உபயோகமான தகவல்கள்

Please don’t delete this without forwarding. Let it reach the 120 Crores Indians and the remaining if any. Kindly, share this valuable information wherever possible.

Please don’t delete this without forwarding. Let it reach the 120 Crores Indians and the remaining if any. Kindly, share this valuable information wherever possible. 1. If you see children Begging anywhere in INDIA , please contact: “RED SOCIETY” at 9940217816. They will help the children for their studies. 2. Where you can search for any… Read More

திருமணத்தை பதிவு செய்வதுதான் பெஸ்ட்!

திருமணத்தை பதிவு செய்வதுதான் பெஸ்ட்!

அது ஒரு காலம். பதிவுத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்றாலே வீட்டுக்குத் தெரியாமல், அல்லது வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொள்பவர்களுக்கு ஏற்ற திருமணமுறை அது என்ற நிலை. தமிழ் சினிமாக்களைப் பொறுத்தவரை இப்போதும் அப்படித்தான் என்றாலும் உண்மை நிலை மாறிவிட்டது. பதிவுத் திருமணத்தைப் பொறுத்தவரை பலவித தவறான நம்பிக்கைகள் உலவுகின்றன. அவற்றைக் கொஞ்சம் பார்ப்போம். தவறான நம்பிக்கை-1 மாப்பிள்ளை மற்றும் அவர்கள் குடும்பத்தாரைப் பற்றி மிகவும் நன்று தெரிந்திருந்தால் அந்த திருமணத்தை பதிவு செய்ய வேண்டிய… Read More

பரிசாகக் கொடுக்கும் மலர்களின் வண்ணங்கள்!

மரியாதை நிமித்தமாகவும், அன்பை வெளிப்படுத்துவதாகவும் மலர்களைக் கொடுப்பது உலகெங்கும் ஆண்டாண்டு கால வழக்கமாக உள்ளது. கொடுக்கும் மலர்களின் வண்ணம் ஒவ்வொன்றுக்கும் ஓர் அர்த்தம் உண்டு. உதாரணமாக, சிவப்பு மலர்கள் காதல், மரியாதை, நேசம், தைரியம் ஆகியவற்றையும், இளஞ்சிவப்பு வண்ண மலர்கள் முழுமையான மகிழ்ச்சி, நளினம், நன்றியுணர்வு அல்லது பாராட்டு ஆகியவற்றோடு நேசத்துக்கான விண்ணப்பமாகவும் கருதப்படுகின்றன. வெள்ளைநிறப் பூக்கள், கள்ளங்கபடமற்ற தன்மை, தூய்மை, ரகசியம் அல்லது மவுனம் ஆகியவற்றையும், பீச் அல்லது பவழ வண்ண மலர்கள் உற்சாகம், ஆசை,… Read More

ஆன்லைனில் பஸ் டிக்கெட்டுகள்…

ரெயில்களுக்கு இணையாக குளிர்சாதன வசதி, படுக்கை வசதி போன்றவற்றுடன் ஆம்னி (தனியார்) பஸ்கள் இயங்குகின்றன. ரெயில்களில் டிக்கெட் எடுக்க கடும் போட்டி நிலவுவதால், அதிக வசதிகள் கொண்ட ஆம்னி பஸ்களில் பயணம் செய்ய பலர் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆம்னி பஸ்கள் பைபாஸ் சாலைகளில் பயணம் செய்வதால் குறிப்பிட்ட நேரத்தில் ஊர்களுக்கு செல்ல முடியும் என்ற நம்பிக்கை பயணிகளில் காணப்படுகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் சொகுசு பயணத்திற்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆம்னி பஸ்களில் பயணம்… Read More

வீட்டுக்கடனில் கிடைக்கும் வருமான வரிச்சலுகை

] வங்கியிலிருந்து வீட்டுக்கடனோ அல்லது வீட்டு அடமான கடனோ பெற்றிருக்கிறீர்களா? ஆம் என்றால், வருமான வரி துறை உங்களுக்கு வழங்கும் சலுகைகள் என்னென்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். முந்தைய தலைமுறையில் 50 வயதுக்கு மேல் தான் சொந்தமாக ஒரு வீட்டை வாங்கவோ அல்லது கட்டவோ முடிந்தது. அவர்களது பொருளாதார வசதி போதுமானதாக இல்லாமலிருந்தது. மேலும் அந்த காலகட்டத்தில் வங்கி கடன் வசதிகள் பெறுவது எளிதாக இல்லை. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் 35 வயதுக்குள்ளாகவே… Read More

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. * பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும். * சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.… Read More

மனிதனின் ஞாபக சக்தி!

மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, அவனது நீளமான, ஆழமான ஞாபகத் திறன். ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவிகிதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவிகிதத்தைத்தான் பயன்படுத்துகிறான். உலக மக்களில் ஒரு சதவிகிதத்தினரே தங்களின் ஞாபகசக்தியைத் திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்று தெரியவந்திருக்கிறது. அபார ஞாபகத்திறன் கொண்டவர்களும் உள்ளனர். அளப்பரிய உண்மைகளையும், எண்ணிக்கைகளையும் அவர்களால் நினைவில் வைத்திருக்க முடிகிறது. அதேபோல, கால்குலேட்டர் போல… Read More

படுத்ததும் தூக்கம் வர வேண்டுமா?

ஆழ்ந்த தூக்கம்தான் ஒரு மனிதனை விழிப்பிற்குப் பின் சுறுசுறுப்பாக்கும். அந்த தூக்கத்திற்காக இன்று தடுமாறுபவர்கள் ஏராளம். படுத்ததும் தூங்கிப்போனால் அது அவருக்கு வரம். தூக்கம் வராமல் கண்ணை பிராண்டினால் அதுவே சாபம்! சிலர் படுத்த நீண்ட நேரத்திற்குப் பின்னரே உறங்குவார்கள். இன்னும் சிலர் எவ்வளவு நேரம் ஆனாலும் தூக்கமின்றி தவிப்பார்கள். தூக்கம் வரும்போது, நேரம் விடியலை நெருங்கியிருக்கும். சிலர் தூக்கம் வருவதற்காக 100ல் இருந்து பின்னோக்கி எண்ணுவார்கள். அவ்வாறு எண்ணும்போது அவர்களது முழுக் கவனமும் எண்களில் கரைந்துவிட… Read More

காஸை சிக்கணப்படுத்துவது எப்படி?

* ரப்பர் டியூபில் சிறிது காஸ் லீக் ஆனாலும், டியூப் வாங்கி புதிதாக பொருத்த வேண்டும். * காஸ் ஸ்டவ்வை பற்ற வைப்பதற்கு முன், சமையலுக்கு வேண்டிய அத்தனை பொருட்களையும், பாத்திரங்களையும் முன்கூட்டியே யோசித்து திட்டமிட்டு, ஸ்டவ் அருகே தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டவ்வை பற்ற வைத்து, பிறகு ஒவ்வொன்றாக தேடி எடுத்து வருவது ஒருபோதும் கூடாது. * சமையலுக்கு கூடுமானவரை அகலமான அடிப்பாகம் உள்ள பாத்திரங்களையே பயன்படுத்த வேண்டும். அப்போதுதான், ஜுவாலை மூலம் கிடைக்கும்… Read More

மழை நேரங்களில் மின் விபத்துகள்

* மழை நேரங்களில் ஏற்படும் சிரமங்கள் ஏராளம். அன்றாட வாழ்க்கையை வெகுவாகப் பாதிக்கும் மழை, வேறு சில ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம். அவற்றில் முக்கியமானது மின் விபத்துகள். சமைக்க, தண்ணீர் சுட வைக்க, துணி துவைக்க, தேய்க்க, காற்று வாங்க என மின்சாரத்தின் பயன்பாடுகள் அதிகம். மழை நேரத்தில் வயர் இணைப்புகள் பாதிக்கப்படுவது, மின்கம்பங்கள் சாய்வது என விபத்துகள் ஏற்பட்டு மழை நீர், ஈரப்பதத்தின் மூலம் மின்சாரம் கடத்தப்பட்டு இழப்புகளையும் ஏற்படுத்துகிறது. * மின் விபத்துகளை தடுக்க, சுவிட்சுகள் மற்றும் மின்… Read More

`நரை'யைத் தடுக்கும் `பழ' மாத்திரை!

இந்தியர்களாகிய நாம், கருகரு முடியைத்தான் விரும்புவோம். ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பின் இயற்கை நமது கேசத்துக்கு வெள்ளையடித்தாலும், நாம் சாயம் பூசி `கறுப்புக் கிரீடம்’ சூடவே ஆசைப்படுகிறோம். கரிய முடி என்பது இளமையின் அடையாளம் என்பது நமது எண்ணம். சரி, விஷயத்துக்கு வருவோம். புதிதாக, தலைமுடி நரைப்பதைத் தடுக்கும் ஒரு மாத்திரையைப் பழச் சாறில் இருந்து தயாரித்து இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்கள் சில விஞ்ஞானிகள். சர்வதேச அழகுசாதன நிறுவனம் ஒன்று, பத்தாண்டு கால ஆய்வுக்குப் பின் இந்த… Read More

நாட்டின் வளர்ச்சிக்கு தேவை கூடங்குளம் அணுமின் நிலையம்

உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாடு எல்லாத் துறைகளிலும் ஒரு படிக்கு மேல் இருக்க வேண்டும் என்பது தான் நம் ஒவ்வொருவரின் தீராத ஆவல், விருப்பம், எதிர்பார்ப்பு எல்லாம். எல்லோரது ஒத்துழைப்பும் இருந்தால் தான் இது போன்ற சாதனைகளைப் படைக்க முடியும். தகவல் தொழில் நுட்பத்தில் அமெரிக்காவையே அசைத்துப் பார்க்கும் நாம், அத்தொழில் நுட்பம் மேலும், தங்கு தடையின்றி தொடர, மின்சாரத் தேவையும் அவசியம் என்பதை உணர வேண்டும். மின் உற்பத்திக்கு தேவைப்படும் பொருட்கள் பற்றாக் குறையாக… Read More

இந்தியாவின் தேசிய பானம் டீ..?

சென்னையில் தினமும் 1 கோடி கப் டீ பருகிறார்கள்! கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொங்கோர்பில்லி கிராமத்தைச் சேர்ந்த வட்டத்தாரா குடும்பத்தினர், பால் சேர்க்காத `கறுப்பு காபி’ அடிமைகள். இவர்கள் மட்டுமல்ல, இந்த ஒட்டுமொத்தக் கிராமமுமே அப்படித்தான். இங்கே இது இயல்பான விஷயம். காரணம் இக்கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் காபி விளைவிப்பவர்கள். இந்நிலையில், 40 வருடங்களுக்கு முன் வட்டத்தாரா குடும்பத்தில் இருந்து வி.எம். தாமஸ் என்பவர் பாதிரியார் படிப்புப் படிக்க அசாமுக்குப் புறப்பட்டுப் போனார். தாமஸின் மதக்… Read More

தீபாவளி – உங்கள் இல்லத்தின் மகிழ்ச்சி ஒளி

பண்டிகையன்று அறுசுவை உணவும், இனிப்புகளும் உண்பதால், நம் மனம் மட்டும் திருப்தியடையும். இதையே அனாதை ஆசிரமத்தில் உள்ளவர்களின் ஒரு வேளை உணவிற்கு செலவு செய்தால், பலரது வயிறும், மனமும் திருப்தியடையும். தீபாவளி என்றால் சந்தோஷம் தான். எல்லாருடைய சந்தோஷத்திற்கும் அந்த வீட்டின் பெண்கள்தான் பெரும்பாலும் பொறுப்பாக இருக்கின்றனர். அதனால், கண்டிப்பாக அவர்களுக்கு சந்தோஷத்தை விட, டென்ஷன் அதிகமாக இருக்கும். நம் வாசகியரின் தீபாவளி டென்ஷனை குறைத்து, எப்போதும் இல்லாத சந்தோஷத்துடன் இந்த தீபாவளியைக் கொண்டாட சில ஐடியாக்கள்…… Read More

எப்படி எல்லாம் பேசக் கூடாது

பிறருடன் பேசும் போது, கேட்பவரால் சகித்துக் கொள்ள முடியாதவாறு பேசுவர் சிலர். இப்படி பேசுவதில் முக்கியமாக ஆறு வகைகள் உள்ளன. * இஷ்டமில்லாமல் பேசுபவர்: தனக்கே இஷ்டமில்லாமல் பேசுவது ஒருவகை. இதை, எதிராளிக்கும் கேட்க இஷ்டம் இருக்காது. * இரைந்து உணர்ச்சி வசப்பட்டுப் பேசுபவர்: இதனால் கேட்பவரின் கவனம் பேசுபவரின் உணர்ச்சியில்தான் இருக்குமே தவிர, என்ன கூறு#கிறார் என்பதில் இருக்காது. * முணுமுணுப்பவர்: எத்தனை கவனமாக கவனித்தாலும், இவர் என்ன சொல்கிறார் என்றே புரியாது. * மூக்கால்… Read More

ஆயுள் அதிகரிக்க வேண்டுமா?

தினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, “டிவி’ பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும். மாறாக, தினமும், 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், அவரது ஆயுள், மூன்று ஆண்டுகள் கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, “டிவி!’ “டிவி’ நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, தொடர்ந்து வெளிவரும் ஆய்வுகள் மூலம் புரிந்து கொள்ள இயலும். ஆஸ்திரேலியாவில் உள்ள புகழ்பெற்ற குயின்ஸ்லேண்ட்… Read More

நரை முடியை த‌வி‌ர்‌க்க...

நரை முடியை த‌வி‌ர்‌க்க…

நரை முடியை முற்‌றிலும் ஒழிக்க கறிவேப்‌பிலையை உணவில் சேர்‌த்துக் கொண்டால் போதும். தலைக்குக் குளித்ததும் ஈரம் காய்வதற்கு முன்பே எண்ணெய் வைப்பதால்தான் பலருக்கு செம்மட்டை நிறத்தில் முடி வளர்கிறது. தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து இரண்டு வேளை குடித்து வந்தால் முகம் வட்ட நிலவாக மின்னும். ஆர‌ஞ்சு பழசாறை ‌ஃ‌பீ‌ரிஸ‌ரி‌ல் வை‌த்து அதனை வெ‌ள்ளை‌த் து‌ணி‌யி‌ல் க‌ட்டி க‌ண்ணு‌க்கு மே‌ல் வை‌‌த்த‌ல் ந‌ல்லது. தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌யை சூடு செ‌ய்து அ‌தி‌ல் ‌ஓம‌த்தை‌ப் போ‌‌ட்டு அதனை தலையில் தேய்த்து… Read More

எப்படி இருக்க வேண்டும் வாகன நம்பர் பிளேட்?

மோட்டார் வாகன நம்பர் பிளேட்கள் என்ன அளவில் இருக்க வேண்டும் என்பது குறித்து, போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. ஈரோடு வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் கூறியதாவது: டூ-வீலர், கார், கனரக வாகனம், லாரிகள், பஸ் உள்ளிட்ட வாகனங்களின் நம்பர் பிளேட்களில், தங்களுக்கு பிடித்த அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் உருவப்படம் பதிப்பது, பெயர்கள் எழுதுவது மற்றும் அரசு விதித்துள்ள விதிமுறைகளை மீறி எண்களை பல்வேறு கோணங்களில் எழுதுவது அதிகரித்துள்ளது. வாகனங்கள் மூலம் அசம்பாவிதங்கள் நடந்தால், அதை கண்டறியவே, அரசு… Read More

இலவசதிருமண தகவல் இணையதளம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஸ்ரீ காமாட்சி திருமண தகவல் மையம் என்ற நிறுவனத்தில் திருமண தகவல் தருவதை இலவசமாக சேவையாக செய்து வருகிறார்கள்.  அனைத்த இனததவரும் அனைத்து மதத்தவரும் வரன் தேடுபவர்கள் அனைவரும் இலவசமாக பதிவு செய்து கெொள்ளலாம்.  இந்நிறுவனத்தின் மூலம் இலவசமாக பதிவு செய்து இலவசமாக கடவுச்செொல் மற்றும் பதிவு எண் பெற்ற பின் தாங்களே இணையதளததின் மூலம் தங்களுக்குத் தேவையான வரன்களை தேர்ந்தெடுத்துக் கெொள்ளலாம்.  அவர்களுக்குத் தேவையான வரன்களன் முகவரி, மற்றும் தெொலைபேசி எண்களைப் பெற… Read More

வெற்றிக்கு ஒரு புத்தகம் – சந்தோஷ வழி…

வெற்றியைத் தேட ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. சந்தோஷத்தை எங்கே போய்த் தேடுவது? அது உள்ளுக்குள்ளிருந்து மலரவேண்டிய விஷயம் இல்லையா? நாமாக நம் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள வழி(கள்) ஏதேனும் உண்டா? இந்த கேள்விகளை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு பிரபலமான புத்தகம் “தி வே டு ஹேப்பினெஸ்’ இங்கிலாந்தைச் சேர்ந்த ரான் ஹப்பார்ட் என்பவர் எழுதிய இந்தப் புத்தகம் இன்றுவரை பல லட்சம் பிரதிகள் வெளியாகியுள்ளது. 70 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்… Read More