அரசியல் செய்திகள்

ஜாதிக்கு போடும் ஓட்டு…ஜனநாயகத்துக்கு வைக்கும் வேட்டு…

தென் மாவட்டங்களில் தேவர், வடக்கு மாவட்டங்களில் வன்னியர், கொங்கு மண்டலத்தில் கவுண்டர் என சமுதாய ஓட்டு வங்கியைக் குறி வைத்தே, முக்கியக் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தனித் தொகுதிகளாக இருந்தாலும், தலித் சமூகத்தில் எந்தச் சாதிக்கு ஓட்டு வங்கி அதிகம் என்பதைப் பார்த்தே வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆட்சியின் சாதனைகள், தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளரின் தகுதி இவற்றையெல்லாம் தாண்டி, “ஜாதிக்காரர்’ என்ற அடிப்படையில் ஓட்டு கிடைக்கும் என்பதே தமிழக மக்களின் மீது திராவிட மற்றும் தேசியக்கட்சிகள் குத்தியிருக்கும்… Read More

தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தது: தி.மு.க., 121, காங்., 63 தொகுதிகளில் போட்டி

காங்கிரசுடனான இழுபறிக்கு முடிவு எட்டப்பட்டதையடுத்து, தி.மு.க., கூட்டணி இறுதி வடிவம் பெற்றது. இதன்படி, தி.மு.க., 121 தொகுதிகளிலும், காங்., 63 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதர கூட்டணி கட்சிகளான, பா.ம.க., 30, விடுதலைச்சிறுத்தைகள் 10, கொங்குநாடு முன்னேற்றக்கழகம் 7, முஸ்லிம் லீக் 2, மற்றும் மூவேந்தர் முன்னேற்றக்கழகம் 1 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. தமிழகத்தில் ஆளும் தி.மு.க., கூட்டணியில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் அங்கம் வகித்து வருகின்றன. இக்கூட்டணியில் சிறிய கட்சிகளான மூவேந்தர் முன்னேற்றக்கழகம், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு… Read More

என்னதான் செய்யப் போகிறது காங்கிரஸ்?

மத்திய அரசிலிருந்து தனது அமைச்சர்களை விலக்கிக் கொள்வது என்றும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து நிபந்தனை ஆதரவு வழங்குவது என்றும் தி.மு.க. உயர்மட்டக் குழு முடிவெடுத்திருப்பது யாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறதோ இல்லையோ, பெருவாரியான தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலையில் இடியாக இறங்கி இருக்கிறது. தி.மு.க. அல்லது அ.தி.மு.க. அணியில் மாறி மாறி கூட்டணி அமைத்துத் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் ஒரு டஜனுக்கும் அதிகமான காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.… Read More

மத்திய அரசிலிருந்து விலகல்! – திமுக அதிரடி

மத்திய அரசிலிருந்து விலகிக் கொள்வதாக திமுக இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. திமுகவின் உயர்நிலை செயற்குழு கூட்த்தின் ஏகோபித்த முடிவின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சி – திமுக இடையிலான 7 ஆண்டு கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்தே காங்கிரஸ் கட்சி கூட்டணிக் கட்சியான திமுகவுக்கு இணக்கமாக இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம் திமுக அரசை கடுமையாகச் சாடி வந்தனர் காங்கிரஸ் தலைவர்கள். இந்த நிலையில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு என்ற… Read More

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க.,வுக்கு 41 சீட் ஒதுக்கீடு: ஜெ., – விஜயகாந்த் ஒப்பந்தம்

அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தே.மு.தி.க.,வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு இடையே நேற்றிரவு கையெழுத்தானது. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 13ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து, தொகுதிப் பங்கீட்டுக்கான முஸ்தீபுகளில் இறங்கின. அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக நீடித்த நிலையில், கடந்த 24ம் தேதி தே.மு.தி.க., அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன்… Read More

தொகுதி பங்கீட்டை இறுதி செய்கிறார் ஜெ., : 4ம் தேதி விஜயகாந்துடன் சந்திப்பு

அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, தே.மு.தி.க.,வுடனான தொகுதி பங்கீடு அறிவிப்பு, வரும் நான்காம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதாவை, நான்காம் தேதி விஜயகாந்த் சந்தித்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யவுள்ளார் என, இரு கட்சி வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.   அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள சிறிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு ஏற்கனவே முடிவாகியுள்ளது. மனித நேய மக்கள் கட்சி – புதிய தமிழகம் – இந்திய குடியரசுக் கட்சி – அகில இந்திய… Read More

சோனியாவுடன் ஐவர் குழு சந்தித்து ஆலோசனை : பிடிவாதத்தை தளர்த்த முடிவு?

தி.மு.க.,வுடனான தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தை குறித்த விவரங்களை ஐவர் குழுவிடம் சோனியா நேற்று கேட்டறிந்தார். தமிழக சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடக்கவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீட்டை உடனடியாக முடிக்க வேண்டிய நெருக்கடி காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.   காங்கிரஸ் தலைவர் சோனியாவை, நேற்று அவரது இல்லத்தில் காங்கிரஸ் ஐவர் குழு சந்தித்துப் பேசியது. இந்த சந்திப்பு அரை மணிநேரம் நீடித்தது.   இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: தி.மு.க., ஐவர் குழுவுடன், சென்னையில் நடந்த… Read More

தேர்தல் திருவிழாவின் பலியாடுகள்!

மாசி மாதம் பெரும்பாலான தென்மாவட்டக் கிராமங்களில் மாசிக்களரித் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்படுகின்றன.களரித் திருவிழா நெருங்க… நெருங்க ஆடுகளுக்கு மரியாதை கூடுகிறது. பின்னர் உற்றார் உறவினர் கூடவர கோயிலுக்கு மேள தாள மரியாதையுடன் ஆட்டை அழைத்துச் செல்கின்றனர்.கோயிலின் முன் ஆட்டை நிறுத்தி திடீரென தண்ணீர் ஊற்றுகின்றனர். அப்போது, எதற்காக நம்மீது தண்ணீர் ஊற்றுகிறார்கள்? எனத் தெரியாமலே ஏதோ ஓர் உணர்வில் ஆடு தலையை அசைக்கும். ஆடு சந்தோஷமாகச் சம்மதம் சொல்லிவிட்டது. வெட்டுங்கள்..! எனக் கூடியிருப்போர்… Read More

கனிமொழி எஸ்டேட் : ஜெ., அறிக்கை

“கோத்தகிரியில் உள்ள விண்ட்சர் எஸ்டேட்டை உள்ளூர் மக்கள், “கனிமொழி எஸ்டேட்’ என்று தான் அழைக்கின்றனர்’ என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார். அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ராடியா டேப் விவகாரம் பற்றி பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.அதில், சமீபத்தில் கோத்தகிரியின், “விண்ட்சர் எஸ்டேட்’டை “கனிமொழி எஸ்டேட்’ என உள்ளூர்காரர்களால் பேசப்படுகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.மேலும், 525.98 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த எஸ்டேட் அன்று வெறும் 2 கோடியே 47 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு இருக்கிறது. விண்ட்சர்… Read More

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…!

தலைப்பு என்னவோ உண்மை தான். ஆனால், அதை எல்லாம் தாண்டி அசாதாரணமானது, தி.மு.க., – பா.ம.க., உறவு. “துரோகம்… துரோகம்… பச்சைத் துரோகம்’ என, தி.மு.க., தலைவரை விமர்சித்த அதே வாய், இன்று, “மீண்டும் மகத்தான வெற்றி பெற்று ஆறாவது முறை தமிழக முதல்வராக வருவார் கருணாநிதி’ என்கிறது. இரு தரப்பு விமர்சனங்கள் ஏராளம். அவற்றில், நினைவில் நின்றவை மட்டும் இங்கே. * ஆட்சியைத் தக்கவைக்க, காங்கிரசின் தயவு வேண்டும் என்பதால், இலங்கைத் தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம்… Read More

கோபத்தில் காங்கிரஸ்; தயக்கத்தில் திமுக!

காங்கிரஸ் கட்சியின் சார்பில் தேர்தல் கூட்டணி குறித்துத் திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுக தரப்பினருடன் முதல்கட்டப் பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்ட நிலையில், பரஸ்பரம் உற்சாகமும், நம்பிக்கையும் அதிகரிப்பதற்குப் பதிலாகச் சந்தேகமும், வெறுப்பும் ஏற்பட்டிருப்பதுதான் பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அமைக்கப்பட்ட ஐவர் குழு, திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அண்ணா அறிவாலயத்துக்குச் சென்றது முதலே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை திமுக தலைமை எதிர்கொள்வதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலில், ஐவர் குழுவின் சார்பில், தமிழ்நாடு… Read More