கிருபானந்த வாரியார்

கிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!

எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்! இந்த ஆசை யாருக்குத்தான் இருக்காது? அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள். இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா? முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர்… Read More

வாரியார் சொல்லும் பக்தி

ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும். கண்ணால் காண முடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலே உள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும்… Read More

கிருபானந்த வாரியார்- பக்திக்கு வேண்டாம் பணம்

ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும். கண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே.… Read More

கிருபானந்த வாரியார்- லட்சுமி கடாட்சம் கிடைக்க வழி

கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை ” அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிறார் மாணிக்கவாசகர். * பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த வடக்கயிற்றைக் கொண்டு பெரிய தேரை இழுத்து விடலாம். ஆனால், தனி இழையான துரும்பினைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரே சிந்தனையுடன்… Read More

கிருபானந்த வாரியார்- அமைதி உங்கள் மனைவி

*சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர். *விடாது கடைந்தால் பாலிலிருந்து வெண் ணெய் வெளிப்படும். அதுபோல, இடைய றாத தியானத்தாலும், வழிபாட்டாலும் இறைவன் நம் உள்ளத்தாமரையில் வெளிப்படுவான். *தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுட்பங்களைக்கூறி மேலும் தெளிவுபடுத்தலாம். ஆனால், இது நல்லது இது… Read More

கிருபானந்த வாரியார்- கடவுளை எளிமையாக வழிபடுங்கள்

உன்னை யாராவது புகழும்போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே. புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மனஅமைதியுடன் வாழ முடியும். ஆண்டவனை வழிபடுவதைக் காட்டிலும், அடியாரை வழிபடுவது சிறந்தது. ஆண்டவனை வழிபட்டால் ஒரு மடங்கு பலன். அடியாரை வழிபடுவோருக்கு இருமடங்கு பலன். தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்கவழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும். நாம் செய்த செயல்களின் விளைவு… Read More

கிருபானந்த வாரியார்- பேசுவதால் பயனேதும் இல்லை

<img src="” alt=”” /> * வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்காக பயிர்களை திருப்பித்தரும். அதைப்போலவே ஒருவர் செய்யும் நன்மையும், தீமையும் பல மடங்காக பெருகி அவரிடமே வந்து சேரும். ஆகவே, எப்போதும் நன்மை செய்பவர்களாகவே இருங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட, நன்மை செய்வதிலிருந்து தவறாதீர்கள். இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும். * சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற… Read More

கிருபானந்த வாரியார்- ஏக்கத்துடன் காத்திருப்போம்

* திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தது நான்கே ஆண்டுகள் தான். அப்போது அவருக்கு வயது 77 இருக்கும். ஆறுநாட்கள் மட்டுமே பக்தனாக முழு அடியவராக வாழ்ந்து இறைவனை அடைந்தவர் கண்ணப்ப நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார் இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிவசிந்தனையோடு வாழ்ந்தார். இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டது பதினாறு வயதில் தான். அவர் கயிலாயம் போனது பதினெட்டாவது வயதில். ஆகையால், பக்திக்கு வயது முக்கியம் இல்லை. * பக்தி இளமையில் வரவில்லையெனில், அதற்குரிய… Read More

கிருபானந்த வாரியார்- இளமையில் வளையுங்கள்

* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம். * எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை. * சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும். * நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய… Read More

கிருபானந்த வாரியார்- குடும்பம் ஒரு மரம்

* ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகி னாலும் அளந்து பழகாவிட்டால் துன்பம் வந்து சேரும். * நம் உடம்பின் அளவுகோல் கண். கண்ணின் தன்மையைக் கொண்டே அவன் எப்படிப் பட்டவன் என்பதை கணக்கிட்டு விடலாம். மனிதனின் மனநிலையைக் கண்களே காட்டிக் கொடுத்து விடும். * இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தூக்கம் வந்தால்… Read More

கிருபானந்த வாரியார்- தியானத்தை விட சிறந்தது எது

வேண்டாமே பரபரப்பு! * ஏழைகளையும், இயலாமையால் வருந்துபவர்களையும் ஆணவத்தால் இழிவாக நடத்துபவன் மறுபிறப்பில் அதற்கான தண்டனையை அடைவான். * எல்லா உயிர்களும் ஈசனின் கோவில்களே. அதனால், எல்லா உயிர்களையும் மதிப்பது நம் கடமையாகும். இதுவே மேலான அறமாகும். *உணவருந்தும் போது வேண்டாத பரபரப்பும், வேகமும் கூடாது. அதே நேரத்தில் வேண்டாத கால தாமதமும் கூடாது. * உயிர்களிடம் அளவு கடந்த கருணை‌யோடு இருந்தால் அன்றி கடவுளின் பூரண அருளைப் பெற முடியாது. * கடவுள் இல்லவே இல்லை… Read More

கிருபானந்த வாரியார்- முருகனுக்குள் பிள்ளையார்

* இறைவன் ஒருவன் தான். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொன்னார் திருமூலர். கடவுளை நாம் தான், நமக்குப் பிரியமான வடிவத்தில் குழந்தையாகவும், தாயாகவும், பெருமானாகவும் வைத்து வணங்குகிறோம். இஷ்டப்பட்ட ஒரு வடிவம் மனத்தில் தங்கி விடுகிறது. * நெருப்பு என்று எடுத்துக் கொண்டால் அது சிவபெருமானின் வடிவம். அதன் சூடு பராசக்தி. அதன் செம்மை மகாகணபதி. அதன் ஒளி முருகப்பெருமான். எல்லாமே ஒன்று தான். ஆனால், அந்த ஒரே பொருளை வெவ்வேறு வாயிலாக நாம்… Read More

தாயினும் சிறந்தவர் கடவுள்-கிருபானந்த வாரியார்

* கண்ணால் பார்க்க முடியாது என்பதால் “கடவுள் இல்லை’ என்று சொல்லக்கூடாது. இந்த உடம்புக் குள்ளே உறைந்திருக்கும் உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? கண்ணால் காணமுடியாது என்பதால், நாம் உயிர் இல்லாதவர்கள் என்று கூறுவது சரியா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் இறைவனும் உறைந்திருக்கின்றனர். * சின்னஞ்சிறு உதவியைச் சரியான நேரத்தில் செய்தவர்களையே நாம் நன்றியோடு நினைக்க வேண்டும். ஆனால், இறைவன் செய்தது சிறு உதவியா? இல்லை பேருதவியாகும். தாயினும் சாலப் பரிந்து நம் மீது அன்பு… Read More

இளமையில் உழைப்போம்-கிருபானந்த வாரியார்

* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம். * எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை. * சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும். * நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய… Read More

குளிர் அறையில் கொதிப்பு-கிருபானந்த வாரியார்

பிறரை ஏமாற்றிப் பிழைப்பது கூடாது. யாசகம் வாங்கி சோம்பேறியாக வாழ்வதும் கூடாது. பிறர் பொருளில் நெய்யும் பாலும் உண்பதைக் காட்டிலும் தன் உழைப்பினால் தண்ணீரும் சோறும் உண்பதே சிறப்பானதாகும். மூன்று பொருள்களை மிச்சமாக வைக்கக் கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவை நெருப்பு, கடன், பகை என்று குறிப்பிடுகின்றன. நெருப்பு மிச்சமிருந்தால் அந்த இடத்தையே பொசுக்கிவிடும். கடன் மிச்சமிருந்தால் வளர்ந்து சுமையாகி விடும். பகைவன் மிச்சமிருந்தால் சமயம் பார்த்து நம்மை அழித்து விடுவான். எந்த நேரம் இறைவனுடைய… Read More

லாபம் நமக்கு மட்டுமே!

* பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும். * “அரசு ஒழிக’ என்று கோஷம் போடும் கைதிகளை சிறையில் அடைத்தாலும் அவர்களுக்கு உணவு போட வேண்டியது அரசனின் கடமையே. அதுபோல கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவரையும் கடவுள் காப்பாற்றவே செய்கிறார். * சத்தியத்தைப் பேசுதல், தர்மத்தை அனுசரித்தல், தாய்தந்தையரைப் போற்றுதல், தெய்வ… Read More

எது நம்முடைய நேரம்?

* உலகில் மக்கள் செய்யும் பிழைகளுக் கெல்லாம் தலையாய பெரிய பிழை அறிவு தரும் நல்ல நூல் களைக் கல்லாமையே ஆகும். நல்ல நூல்களைக் கற்கும் போது, அறிவு மேம்படும். அதனால் தான் இறை வனை கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி என்பர். * மனிதனை உயர்த்துவது பணமன்று, பதவியும் அன்று, குலமும் அன்று, பருமனும் அன்று, உயரமும் அன்று. அது எதுதான் என்றால் அறிவு மட்டுமே. வள்ளுவர் இதனையே அறிவுடையார் எல்லாம் உடையார்’ என்று குறிப்பிடுவார்.… Read More

இறைவன் விரும்பும் நைவேத்யம்

* உயர்ந்த வழிபாட்டை “சமாராதனை’ என்று குறிப்பிடுவர். “சம்’ என்றால் “நல்ல’, “ஆராதனை’ என்றால் “வழிபாடு’ என்பது பொருள். ஏழைக்குச் சேவை செய்வது சமாராதனை எனப்படும். * கோயிலில் ஆடம்பரத்துடன் படைக்கும் பொங்கலை இறைவன் ஏற்கிறானா என்பது சந்தேகமே. ஆனால், ஏழைகளுக்காக தானம் செய்வதற்காக தயாரிக்கப்படும் பொங்கலை, இறைவன் மிக விருப்பத்தோடு உகந்து ஏற்பான். * நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலர் என்னும் சித்தர், கோயிலில் இருக்கும் இறைவனை “படமாடும் கோயில்’ (சிற்பம்) என்றும், ஏழை… Read More

இளமையில் உழைப்போம்- கிருபானந்த வாரியார்

* எதனையும் பலமுறை மனதில் சிந்தனை செய்யுங்கள். ஒருவர் போன வழியில் சிந்திக்காமலேயே பின்பற்றிச் செல்வது மூடத்தனம். * எங்கும் நிறைந்த இறைவனை எளிதாகக் கிடைக்கும் பூவினாலும், நீராலும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். அன்பும், ஆசாரமும் இரண்டு கண்கள் போன்றவை. * சுகமாக வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும். * நாவின் சுவைக்காக நல்லுணவைத் தேடி அலையாதீர்கள். இறையருளால் அன்றாடம் கிடைக்கும் எளிய… Read More

மனைவியிடம் கோபிக்காதீர்கள்–கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்

மனைவியிடம் கோபிக்காதீர்கள் நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும். பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும். மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும். மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக்கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது. ஒரு மனிதனோடு… Read More