி முடமாகி விட்டாரே’ என்று பலர் ஆதங்கப்படுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இதற்கெல்லாம் காரணம் என்ன? ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான் காரணம்.இதயத்திற்கு செல்லும் ரத்த… Read More

சங்கு சக்கர முருகன்

ஏப்ரல் 13ல் சர்வதாரி தமிழ் வருடம் பிறக்கிறது. தமிழ்க்கடவுளான முருகனை இந்நாளில் வழிபடுவது விசேஷம். கும்பகோணம் அருகிலுள்ள அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயிலிலுள்ள முருகன் கையில் சங்கு, சக்கரம் வைத்தபடி காட்சி தருகிறார். இவரை தரிசிக்கச் செல்வோமா தல வரலாறு: கைலாயம் சென்ற பிரம்மாவிடம், பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டார் முருகன். அது தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தார். பின்னர் படைப்புத்தொழில் கருதி அவரை விடுவித்தார். வயதில் பெரியவரான பிரம்மாவை தண்டித்ததற்குரிய சாபத்தை அவர் பெற வேண்டி வந்தது.… Read More

கன்னட பூமியில் தமிழ் தெய்வம்

தமிழகத்தில் பழநி முருகன் கோயில் பிரசித்தமாக இருப்பது போல, கர்நாடக மாநில முருக ஸ்தலங்களில் பிரபலமானது “குக்கி சுப்ரமண்யா’ கோயிலாகும். தமிழ் புத்தாண்டான இன்று தமிழ் தெய்வமான முருகனைத் தரிசிப்போமா! தல வரலாறு: காஷ்யப முனிவரின் மனைவியரான கத்ரு, வினதா என்பவர்களுக்கு இடையே குதிரைகள் பற்றிய சர்ச்சை எழுந்தது. இருவரும் தங்கள் கருத்தே சரியென வாதம் புரிந்தனர். முடிவில், யாருடையகருத்து சரியானதோ, அவர் மற்றவருக்கு அடிமைப்பட வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டது. இந்த பந்தயத்தில், கத்ரு… Read More

சர்வதாரி புத்தாண்டு சகல வளமும் தரட்டும்

சித்திரை- பெயர்க்காரணம் : சந்திரன், அசுபதி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்களில் சஞ்சரிக்கிறார். இதில் பவுர்ணமியன்று அவர் குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதின் அடிப்படையில், மாதங்களுக்கு சமஸ்கிருத மொழியில் பெயர் சூட்டப்பட்டது. அதை தமிழில் மொழி பெயர்க்கும் போது சிறு வித்தியாசம் ஏற்பட்டது. சில மாதங்களின் பெயர்கள் நட்சத்திரத்தின் பெயர்களுடன் சம்பந்தமே இல்லாதது போல் தோன்றினாலும், மொழியியல் வல்லுனர்கள் அவை காலப்போக்கில் ஏற்பட்ட மருவலே எனக்கூறுகின்றனர்.சித்திரையைப் பொறுத்தவரை, சித்ரா பவுர்ணமி சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில்… Read More

மொபைல் துணுக்குகள்

எச்.டி.சி.யின் ஜி.பி.எஸ். போன் விண்டோஸ் மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பெயர் பெற்ற எச்.டி.சி. மொபைல் போன்கள் வரிசையில் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது எச்.டி.சி. டி.ஒய்.டி.என். போன். இதில் போன் பயன்படுத்து பவரை வழி நடத்த ஜி.பி.எஸ். சிஸ்டம் இணைக்கப் பட்டுள்ளது. 2.8 அங்குல வண்ணத்திரையுடன் டைப்பிங் கீ போர்டும் இணைந்து இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த கோணத்திலும் இந்த போனின் திரையைத் திருப்பி வைத்துக் கொள்ள முடியும். இதனால் இமெயில் செய்திகளை வசதியாக அமைக்கவும் படிக்கவும் முடியும்.… Read More

புளூடூத் பயன்பாடும் பாதுகாப்பும்

வயர்கள் எதுவுமில்லாமலும், தானாகவும் இணைப்பினை ஏற்படுத்திக் கொள்வதுதான் புளுடூத். நம் அன்றாட வாழ்க்கையின் பல அம்சங்களை எளிமைப்படுத்தும் விஷயங்கள் இதில் உள்ளன. நாம் கம்ப்யூட்டர்கள், பொழுது போக்கு சாதனங்கள், டெலிபோன் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போது அவை தங்களுக்குள் பல வகைகளில் இணைத்துக் கொள்கின்றன. பலவித வயர்கள், கேபிள்கள், ரேடியோ சிக்னல்கள், இன்ப்ரா ரெட் கதிர்கள் எனப் பல வகைகளில் இணைப்பு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் புளுடூத் சாதனங்களை இணைப்பதில் தனி வழி கொண்டுள்ளது. குறைந்த மின் சக்தி பயன்பாடு, ஒரே… Read More

மொபைல் டு மொபைல் பண மாற்றம்

அமெரிக்க நிறுவனமான ஒபோ பேயின் இந்தியப் பிரிவும் தனியார் துறையில் இயங்கும் யெஸ் வங்கியும் மொபைல் டு மொபைல் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வசதியினைத் தர ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதற்கான தொழில் நுட்ப வசதியினை ஒபோபே இந்தியா நிறுவனம் வழங்குகிறது. யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி வழங்கப்படுகிறது. இதற்கான மொபைல் அப்ளிகேஷனை இவர்கள் பெற்று போனில் பதிந்திருக்க வேண்டும். அல்லது இணைய இணைப்பு வழங்கும் ஜி.பி.ஆர்.எஸ். வசதியினைக் கொண்டிருக்க வேண்டும். இவை இரண்டும் இல்லாதிருப்பவர்கள் எஸ்.எம்.எஸ்.… Read More

எந்த பிளான் தேர்ந்தெடுக்கலாம்…

சட்டைப் பையில் பணம் இருக்கிறதோ இல்லையோ? கட்டாயம் மொபைல் போன் ஒன்று தேவையாய் உள்ளது. அதுவே நமக்கு பணம் தரும் கிரெடிட் கார்டாகவும் இப்போது உருவாகி வருகிறது. ஆனால் புதியதாய் மொபைல் இணைப்பு வாங்க விரும்புபவர்களை மொய்த்திடும் விளம்பரங்களும் விற்பனை பிரதிநிதிகளும் வாடிக்கையாளர்களை ஏதோ ஏதோ சொல்லிக் குழப்பத்தான் செய்கின்றனர் என்பது ஒரு குறை. இவர்களுக்கு உதவிட பொதுவான சில வழிகாட்டுதல்கள் இங்கு தரப்படுகின்றன. இந்தியாவில் மொபைல் பயன்பாடு இயங்கும் ஒவ்வொரு மண்டலத்திலும் நான்கு முதல் ஏழு… Read More

சிறுநீரகத்தில் கல் ஏன் தோன்றுகிறது? இதன் அறிகுறிகள் என்ன? இதற்கும் தொற்றுக்கிருமிகளுக்கும் ஏதும் சம்பந்தம் உண்டா?

ஆமாம் உண்டு. இவற்றைச் சற்று விவரமாகப் பார்ப்போம். i)சிறுநீரகக் கல்லுக்கு ரீனல் கால்குலி (Renal Calculi) என்று பெயர். இது பெரும்பாலும் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்ப்பாதையில் ஏற்படுகிறது. இதன் காரணம் என்ன என்று உறுதியாகக் கூறமுடியவில்லை. பல காரணங்கள் உண்டு. உதாரணமாக ஹார்மோன்களின் சமச்சீர் இன்மை, சிறுநீரகத்தொற்று (Infections) சிறுநீரகத்தில் அதிக உப்பு, வைட்டமின் ஏ குறைவு, பாராதைராய்டு அதிகமாகச் சுரத்தல், பரம்பரை மரபணுக்கோளாறு இப்படிப் பல. ii. இந்த சிறுநீரகக் கற்களில் யூரிக் அமிலம், கால்சியம்… Read More

சிறுநீரக அழற்சிகள் (Nephritic and Nephrotic Syndromes) என்றால் என்ன?

இது இரு வகைப்படும். . சிறுநீரக அழற்சி (Nephritic Syndrome)  சிறுநீரக அழற்சி (Nephrotic Syndrome) என்று இருவகைப்படும். சிறுநீரக அழற்சியை, பொதுவாக ஆங்கிலத்தில் Urinary Inflamation என்றும் கூறுவர்.  ஏ. சிறுநீரக அழற்சி _ I  (i) (Nephritic Syndrome II) இது சிறு குழந்தைகளையும், பள்ளிச் சிறுவர்களையும் பாதிக்கிறது. சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சொறி, சிரங்கு, கொப்பளம் மற்றும் தொண்டைப்புண் போன்றவை மூலமாக ஸ்ட்ரேப்டோக்காக்கஸ் (Streptocococcus) என்ற விண்கிருமிகள் முக்கியமாக ரெப் ரிடோஜெனிக் ஸ்ட்ரேப்… Read More

பாலியல் தொற்றுக்கிருமிகள் (Sexual Infections) எப்படி சிறுநீரகத்தைப் பாதிக்கிறது?

பாலியல் கிருமிகள் முக்கியமாக கருப்பை, கருப்பைப் பாதை போன்றவற்றைத்தான் முதலில் தாக்கும். சிறுநீரகப்பாதை மற்றும் சிறுநீர் வெளியேறும் வழி, உடலுறவுப் பாதைக்கு மிக அருகில் இருப்பதால் இதன் வழியாக அக்கிருமிகள் உள்ளே சென்று சிறுநீர்ப்பையையும் தாக்கிவிடும். இதனுடைய அறிகுறிகள் பெரும்பாலும் மேற்சொல்லிய பொது தொற்றுக்கிருமிகளின் அறிகுறிகள்தான். பாலியல் கிருமிகள் முக்கியமாகச் சிறுநீர்ப்பாதையைக் குறுக்கிவிடுகிறது. எல்லா கிருமிகளும் சிறுநீரகத்தைப் பொறுத்தவரையில் ஒரே மாதிரிதான் வேலை செய்கிறது. இரண்டு சிறுநீரகத்தில் ஒன்று மட்டும் ஏதோ காரணத்தால் செயல் இழந்தால், அது… Read More

லெப்டோஸ் பைரோசிஸ் (Leptospyrosis) என்றால் என்ன?

இது ஒரு கொடிய கிருமிநோய். நம் வீட்டில் வளர்கின்ற கால்நடைகள் மற்றும் நம் வீட்டைச் சுற்றியுள்ள எலி, பெருச்சாளிகள் விடும் சிறுநீரில், இந்தவகைக் கிருமிகள் மழைக்காலங்களில் கலந்து, நமது கால்களில் உள்ள சின்னச்சின்ன வெடிப்புகள், காயங்கள் மூலம் உடலில் புகுந்துவிடும். இந்தக் கிருமிகள் மிகவும் ஆபத்தானது. இது குளிர்காய்ச்சல், மஞ்சள்காமாலை ஆகிய நோய்களை ஏற்படுத்தி, மூளை திசுக்களைப் பாதித்து, அடுத்து சிறுநீரகத்தையும் செயல் இழக்கச் செய்துவிடுகிறது. இதற்கு உடனே மருத்துவச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சிறுநீரகத் தொற்று நோய்

1.நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீரகத் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கு முக்கிய காரணம், நீரிழிவு வெள்ளை அணுக்களின் செயலை முடக்கிவிடுகிறது. அடுத்தது, நீரிழிவால் நரம்பு மண்டலம் பாதிப்பு அடைகிறது. இதனால் சிறுநீர்ப்பை சரிவர இயங்காது. சிறுநீர்த்தேக்கம் சிறுநீர்ப்பையில் ஏற்பட்டு கிருமிகள் உற்பத்தியாகக் காரணமாகிறது. 2. தொற்றுக் கிருமிகள் பெண்களைப் பெரும்பாலும் சுலபமாகப் பாதிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், பாலியல் உறுப்பின் போதிய சுத்தமின்மை. அடுத்தது, மாதவிடாய் நின்றபிறகு, ஹார்மோன்கள் மாற்றத்தால், பெண்களுக்கு நோய் எதிர்ப்புச்… Read More

தாய்மையின் அடையாளங்கள்

கருத்தரித்தல் நடந்து நான்கு நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பைக்கு நகர்ந்து வருகிறது. கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கிற இந்த நிலையிலேயே சில இரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது. இவையெல்லாம், முட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சமிக்ஞைகள் ஆகும். கருத்தரித்த ஒருவாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும். இத்தகைய சிக்கலான வேளைகளில் சில அறிகுறிகள் தோன்றும். இயல்பான ஹார்மோன் செயல்பாடுகளில் மாறுபாடுகள் உண்டாகும்போது, கருத்தரித்திருப்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: 1. மாத விலக்கு வராமை.… Read More

பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க…!

 பங்கு வர்த்தக கணக்கு `டிமேட்’ கணக்கு தொடங்க 1. `பான்’ கார்டு நகல், 2. உங்கள் முகவரியுடன் உங்களை அடையாளம் காட்டுவதற்கான அத்தாட்சிகள் (பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின் கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகல்), 3. உங்களுடைய புகைப்படம், 4.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல்… Read More

பலம் தரும் பாதுகாப்பு படிப்புகள்

       பாதுகாப்பு துறை சார்ந்த விழிப்புணர்ச்சி மக்களிடம் ஏற்பட பல நாடுகள் ராணுவ கல்வியை மக்களிடம் வழங்குகின்றன. இந்த கல்வி மூலம் கிடைக்கும் பயன்களை விளக்குகிறார் திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் சுரேஷ்குமார். எந்த நாட்டில் அமைதி நிலவுகின்றதோ அங்கு முதலீடு செய்வதற்கு வெளிநாட்டைச் சார்ந்த முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முன்வருவார்கள். அங்கு தொழில் வளர்ச்சி, தொழில்ட்ப ஆராய்ச்சி, பொருளாதார மேம்பாடு என்ற ஒட்டு மொத்தமான நாட்டின் வளர்ச்சி என்பது சாத்தியமாகும். சில சமயங்களில்,… Read More

பாசியில் இருந்து எரிபொருள்

பெட்ரோல், டீசல் போன்றவற்றுக்கு மாற்றாக புதிய எரிபொருளை உருவாக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஹைட்ரஜன் வாயுவை பயன்படுத்தி வாகனங்களை இயக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் வாகனத்துக்கு தேவையான ஹைட்ரஜனை உருவாக்க `பாசி’கள் பயனுள்ளதாக இருக்கும் என்று இப்போது அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து அமெரிக்க எரிசக்தி துறை விஞ்ஞானி டேவிட் டைடி கூறி இருப்பதாவது:- ஒரு செல் தாவரமான பச்சை… Read More