அர்த்தமுள்ள இந்துமதம்

இந்துமதம் பிற மதங்களை வெறுப்பதில்லை-இந்துமதம் பிற மதங்களை வெறுப்பதில்லை-(அர்த்தமுள்ள இந்துமதம்- கவியரசு கண்ணதாசன்)

இந்துமதம் பிற மதங்களை வெறுப்பதில்லை. சொல்லப்போனால் எல்லா மதங்களையும் தன்னோடு சமமாகவே கருதுகிறது. மதத் துவேஷம், எந்தக் காலத்திலும், இந்துக்களால் ஆரம்பிக்கப்பட்டதில்லை. அதன் பரந்த கரங்கள், அத்தனை மதங்களையும் அணைத்துக்கொண்டே வளர்ந்திருக்கின்றன. ஓர் ஏரியின் நீரைப்போல் பரம்பொருளையும், அதில் இறங்குகின்ற பல படித்துறைகளைப்போல் எல்லா மதங்களையும் பரமஹம்சர் காணுகின்றார்.அன்பின்மூலம் அன்பு வளர்வதைப்போல், வெறுப்பின் மூலம் வளர்வதில்லை என்கிறது இந்துமதம். வெறுப்பு ஒரு குறுகிய கூட்டுக்குள் சதிராடுகிறது. அன்போ, வானையும் கடலையும்போல், அறிவை விரியச் செய்கின்றது. நிலத்தைப் பங்கு… Read More

“பூர்வ ஜென்மம் என்று ஒன்று உண்டா?(அர்த்தமுள்ள இந்துமதம்- கவியரசு கண்ணதாசன்)

பூர்வ ஜென்மத்தின் தொடர்ச்சியாக இந்த ஜென்மத்தில் நாம் நன்மை தீமைகளை அனுபவிக்கிறோம் என்பது உண்மையா?” “ஜென்மங்கள் பற்றிய விஷயத்தில் கடவுளுக்குச் சம்பந்தம் என்ன?” இந்தக் கேள்விகளுக்கெல்லாம் என்னுடைய பதிலைக் கூறுமுன் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பராமாசாரிய சுவாமிகள் எழுதியுள்ள ஒரு சிறு நூலிலிருந்து விஷயங்களை வைக்கிறேன். “கடவுளை நோக்கிச் செய்கின்ற பிரார்த்தனை அல்லது வேண்டுகோள் பலனுடையதாக இருக்குமா? அப்படி ஒரு கடவுள் இருக்கிறாரா? அப்படி இருப்பாரென்றால், நமக்கும் அவருக்கும் எவ்விதத் தொடர்பும் இருக்கின்றதாகத்… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்-(14. கீதையில் மனித மனம்- கவியரசு கண்ணதாசன்)

கவியரசு கண்ணதாசன் அர்ஜுனனுக்குப் பரந்தாமன் உபதேசித்தது பகவத் கீதை. மனிதனின் மனதைப்பற்றி அர்ஜுனனுக்கும் கண்ணனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. கண்ணன் சொல்கிறான்: “அர்ஜுனா, எவன் தன்னையே உதாரணமாகக் கொண்டு இன்ப துன்பங்கள் இரண்டையும் சமமாகப் பார்க்கிறானோ, அந்த யோகிதான் சிறந்தவன் என்பது துணிவு.” அர்ஜுனன் கேட்கிறான்: “மதுசூதனா! உன்னால் கூறப்படும் சமநோக்கத்துடன் கூடிய யோகத்தின் ஸ்திரமான நிலையை என்னால் உணர முடியவில்லை; காரணம், உள்ளம் சஞ்சலமுடையது. கிருஷ்ணா! மனித மனம் சஞ்சலமுடையது; கலங்க வைப்பது; வலிமையுடையது; அடக்க முடியாதது;… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்-(13. நல்ல நண்பன் – கவியரசு கண்ணதாசன்)

நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே தவிர, சாதாரண அறிவினால் கண்டுகொள்ள முடியாது. முகத்துக்கு நேரே சிரிப்பவன், முகஸ்துதி செய்பவன், கூனிக் குழைபவன், கூழைக் கும்பிடு போடுபவன், இவனெல்லாம் நல்ல நண்பன் மாதிரியே தோற்றமளிப்பான். ஆனால் எந்த நேரத்தில் அவன் உன்னைக் கவிழ்ப்பான் என்பது அவனுக்கும்… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்-(12. நல்ல மனைவி - கவியரசு கண்ணதாசன்)

அர்த்தமுள்ள இந்துமதம்-(12. நல்ல மனைவி – கவியரசு கண்ணதாசன்)

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்துமதம் வலியுறுத்துகிறது. `அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’ என்பதே இந்துக்களின் எச்சரிக்கைப் பழமொழி. இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாகக் கொண்டது. அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காமமும் தோன்றும். ஒரு பெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது. அவளைப் பார்க்க வேண்டும், பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்; பேச வேண்டும், பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை வளரும்.அவளைக்… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்-(11. கல்லானாலும்… புல்லானாலும்… – கவியரசு கண்ணதாசன்)

`ஒரு பெண் உத்தமியாக இருக்க வேண்டும்; பத்தினியாக இருக்க வேண்டும்’ என்ற மரபு எல்லா மதங்களிலும் உண்டு. ஆனால் அதை வலியுறுத்தும் கதைகள் இந்து மதத்தில்தான் அதிகம். இந்துப் புராணங்களில் வரும் எந்த நாயகியும் அப்பழுக்கற்ற பத்தினியாகக் காட்சியளிப்பாள். குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண்தான் காரணமாக அமைவாள் என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்துமதம். கற்பு என்பது, நல்ல தாயிடமிருந்து நல்ல மகள் கற்றுக் கொள்வது. அடிப்படையிலிருந்தே அந்த ஒழுக்கம் வளரவேண்டு மென்பதற்கு, இந்துமதம்… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்-(10. மங்கல வழக்குகள் – கவியரசு கண்ணதாசன்)

சுயமரியாதை, சீர்திருத்த இயக்கம் தீவிரமாக இருந்த காலம். கடவுள் ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு என, அது ஆரவாரம் செய்த காலம். அந்த ஆரவாரத்தால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். கறுப்புச்சட்டை போட்டுக் கொள்வதும், மதங்களையும் மதவாதிகளையும் கேலி செய்வதும், அந்த நாளில் இளைஞர்களுக்கு வேடிக்கை விளையாட்டாக இருந்தது. அது ஒரு தத்துவமா?, அதில் பொருள் உண்டா?, பயனுண்டா? என்று அறியமுடியாத வயது. அந்த வயதிலும், அந்த நிலையிலும், இந்துக்களின் மங்கல வழக்குகள் மீது… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்-(9. தாய் -ஒரு விளக்கம் ! கவியரசு கண்ணதாசன்)

பெயர் சொல்ல விரும்பாத ஒரு நண்பர் கீழ்க்கண்ட கடிதத்தை எனக்கு எழுதியிருக்கிறார். அவர் எழுப்பியிருக்கும் ஐயம் சிந்தனைக்குரியது. அதுபற்றி விளக்கம் கூறுமுன், அவரது கடிதத்தை அப்படியே சமர்ப்பிக்கிறேன். `தாயை வணங்கு; தந்தையைத் தொழு; தாயிற் சிறந்ததொரு கோவிலும் இல்லை; கோவிலுக்குச் சென்று அடையும் புண்ணியத்தை விடத் தாயை வணங்கிக் கிடைப்பது பெரும் புண்ணியம்’ என்று, ஒரு வார இதழில் எழுதியுள்ளீர்கள். நானும் சிறிதளவு படித்திருக்கிறேன்; ஆனால் எனக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை; குழம்புகிறது. அதாவது, தாய் எப்படிப்பட்டவராக… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்-(8. ஆணவம் ! கவியரசு கண்ணதாசன்)

`நம்மிடம் ஏதுமில்லை’ என்று நினைப்பது ஞானம். `நம்மைத் தவிர ஏதுமில்லை’ என நினைப்பது ஆணவம். ஞானம், பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றியாகப் பெறுகிறது. ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது. *** நமது புராண இதிகாசங்களில் ஆணவத்தால் அழிந்தவர்களைச் சித்தரிக்காதது மிகவும் குறைவு. ராம காதையில் ராவணன், பாரதத்தில் துரியோதனன், இரணியன், கண்ணனால் கொல்லப்பட்ட நரகாசுரன், கந்தனால் கொல்லப்பட்ட சூரபத்மன் மற்றும் பத்மாசுரன் இவர்களெல்லாம் ஆணவத்தின் அடையாளச் சின்னங்கள். இவர்களுடைய முடிவு கொடுமையானதைக் காட்டி, இந்து… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்-(7. விதிப்படி பயணம்! கவியரசு கண்ணதாசன்)

உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே `விதி’ என்று கூறப்படுகிறது. உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும், அது இறைவன் விதித்ததே. ஜனனம் உலகமெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது. ஆனால் வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது? மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது? நீ கருப்பையில் இருக்கும் போது, நீ போகப் போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும், நேரமும், உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன. நீ எங்கே போனாலும், எப்படி வாழ்ந்தாலும்,… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்-(6.புண்ணியம் திரும்ப வரும் ! கவியரசு கண்ணதாசன்)

ஆனால், செய்த வினையும் செய்கின்ற தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா. நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்த பின்னால்தான் அந்த நிலத்தில் வேறு பயிர்களைப் பயிரிட முடியும். கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோவிலுக்குக் கூட வரமாட்டான்.இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு. என்னிடம் படம் வாங்கிய ஒருவர், படத்துக்காக வசூலான பணம் கணக்குக் காட்டாமல், பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு முப்பதினாயிரம்… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்-(5.மறுபடியும் பாவம் புண்ணியம் கவியரசு கண்ணதாசன்)

இந்து மதத்தைப் பற்றி எழுத வந்து எங்கெங்கோ நடந்த சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறாயே, ஏன்?” என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது. இந்து மதத்தைப் பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், காஞ்சி ஆசாரிய சுவாமிகளும், விரிவுரை நிகழ்த்தும் வாரியாரும், பிறரும் சொல்லாத விஷயங்கள் எதையும் நான் புதியதாகச் சொல்லப் போவதில்லை. ஆனால், அவர்கள் சொன்னபடியேதான் உன் வாழ்க்கை நடக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது என் கடமை. “ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கிறது” என்பது அவர்கள் வாதம். அப்படி… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்-(4.பாவமாம், புண்ணியமாம்! கவியரசு கண்ணதாசன்)

இதுவரை யாருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. இப்போது ஒருவருடைய பெயரைக் குறிப்பிட விரும்புகிறேன். பட அதிபர் சின்னப்ப தேவரை நீ அறிவாய். சிறுவயதிலிருந்தே அவர் தெய்வ நம்பிக்கையுள்ளவர். சினிமாத் தொழிலிலேயே மதுப்பழக்கமோ, பெண்ணாசையோ இல்லாத சிலரில் அவரும் ஒருவர். மிகவும் உத்தமர்கள் என்று சொல்லத்தக்க உயர்ந்தோரில் ஒருவர். முப்பது முப்பத்தைந்து வயதுவரை, அவரது வாழ்க்கை கடுமையான வறுமையிலும் ஏழ்மையிலும் கழிந்தது. அப்போதும் அவர் நாணயத்தையும் நேர்மையையும் விட்டதில்லை. குஸ்தி கோதா நடத்தினார். சிறிய பால் பண்ணை நடத்தினார்.… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்(கவியரசு கண்ணதாசன்)-துன்பம் ஒரு சோதனை

துன்பம் ஒரு சோதனை வெள்ளம் பெருகும் நதிகளும் ஒருமுறை வறண்டு விடுகிறது. குளங்கள் கோடையில் வற்றி மழைக்காலத்தில் நிரம்புகின்றன. நிலங்கள் வறண்ட பின்தான் பசுமையடைகின்றன. மரங்கள் இலையுதிர்ந்து பின் தளிர் விடுகின்றன. இறைவனின் நியதியில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருப்பது மலை ஒன்றுதான். அதுவும் வளர்வதாகவும், அழிவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இறைவன் மனிதனையும் அப்படித்தான் வைக்கிறான். நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்தவனும் இல்லை. நிரந்தரமாகத் துன்பத்தில் உழன்றவனும் இல்லை. முதற்கட்டம் வரவு என்றால், அடுத்த கட்டம் செலவு. முதற்கட்டம் வறுமை… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்(கவியரசு கண்ணதாசன்)-2

2. ஆசை வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது? ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக் கொண்டிருக்கிறது. சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது. அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது. `வேண்டும்’ என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே போகிறது. `போதும்’ என்ற மனம் சாகும்வரை வருவதில்லை. ஐம்பது காசு நாணயம் பூமியில் கிடந்து, ஒருவன் கைக்கு அது கிடைத்துவிட்டால், வழிநெடுக நாணயம் கிடைக்கும் என்று தேடிக்கொண்டே போகிறான். ஒரு விஷயம் கைக்குக் கிடைத்துவிட்டால் நூறு விஷயங்களை மனது வளர்த்துக் கொள்கிறது. ஆசை எந்தக்… Read More

அர்த்தமுள்ள இந்துமதம்(கவியரசு கண்ணதாசன்)- உறவு

உறவு `மனிதன், சமுக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர். காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் `ஊர்’ என்று அழைக்கப்பட்டது. அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் `நகரம்’ என்றழைக்கப்பட்டது. தனி மனிதர்கள் `சமுக’மாகி விட்டார்கள். தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின. அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாகக் கருதப்பட்டுத்… Read More