விவேகானந்தர்

விவேகானந்தரின் விளக்கம்!

ராஜபுதனத்தில் ஆழ்வார் என்று ஒரு சமஸ்தானம் இருந்தது. ஒரு தடவை சுவாமி விவேகானந்தர் அந்த சமஸ்தான மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார். விவேகானந்தரின் ஆன்மிகப் பெருமையையும், அவருடைய அறிவாற்றலையும் கேள்விப்பட்டிருந்த மன்னர், விவேகானந்தரை தனது அரண்மனையிலேயே தங்கவைத்து மிகுந்த உபசாரம் செய்தார். அந்த சமஸ்தான மன்னருக்குப் பொதுவாக இந்து மதத்தின் மீது பற்றும், நம்பிக்கையும் இருந்தாலும், பலவிதமான மூட நம்பிக்கைகளால் இந்து மதத்தின் சிறப்புக்கு மாசு ஏற்படுகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார். இந்து மதத்தில் வழக்கமாக… Read More

மிரள வைத்த விவேகானந்தரின் `வலிமை’

ஒருமுறை ராஜஸ்தான் மாநிலத்தில் சுவாமி விவேகானந்தர் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அவர் இருந்த பெட்டியில் அவரைத் தவிர 2 வெள்ளையர் இருந்தனர். விவேகானந்தர் அணிந்திருந்த காவி உடையை பார்த்த அவர்கள், அவருக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துக் கொண்டு அவரை கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தனர். திட்டவும் கூட செய்தனர். இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த விவேகானந்தர் அமைதியாகவே இருந்தார். தனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதை காட்டிக்கொள்ளவே இல்லை. ஒரு ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றதும்,… Read More

குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர்

யார் மீது ஆன்மிக உணர்வு பெறுகிறோமோ அவரே நமக்கு உண்மையான குரு. ஆன்மிகப் பெருவெள்ளம் நம்மிடம் பாய்வதற்கான கால்வாய் அவர். தனிமனிதரை நம்புவது பலவீனத்திலும் உருவவழிபாட்டிலும் தான் கொண்டுபோய்விடும். ஆனால், ஆழ்ந்த குரு பக்தி நம்மைவிரைவில் முன்னேறச் செய்யும். உண்மையான குரு இருந்தால் அவரை மட்டுமே வணங்கு. அது மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.பகவான் ராமகிருஷ்ணர் குழந்தையைப் போல தூய்மையானவர். அவர் ஒரு போதும் பணத்தை தன் மனதாலும் தொட்டதில்லை. காமசிந்தனை அவரிடத்திலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டது. பெரிய… Read More

உன்னை பலவீனன் என எண்ணாதே -சுவாமி விவேகானந்தர்

செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும். முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும், மேலும் அவ்வப்போது நம்மிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும், நம்பிக்கை இருந்தாலும் கூட, ஒருவனிடத்தில் தன்னம்பிக்கை இல்லாவிட்டால் அவனுக்குக் கதி மோட்சமில்லை. பாவம் என்ற ஒன்று உண்டென்றால், அது நான் பலவீனமானவன், மற்றவர்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது ஒன்றுதான். சுதந்திரமானவனாக இரு. எவரிடமிருந்தும் எதையும்… Read More

மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு -சுவாமி விவேகானந்தர்

துன்பங்களிலும் போராட்டங்களிலும் உழலும் போது இந்த உலகம் பயங்கரமானதாக நமக்குத் தோன்றுகிறது. இரண்டு நாய்க்குட்டிகள் கடித்து விளையாடிக் களிப்பதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது ஒரு விளையாட்டு, சற்று காயப்படும்படி அவை கடித்துக் கொண்டாலும் அதனால் தீங்கு எதுவும் விளையாது என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே நமது போராட்டங்கள் எல்லாம் இறைவனின் கண்களுக்கு விளையாட்டே. இந்த உலகம் விளையாட்டுக்கென்றே அமைந்தது. அது இறைவனைக் களிப்படைய செய்கிறது. எதற்காகவும் அவன் கோபம் கொள்வதில்லை. அம்மா! வாழ்வெனும் கடலில்… Read More

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும் -சுவாமி விவேகானந்தர்

* எல்லா நாடுகளுக்குள்ளும் நம் நாடு பலவீனமாகவும், பின்தங்கியும் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் நம் நாட்டில் பெண்மை அவமானம் செய்யப்படுவதேயாகும். * ”எங்கெல்லாம் மாதர் உயர்வாக நடத்தப்படுகிறார்களோ, அங்கெல்லாம் தேவர்கள் மகிழ்ச்சியுடன் வாசம் செய்வார்கள்,” என்று புராதன மனு கூறியுள்ளார். * பெண்களின் முன்னேற்றமும், பொதுமக்களின் விழிப்பும் நம் நாட்டில் ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் நமது நாட்டிற்கு உண்மையான நன்மை ஏதாவது ஏற்படும். * மாதர் தங்களுடைய பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் நிலையில் வைக்கப்பட… Read More

சகிப்புத்தன்மை வேண்டும் -சுவாமி விவேகானந்தர்

மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு. நாத்திகனுக்கு தர்மசிந்தனை இருக்கலாம். ஆனால், மதகோட்பாடு இருக்க இயலாது. மதத்தில் நம்பிக்கை வைத்தவனுக்கு தர்மசிந்தை அவசியம் இருக்க வேண்டும். குருவாகப் பிறந்த ஆன்மாக்களைத் தவிர, மற்றவர்களும் குருவாவதற்கு விரும்பி அழிந்தும் போகின்றனர். நாம் செல்வச் செழிப்போடு வாழ்ந்தாலும், இறந்துவிட்டபின் இவை நம்முடன் வருமா? நாம் அழியும் செல்வத்தைச் சேர்க்க நினைப்பதைவிட அழியாத ஒன்றைப் பெறுவதுதான் ஆண்மைக்கு அழகு. செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக… Read More

நீ தான் அனைவருக்கும் தலைவன் – சுவாமி விவேகானந்தர்

* பாவங்களிலேயே மிகப்பெரிய பாவம், நீ உன்னைப் பலவீனன் என்று நினைப்பதே. உயர்ந்தவர் என்று யாரும் இல்லை. நீ பிரம்மமே என்பதை உணர். நீ கொடுக்கும் சக்தியைத் தவிர வேறு எங்கும் எந்தச் சக்தியும் இல்லை. சூரியனையும், நட்சத்திரங்களையும், பிரபஞ்சத்தையும் கடந்தவர்கள் நாம். மனிதனின் தெய்வீகத் தன்மையை அவனுக்குச் சொல். தீமையை மறுத்துவிடு, எதையும் உண்டுபண்ணாதே. எழுந்து நின்று, ‘நானே தலைவன், அனைத்திற்கும் நானே தலைவன்’ என்று கூறு. நாமே தடையை உண்டாக்கிக் கொள்கிறோம். நம்மால்தான் அதனை… Read More

உழைக்கும்போதே உயிர் பிரியட்டும் -விவேகானந்தர்

* தங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும் தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையிலே உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். * மற்றவர்களுக்காக நாம் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும் நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது. மற்றவர்களுடைய நன்மையைக் குறித்துச் சிறிதளவு நினைப்பதுங்கூடச் சிங்கத்திற்குச் சமமான ஆற்றலை நமது இருதயத்திற்குப் படிப்படியாகத் தருகிறது.… Read More

லட்சியம் இல்லாமல் வாழாதே -விவேகானந்தர்

இளைஞர்களே! பெருஞ்செயல்களை செய்து முடிப்பதில் எப்போதும் முன்னேறிச் செல்லுங்கள். ஏழைகளிடமும், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்டவர்களிடமும் இரக்கம் காட்டுங்கள். நமக்கு மரணமே வாய்த்தாலும்கூட அவர்களுக்கு இரக்கம் காட்டுவது நமது லட்சியம் ஆகும். என்னுடைய லட்சியத்தை உண்மையில் சில சொற்களில் சொல்லி முடித்துவிடலாம். அதாவது, மக்களுக்கு அவர்களுடைய தெய்வீகத் தன்மையை எடுத்துச் சொல்வதும், வாழ்க்கையின் ஒவ்வொரு இயக்கத்திலும் அதை எப்படி வெளிப்படுத்திக் காட்டுவது என்பதை எடுத்துச் சொல்வதும்தான் அது. எழுந்திருங்கள். விழித்திருங்கள். நீங்களும் விழித்திருங்கள், மற்றவர்களையும் விழிக்கச் செய்யுங்கள். உங்களுடைய இந்த… Read More

புதிய இந்தியாவை உருவாக்குங்கள்

உண்மை, அன்பு, நேர்மை ஆகியவற்றை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. நீ நேர்மை உள்ளவனாக இருக்கிறாயா? உயிருக்கே ஆபத்து வந்தாலும் சுயநலமில்லாதவனாக இருக்கிறாயா? அன்பு செலுத்துபவனாக இருக்கிறாயா? அப்படியானால் மரணத்துக்கும் நீ அஞ்ச வேண்டியதில்லை. பரந்த இந்த உலகம் ஒளியை வேண்டுகிறது. அதை எதிர்பார்க்கிறது. இந்தியா மட்டும் அத்தகைய ஒளியை பெற்றிருக்கிறது. ஜால வித்தையிலே இந்தியா அந்த விளக்கை பெற்றிருக்கவில்லை. போலித் தன்மையினாலும் அந்த விளக்கை பெற்றிருக்கவில்லை. ஆனால், உண்மையான மதத்தின் தலை சிறந்த சமய போதனையாகவும்,… Read More

புல்லைத் தின்னும் மிருகங்கள்

பக்தி என்பது தூய்மையை அடிப்படையாக கொண்டே எழுகிறது. புறத்தூய்மையை எளிதாக மாற்றிவிடலாம். ஆனால், அதைக் காட்டிலும் மேன்மையான அகத்தூய்மையை மாற்ற முடியாது. அகத்தூய்மையே பக்திக்கு ஆதாரமாக அமைகிறது. உண்மை, தயவு, அகிம்சை, அன்பு ஆகிய குணங்களைக் கொண்டும், பிறரது பொருளை விரும்பாமலும், வீண் எண்ணங்கள் இல்லாமலும், பிறரால் ஏற்படும் இன்னல்களைக் குறித்து வருந்தாமலும் இருந்தால் அகத்தூய்மை யை அடையலாம். எண்ணம், சொல், செயல் இவற்றால் பிற உயிர்களுக்கு துன்பம் விளைவிக்காமல் இருக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருக்க… Read More

(Untitled)

மரணத்தை வென்றவர் யார்? * மனதை தூய்மைப்படுத்துவதே மனிதனின் முதல் கடமை. மனதை தூய்மைப்படுத்த மலைக்குகைகளிலும், வனங்களிலும், புண்ணியக்ஷத்திரங்களிலும் அலைந்து திரிந்து பயனில்லை. * மனம் என்னும் கண்ணாடியை மனிதன் தூய்மையாக்கிய பிறகு, அவன் எங்கு வசிக்கிறான் என்ற பேச்சுக்கே இடமில்லை. தூய்மையான உள்ளத்தில் கடவுளாகிய மெய்ப்பொருள் உள்ளபடி ஒளிர்கிறார். * வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை மனிதன் விட்டொழிக்க வேண்டும். வெவ்வேறு இடங்களுக்கு ஓடுவதால் தனது வலிமையை மனிதன் வீணே இழக்கிறான். *… Read More