அறிவியல் செய்திகள்

உலக சிக்கலை தீர்ப்பதற்க்கான ஒரு படிநிலை! பிளாஸ்டிக்கை தின்றும் மெழுகு புழுக்கள் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  உலகம் முழுக்க, ஒவ்வொரு நிமிடமும் சுமார் 2 மில்லியன் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்படியாக கடந்த பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு, குவிந்துள்ள பிளாஸ்டிக் குவியல்களை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. பிளாஸ்டிக்குகள் மிகவும் ஆபத்தானவைகள், அதை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் கீழ், அரசாங்கங்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டின் மீது தடை போன்ற சட்டங்களை கொண்டு வந்த நிலைப்பாட்டில், விஞ்ஞானிகள் ஒரு தீர்வை கண்டுபிடிக்க முயற்சி செய்து வந்தனர். அது தற்போது வெற்றி கண்டுள்ளது.அதுவும்… Read More

இனிமேல் பல் துலக்க பேஸ்ட் தேவையில்லை: ஒரே ஒரு கேப்ஸ்யூல் போதும்!

பல் துலக்கும் பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்களில் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த காலி டூத்பேஸ்ட் பிளாஸ்டிக் டப்பாக்கள் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் தூக்கி வீசி படுவதால் இந்த மக்காத பிளாஸ்டிக் டப்பாக்கள் பல்வேறு சுற்றுச்சூழல் கேடு விளைவித்து வருகின்றன… Read More

காற்றிலிருந்து தயாரிக்கப்பட்டுள்ள உணவு!

மனிதன் வெறும் காற்றை சுவாசித்து உயிர் வாழ முடியாது, அவனுக்கு உணவும் வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், அந்த உணவையும் காற்றிலிருந்தே தயாரிக்க முடியும் என நிலை தற்போது உருவாகியுள்ளது. பின்லாந்தை சேர்ந்த சோலார் புட்ஸ் என்ற நிறுவனம், காற்றை மாசுபடுத்தும் கரியமில வாயுவை சூரிய மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றைக் கொண்டு,… Read More

கையெழுத்துப் போட்டேன் அவ்வளவுதான்”…எடப்பாடியின் துபாய் ரகசியம்…அதிர்ச்சி ரிப்போர்ட்!-நக்கீரன்

எடப்பாடி மற்றும் அவரது அமைச்சர்கள் நடத்திய வெளிநாட்டுப் பயணத்தில் முதலீடுகள் 8,000 கோடிக்கு மேல் வந்ததாக பல்வேறு ஊடகங்கள் வழியாக தம்பட்டம்… Read More

நீண்ட இழுபறிக்கு பிறகு அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 சீட்? ஒரு ராஜ்யசபா சீட் தர பாஜ சம்மதம்,.. விஜயகாந்த் இன்று அறிவிக்கிறார்

நீண்ட இழுபறிக்கு பிறகு மக்களவை தேர்தலில் 5 சீட், ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சிகள் இடம்பெற்றுள்ளன.… Read More

விளைநிலங்களும் தேவையில்லை விலங்குகளும் தேவையில்லை

விவசாயம் குறைகிறது, தண்ணீர் பற்றாக்குறை என்றெல்லாம் நாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இனி உணவு உற்பத்தி இல்லாமல் மனித குலம் எப்படி வாழும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். மிகவும் தீவிரமான இந்த பிரச்னையை விஞ்ஞானம் வேறு ஒரு கோணத்தில் அணுகுகிறது. பிரச்னை என்ன…. மனிதனுக்கு உணவு வேண்டும்… அவ்வளவுதானே…. விளைநிலங்களில்தான் உணவு உற்பத்தியாக வேண்டுமா? ஆய்வுக்கூடங்களிலும் அதே சத்தூட்டங்கள் கொண்ட உணவை தயார் செய்துவிட முடியாதா என்ற கேள்வியோடு வெகுவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.… Read More

மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி… ஏன் நம்மால் உணர முடிவதில்லை?

இந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம். சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன.… Read More

பூமிக்கு ஹலோ சொல்ல வரும் செவ்வாய்… வெறும் கண்களாலேயே பார்க்கலாம்!

  வழக்கத்தை விட நிலா பெரிதாக, பிரகாசமாக இருந்தால் அதற்கு `சூப்பர்மூன்’ என்று பெயர். வருடத்துக்குக் குறைந்தது இரண்டு முறை வரும் `சூப்பர்மூன்’ குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். இதே போல் கிரகங்களும் தெரிவதுண்டு. அடுத்த மாதம் செவ்வாய் கிரகம்,15 ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு அருகே வரப்போகிறது. இது பதினைந்து முதல் பதினேழு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு. இதற்கு முன்பு 2003ம் ஆண்டு செவ்வாய் கிரகம் பூமியருகே வந்தபோது கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு… Read More

எனக்கு அதிக மழை வேண்டும்..!” – சீனாவின் செயற்கை மழை முயற்சி பலிக்குமா?

னிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளிலும் அடிப்படையானது தண்ணீர். அன்றாடத் தேவைகளுக்கான உணவுகளை விளைவிக்கவும் அப்படி உணவில்லாமல் இருக்கும்போது பசியைக் கட்டுப்படுத்தவும் கூடத் தண்ணீர்தான் முக்கியத் தேவையாக… Read More

உறுப்புகளுக்கு இனி அழிவில்லை!

ஒவ்வொரு வருடமும் உடல் உறுப்புகளுக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. உடல் உறுப்புகள் கிடைக்காததால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு பெருகிவந்தாலும்கூட,  சரியான நேரத்தில் பொருத்தமான  நபரிடமிருந்து உறுப்பு தானம் பெற முடியாமல் போவதுதான் இத்தகைய மரணங்களுக்கு காரணம். இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?… Read More

வெப்பத்தை தடுக்கும், ‘ஏரோஜெல்’ செங்கல்!

கட்டடத்துக்கு வெளியே உள்ள வெப்பமும் குளிரும், உள்ளே வராமல் தடுக்க, ‘ஏரோஜெல்’ என்ற விந்தைப் பொருளை பயன்படுத்தலாம் என சுவிட்சர்லாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.உலகிலேயே மிகவும் எடை குறைந்த பொருளான ஏரோஜெல்லை, ‘இன்சுலேஷன்’ எனப்படும் தட்பவெப்ப தடுப்பானாக சுவர்களில் பயன்படுத்தினால், 30 சதவீத அளவுக்கு குறைக்கலாம் என… Read More

மனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

முதல் முறையாக மனித கரு முட்டைகள் பரிசோதனை மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்திலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய வழிமுறையானது புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுபவர்களின் கருவுறுதலை பாதுகாப்பதற்கான முறையாக இருக்குமென்று இந்த ஆராய்ச்சியை செய்த விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.… Read More

நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் பரப்புவதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது.… Read More

அறிவியலின் மூன்றாவது கண்

வீட்டு வளாகத்துக்குள்தான் தண்ணீர் ஏற்றும் மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், கட்டிடத்துக்கு வெளியே சுற்றுச்சுவருக்குள் பொருத்தப்பட்டிருந்த அதை யாரோ இரவோடு இரவாகக் கழற்றிச் சென்றுவிட்டார்கள். மூன்று நாட்கள் வெளியூர் சென்று விட்டு வந்து பார்த்தால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோ திறந்து கிடக்க, விலை உயர்ந்த பொருட்களைக் காணோம்.… Read More

தாவரங்களை போலியோ தடுப்பு மருந்தாக மாற்றும் முயற்சி வெற்றி?

போலியோ தடுப்பு சக்தியுடையதாக உருவாக்கும் வகையில் தாவர இலைகளை மாற்றியமைத்து கொள்வதில் வெற்றிபெற்றிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தடுப்பு மருந்து தயாரிப்பு முறையை மாற்றியமைக்கும் சாத்தியக்கூறுகளில் முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. இத்தகைய செயல்முறையால், செலவு குறைவாகவும், எளிதாகவும், விரைவாகவும் தடுப்பு மருந்து தயாரிக்கலாம் என்று நோர்ஃபோல்கிலுள்ள ஜான் இன்ஸ் மையத்தின் விஞ்ஞானிகள் அணியினர் கூறியுள்ளனர்.… Read More

உலகை இணைக்கப்போகும் அக்யூலா!

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த மார்க் ஸக்கர்பர்க் என்ற இளைஞரால் 2004-ம் ஆண்டு பொழுதுபோக்காகத் தொடங்கப்பட்ட ஒரு விஷயம், இன்று உலகின் பெருமளவு மக்களால் இணையதளத்தின் உதவியுடன் பயன்படுத்தப்படுகிறது. அதுதான் ஃபேஸ்புக்!… Read More

மனித இனம் பிழைக்க! செவ்வாய் கிரகம் தான் ஒரே கதி!

செவ்வாய்:செவ்வாய் கிரகத்தை, மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு ஏற்றதாக மாற்ற, என்ன செய்ய வேண்டும்? செவ்வாய்க்கு மேலே, அந்தரத்தில், மாபெரும் காந்தக் கருவிகளை நிறுத்தி, அதன் மூலம் காந்தப் புலத்தை கவசம் போல உருவாக்க வேண்டும் என, அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’வின் கோள் அறிவியல் பிரிவுத் தலைவர் ஜேம்ஸ் கிரீன் அண்மையில் தெரிவித்துள்ளனர்.… Read More

இரத்த அழுத்தத்திற்கான காரணம் இதுவா??

லண்டன்: மனித உடலில் பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு இரத்த அழுத்தம் மூலக் காரணமாக உள்ளது. குறைந்த அளவிலான இரத்தம் சோர்வு, அசதி உள்ளிட்டவற்றை உண்டாக்குவதும், உயர் இரத்த அழுத்தத்தால் ஆத்திரம், கோபம் போன்று உடலுக்கும், மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் காரணமாய் இரத்த அழுத்தம் உள்ளது. இதுவரை இரத்த அழுத்தமானது இரத்த நாளங்களினால் ஏற்படுகிறது என்றே மருத்துவர்களால் நம்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இரத்த அழுத்தம் ஏற்பட மூலக் காரணம் இரத்த நாளங்களை சுற்றி இருக்கும் நரம்புகள் தான் என்பது… Read More

இயற்கை உரமாகும் சிறுநீர்!

வெளிநாட்டில் எல்லாம், சாலை ஓரத்தில் யாரும் உச்சா போகமாட்டர்’ என்பது பொய். நம்மூரைப் போலவை, பல வெளிநாடுகளிலும், இந்த பிரச்னை இருக்கிறது. ஆனால், அந்த பிரச்னையை சமாளிக்க, புதுப்புது தீர்வுகளை கண்டுபிடிப்பதிலும், அவர்கள் சளைப்பதில்லை என்பது தான் வித்தியாசம். பிரேசிலில் உள்ள, ரியோ டிஜெனிரோவில், பொது… Read More

முன்பு நினைத்திருந்ததைவிட 10 மடங்கு அதிக நினைவுகளை மனித மூளை சேமிக்கும்: ஆய்வில் தகவல்

முன்பு நினைத்திருந்ததைவிட மனித மூளையின் கொள்ளளவு பத்து மடங்கு பெரியது என ஆய்வில் தெரியவந்துள்ளது. நினைவுகள் சேமிப்பதற்கான பொறுப்பு மூளையின் இணைப்புகளுக்கே உள்ளது. இரண்டு நரம்பு செல்களுக்கும் இடையே உள்ள இணைப்பின் (சினாப்ஸிஸ்) சேமிப்பு திறனை அளவிட்டு ஆராய்ந்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.சராசரியாக ஒரு சினாப்ஸிஸ், 4.7 பிட்கள் தகவல்களை வைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளை ஒரு பெடாபைட் (petabyte) அல்லது 1,000,000,000,000,000 பைட்டுகள் திறனுடையது என்று அர்த்தம்.ஒரு பெடாபைட் என்பது சுமார்… Read More