3000 எலக்ட்ரோட்.. இதுதான் எதிர்காலம்.. மனித மூளைக்குள் நானோ சிப் வைக்கும் எலான் மஸ்க்.. என்ன பிளான்?
மனித மூளையில் சிப்களை பொருத்தி, கணினிகள் மூலம் அதை கட்டுப்படுத்தும் திட்டம் ஒன்றை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மனிதர்களின் நோய்களை குணப்படுத்த இந்த சிப்கள் உதவும் என்று அவர் கூறியுள்ளார். யோசித்து பார்க்கவே திகிலூட்டும் இந்த டெக்னலாஜி குறித்து விசித்திரமான அறிவிப்பு ஒன்றை மஸ்க் இன்று வெளியிட்டார்.… Read More

கடலுக்குள் புதைக்கப்பட்ட பூமியின் 8 ஆம் கண்டம் பற்றிய திடுக்கிடும் தகவல்! வரைபடத்தை வெளியிட்ட குழு!
பூமியில் தற்போது வரை ஏழு கண்டங்கள் ஒட்டுமொத்த கிரகத்தின் குறுக்கே பரவியுள்ளது என்று கூறிவந்தனர். பூமியில் ஏழு கண்டங்கள் இருக்கிறது என்பது முற்றிலுமான ஒரு பெரிய பொய் என்று GNS விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது. இவர்களின் கணக்குப்படி பூமியில்… Read More
இப்படி தூங்கினால் அப்படி இருப்பீர்கள்!
நோய்கள், மருந்துகள், சிகிச்சைகள் என தீவிர மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு நடுவில் ரிலாக்ஸ் சர்வே இது. இங்கிலாந்தை சேர்ந்த தூக்கவியல் சிறப்பு மருத்துவரான க்ரிஸ் இட்ஸிகோவ்ஸ்கி, ‘ஒருவர் தூங்கும் முறையை வைத்தே அவரது தனிப்பட்ட சுபாவத்தைச் சொல்லிவிட முடியும்’ என்பதைத் தன்னுடைய ஆய்வின் முடிவாகக் கூறியிருக்கிறார்!”ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமான… Read More
`பின்புறத்தை’ப் பாதிக்கும் இருக்கைப் பணி!
அலுவலகத்தில் நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து பணிபுரிவது நமது ஆசனப் பகுதியைப் பாதிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். `டெஸ்க் டெர்ரீர்’ எனப்படும் இந்தப் பாதிப்பு, சில சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டார்கள். அவர்கள், அதிக நேரம் இருக்கையில் அசையாமல் அமர்ந்து வேலைபார்ப்பவர்களின் `பின்புறத்தை’ ஸ்கேன் செய்தார்கள். அப்போது, அவர்களின் ஆசனப் பகுதி தசைகள் சுருங்கியும், சேதமடைந்தும் இருப்பது தெரியவந்தது. அதிக நேரம் அமர்ந்து, அலட்டிக்கொள்ளாமல் வேலை… Read More
சாக்லேட் ஆசையா? வேலையில் `அலுப்பு’!
அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது, கொஞ்சம் சாக்லேட் சாப்பிடலாம் அல்லது ஒரு கோப்பை சூடான காபி அருந்தலாம் என்று தோன்றுகிறதா? நீங்கள் நிச்சயம் `போரடித்து’ போயிருக்கிறீர்கள். இங்கிலாந்தின் மத்திய லங்காஷயர் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் இதுதொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அலுவலகப் பணி புரியும் சுமார் 100 பேரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள், தங்களுக்குப் பணியின்போது போரடித்தால் நொறுக்குத் தீனிகளைக் கொறிப்பதாகவும், காபி போன்ற பானங்களைப் பருகுவதாகவும் தெரிவித்தனர். “வேலையில் ஒருவருக்கு போரடிக்கிறதா, இல்லையா என்பது, வேலை எந்தளவு… Read More
`வாசம்’ பிடித்தால் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்!
ஒருவர் எப்படிப்பட்டவர் என்று அறிய வேண்டுமா? அவரது வாசத்தைக் கொஞ்சம் மோப்பம் பிடித்தாலே போதும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதுதொடர்பான ஆய்வை போலந்து நாட்டு விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். அவர்கள் தங்கள் ஆய்வுக்கு உதவிய தன்னார்வலர்களிடம், சிலரின் ஆடை மணத்தை மோப்பம் பிடிக்கச் செய்து, அதன் மூலம் அவர்களைப் பற்றிக் கணிக்கச் செய்தனர். அப்போது அவர்களின் கணிப்பு முழுக்க முழுக்கச் சரியாக இல்லாவிட்டாலும், பெரும்பாலும் பொருந்துவதாக இருந்தது. நமக்கு ஒருவரைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதில், காணும், கேட்கும் விஷயங்களுடன்,… Read More
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!
உங்களுக்கு `ஸ்லிம்’ ஆக ஆசை இருக்கிறதா? அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து மூடிக்கொண்டு தூங்குவதை விடுத்து, அதிகாலையிலேயே விழித்தெழுங்கள் என்கிறது ஒரு ஆய்வு. அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பதும், விடிய விடிய வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுவதும் இந்த ஆய்வில் தெரிய வந்தது. மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் அவர்களின்… Read More
`ஷாப்பிங்' சந்தோஷம் தரும்!
`மனம் சோர்ந்துபோய் கிடக்கிறதா? `ஷாப்பிங்’ செல்லுங்கள், சந்தோஷம் மனதை நிறைக்கும்’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். `ஷாப்பிங்கில் உங்களுக்கு நீங்களே பரிசளித்துக்கொள்ளுங்கள். அது உங்கள் மனநிலையில் நீடித்த, ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என்று அவர்கள் உறுதிபடத் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இதுதொடர்பான ஆய்வில், ஷாப்பிங் வந்த நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் கேள்விகள் கேட்டுப் பதில்கள் பெறப்பட்டன. அத்துடன், குறிப்பிட்ட நபர்கள் தங்களின் ஷாப்பிங் பழக்கம், வாங்கிய பொருட்கள், அப்போது தங்களுக்கு இருக்கும் மனநிலை பற்றியும் `டைரி’யில் குறித்து வரும்படி கூறினர். ஷாப்பிங்… Read More
இரண்டும் பெண் குழந்தையா? சந்தோஷப்படுங்க..!
– புதிய ஆய்வில் சுவாரஸ்ய உண்மைகள் 2 பெண் குழந்தைகள் இருக்கும் வீடுதான் ஆனந்தமயமான வீடு என்கிறது புதிய ஆய்வு. `ஆசைக்கொரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண்’ என்று நம்மூரில் பழமொழி சொல்வார்கள். முதல் குழந்தை பெண்ணாகப் பிறந்தால் `மகாலட்சுமியே வந்துவிட்டாள்’ என்று மகிழும் பெற்றோர் இருக்கிறார்கள். ஆனால் அடுத்த குழந்தையும் பெண்ணாகப் பிறந்தால், `ஏழு லோகத்திலும் இல்லாத சங்கடம் எனக்கு வந்துவிட்டது’ என்று வருந்த தொடங்குவார்கள். இனி அப்படி சங்கடப்பட வேண்டியதில்லை. இரண்டும் பெண் குழந்தைகள்… Read More
பயம் தரும் இடதுகைப் பழக்கம்!
இடது கை பழக்கம் குறித்த ஆய்வு ஒன்று இப்படி கூறுகிறது. அதாவது, திகில் காட்சிகள் நிறைந்த ஒரு திரைப்படத்தை பார்த்து அதிகம் பயந்தவர்கள் இடது கை பழக்கமுள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. தாங்கள் பார்த்த அந்த திரைப்படம் பற்றி கருத்து கேட்கப்பட்ட போது இடது கை பழக்கமுள்ளவர்கள் மிகவும் பயந்து போனவர் களாக காணப்பட்டார்கள். மேலும், இவர்களது கருத்துக்களும் கோர்வையாக இல்லை. தங்களது இந்தக் கண்டுபிடிப்பு, அச்சம் தரும் சூழ்நிலைகளுக்கும் அப்போது ஏற்படும் மூளையின் செயல்பாடுகளுக்குமுள்ள தொடர்பு குறித்த… Read More
புத்தகம் வாசிக்கும் பழக்கம் மன அழுத்தத்தை குறைக்கும் ஆய்வில் தகவல்
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் ஸ்கூல் ஆப் மெடிசின் பல்கலைகழகத்தின் மருத்துவ துறையின் பேராசிரியர் பிரையன் ப்ரைமேக் தலைமையிலான குழு ஆய்வொன்று நடத்தியது. அதில், டீன்&ஏஜ் பருவத்தை அடைந்த 106 பேர் கலந்து கொண்டனர். அவர்களிடம், இசை, திரைபடங்கள் அல்லது டி.வி., நாளிதழ்கள், இணையதளம், புத்தகங்கள் மற்றும் வீடியோ கேம்ஸ் ஆகிய 6 வகை ஊடகங்களின் பயன்பாடு குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக இரு மாதங்களாக 60 முறை அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த ஆய்வில், இசையை அதிகமாக கேட்கும்… Read More
காபி, டீ அதிகமாக குடிப்பதற்கு மரபணு தொடர்களே அடிப்படை: ஆய்வாளர்கள் கருத்து
அமெரிக்காவின் மேரிலேண்ட் என்ற இடத்தில் அமைந்துள்ள தேசிய புற்றுநோய் கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் நீல் கேபோராசோ என்பவர் ஆய்வு ஒன்று மேற்கொண்டார். அந்த ஆய்வானது காபீன் என்ற பொருள் அடங்கிய டீ, காபி, சாக்லேட், குளிர்பானம் போன்றவற்றை அதிகமாக எடுத்து கொள்வதை அடிப்படையாக கொண்டு அமைந்தது. இதற்காக ஏறத்தாழ 40 ஆயிரம் பேர் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்பட்டனர். அதில், இரண்டு மரபணு தொடர்கள் காபீன் என்ற பொருளை அதிகமாக உட்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது என… Read More

உலக மொழிகளின் பிறப்பிடம் ஆப்பிரிக்கா: ஆய்வில் தகவல்
ஆஸ்திரேலிய நாட்டில் அமைந்துள்ள குயின்ஸ்லாண்ட் பல்கலைகழகத்தின் ஆய்வாளர் குயென்டின் அட்கின்சன் என்பவர் தலைமையில் முதன்முதலில் மொழியானது எங்கு தோன்றியது என ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்க கண்டத்தில் வாழ்ந்த கற்கால மனிதர்களின் பேச்சில் இருந்து தான் தற்போது பரவலான மக்களால் பேசப்படும் மொழிகளான ஆங்கிலம், வங்காளம், ஜப்பான் மற்றும் இந்தி உட்பட உலகின் பல்வேறு மொழிகளும் தருவிக்கப்பட்டுள்ளன என தெரிய வந்துள்ளது. இந்த ஆய்விற்காக அட்கின்சன், உலகளவில் பேசப்படும் 504… Read More
தனிமையா…? `சிக்கன் சூப்’ குடிங்க!
`தனிமையில் வாடுகிறீர்களா…? `சிக்கன் சூப்’ பருகுங்க’ என்கிறார்கள் ஆய்வாளர்கள். `சிக்கன் சூப்’, உருளைக்கிழங்கு மசியல், பாலாடைக்கட்டியுடன் `மக்ரோனி’ போன்றவை நலமளிக்கும் உணவுகள். தனிமையால் ஏற்படும் வெறுப்பை, விரக்தியை அவை போக்கும் என்கிறார்கள் அமெரிக்க விஞ்ஞானிகள். உளவியல் அறிவியல் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையில் அவர்கள் இத்தகவலைத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த உணவுகள் ஒருவேளை ரத்த நாளங்களுக்கு நன்மை பயப்பதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால், சலிப்பான உணர்வுகளைத் தணிய வைக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். நன்றாக இருக்கும் அல்லது திருப்திகரமான உணர்வைத்… Read More
நல்லது, கெட்டது குழந்தைகளுக்கும் தெரியும்!
`எது சரி, எது தவறு’ என்பதெல்லாம் வளர்ந்தவர் களுக்குத்தான் தெரியும், குழந்தைகளுக்குத் தெரியாது என்று நாம் நினைக்கிறோம், கூறுகிறோம். ஆனால், எது சரியல்ல என்பது குழந்தைகளுக்கும் தெரியும், ஒரு விளையாட்டில் எவ்வாறு நியாயமாக நடக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள். இதுதொடர்பான ஆய்வை ஒரு சர்வதேச ஆய்வுக் குழு மேற்கொண்டது. இதில், மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஒரு முயற்சியில் வெற்றி பெற்றால், சில பரிசுப் பொருட்களைப் பெறுமாறு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில், பரிசுப்பொருள்களை… Read More
முன்னோர் வழிபாடு வெற்றிக்கு வழிவகுக்கும்: ஆய்வில் தகவல்
சாதாரணமாக எந்தவொரு நல்ல செயல் ஆரம்பிப்பதற்கு முன்பும் இறைவனை வழிபடுவது பெரும்பாலானோரின் வழக்கம். சிலர் தங்களது பெற்றோரிடம் ஆசி பெறுவர். மேலும் சிலர் தங்களது முன்னோர்களை நினைத்து ஒரு செயலை தொடங்குவார்கள். தற்போது இதனை மெய்ப்பிக்கும் வகையில் ஆஸ்திரிய நாட்டில் அமைந்துள்ள கிராஸ் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்களின் ஆராய்ச்சி முடிவுகள் அமைந்துள்ளன. தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கிறது என அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.… Read More
பெண்களின் கண்ணீர் அவர்களை பாதுகாக்கிறது: ஆராய்ச்சியில் தகவல்
பெண்கள் தங்களது அழுகையினால் காரியம் சாதிக்க கூடியவர்கள் என்று கூறப்படுவதுண்டு. ஒருவரின் காதலியோ அல்லது மனைவியோ அழும்போது அதனை அவரால் தாங்கி கொள்ள முடிவதில்லை. எவ்வளவு கல் நெஞ்சு படைத்தவராக இருந்தாலும் அவரையும் கரையச்செய்து விடும் பெண்களின் அழுகை. இதற்கு அறிவியல் ஆய்வின் அடிப்படையில் விளக்கம் பெறும்போது, பெண்களின் கண்ணீரில் ஒரு வித வேதிபொருள் காணப்படுகிறது. அது அவர்களை பார்க்கும்போது களையிழந்து காணப்படுவது போல் தோன்ற செய்கிறது. அழும் பெண்ணின் முகம் இந்த வேதிபொருளால் பொலிவு இழப்பதால்… Read More
பகலில் தூங்குவது நல்லது!
நீங்கள் பகலில் சற்று நேரம் குட்டித்தூக்கம் போடும் பழக்கம் உள்ளவரா? சங்கடத்தோடு `ஆமாம்’ என்று தலையசைக்காதீர்கள். நண்பகல் வேளையில் சிறிது நேரம் கண்ணயர்வது உடம்புக்கு நல்லது என்று ஜெர்மனி ஆராய்ச்சி யாளர்கள் இருவர் கண்டறிந்து கூறியுள்ளனர். ஜெர்மனியின் மாக்ஸ்பிளாங்க் உளவியல் அமைப்பைச் சேர்ந்த ஜுர்கன் சுல்லே, ஸ்காட் காம்பெல் ஆகிய இருவரும் மதிய உறக்கம் பற்றிக் கூறுகையில், இது நல்லது என்பதுடன், திறமையாக வேலை செய்யவும் உதவுகிறது என்று தெரிவித்துள்ளனர். அந்த விஞ்ஞானிகள் இதுபற்றி விரிவாக நடத்திய… Read More
குடிப்பதால் ஆண்களுக்கு அதிக சந்தோஷம்!
பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்கள் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் வாய்ப்பு இருமடங்கு அதிகம். `இதிலென்ன ஆச்சரியம் இருக்கிறது… ஆண்கள்தானே அதிகமாகக் குடிக்கிறார்கள்?’ என்கிறீர்களா? குடியால் பெண்களை விட ஆண்களுக்கு அதிக இன்பம் தூண்டப்படுகிறதாம். ஆணும், பெண்ணும் ஒரே அளவு மதுபானத்தை அருந்தினாலும், ஆணுக்கே அதிக இன்பம் கிட்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மதுவானது மனித மூளையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அமெரிக்காவின் கொலம்பியா மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இளைஞர்- இளைஞிகளிடையே மதுபானப் பழக்கத்தை அவர்கள் ஒப்பிட்டு… Read More