கட்டுரைகள்

மருந்துகளுக்கே நோய் என்றால்..

புதுப்புது ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், மிகப் பழைய அமைதியோ தொலைந்து விட்டது. அதுபோலவே, புதுப்புது நோய்கள் பூவுலகிற்கு அடிக்கடி அறிமுகமாகின்றன. ஆனால், மருத்துவத் துறையின் விழுமியங்களோ மரணக் கட்டிலில் கிடக்கின்றன.மருந்து நிறுவனங்களும், மருத்துவர்களும் அமைக்கின்ற கூட்டணி, நோயாளிக்குக் குணத்தை கொடுக்கும் போர்வையில், பணத்தைப் பறிக்கும் கொடுமையை முதன்மையாகக் கொண்டிருக்கிறது.மகத்துவ மிக்க மருத்துவத் துறையில் மனிதநேயத்தையும், சேவையுணர்வையும் தனது முகவரியாய்க் கொண்ட முன்மாதிரி மருத்துவர்கள் பலரும் உண்டு. ஆனால், விழுமியங்களைத் தொலைத்தவர்களின்… Read More

இந்தியாவின் தேவைகள் -இந்தியா டுடே 28.05.2014

Read More

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? (பகுதி 6)

  6. என்னதான் தீர்வு? பத்திரிகைகள், பொருளாதார நிபுணர்கள், பொறுப்புள்ள சில எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று பலரும் அதிகரித்துவரும் சீனாவின் இறக்குமதி பற்றியும், தேவையில்லாத மூலப்பொருள் இறக்குமதி அதிகரிப்பு பற்றியும், ஏற்றுமதி குறைவு மற்றும் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படுவது பற்றியும் எச்சரிக்கை செய்தவண்ணம் இருந்தும், அதைப்பற்றிய கவலையே இல்லாமல் நிதியமைச்சரும் பிரதமரும் இருந்தனர் என்பதுதான் இன்றைய சிக்கலுக்கு மிகப்பெரிய காரணம். "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானுங் கெடும்’ என்பார் வள்ளுவப் பேராசான். ஆனால், இடிப்பார்… Read More

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? (பகுதி 5)

5. இந்தியாவின் சந்தை சீனாவின் கையில்! மிகப்பெரிய பொருளாதாரச் சறுக்கலை இந்தியா எதிர்கொள்ளும் இந்த நிலைமையிலும்கூட, நமது நாடு திவாலாகாமல் காப்பாற்றுவது இந்திய சமூகத்தின் குடும்ப அமைப்பும், நமது சேமிப்பு உணர்வும்தான் என்பதைப் பார்த்தோம். ஆட்சியாளர்களின் தவறான அணுகுமுறையும் பொறுப்பின்மையும் இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமல்ல, நமது பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாகி விட்டிருக்கிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் மேற்பார்வையில், 587 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலதனப் பொருள்களால் இந்தியாவின்… Read More

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? (பகுதி 4)

4. திவாலாகாமல் காப்பாற்றுவது எது? ஊக்குவிப்பு நடவடிக்கை என்கிற பெயரில் அளிக்கப்பட்ட வரி விலக்கால் வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதிப் பற்றாக்குறை அதிகரித்தது என்பதுடன் நிற்கவில்லை. வெறும் வருவாய் இழப்பைவிட மோசமான தீமையை ஊக்குவிப்பு நடவடிக்கை மறைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் சுங்க வரி ஏற்கெனவே பாதியாகிவிட்டது. இந்நிலையில், 2008இல் சுங்க வரி குறைக்கப்பட்டதன் மூலம் இறக்குமதிப் பொருள்கள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. அதன் விளைவாக, கடந்த 5 ஆண்டுகளில் (2008-09 முதல் 2012-13 வரை) மூலதனப்… Read More

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? (பகுதி 3)

3. வரி விலக்கால் அதிகரித்த நிதிப் பற்றாக்குறை! ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 9 ஆண்டு கால ஆட்சியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை தாறுமாறாக 339 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி) டாலர் அளவுக்கு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பு வெகுவாகச் சரிந்தது என்பதில் சந்தேகமே இல்லை. ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்தது ஒரு காரணமாக இருந்தாலும், அது மட்டுமே காரணமல்ல. நிதிப் பற்றாக்குறையும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. அரசுக்கு… Read More

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? (பகுதி 2)

2. கச்சா எண்ணெய், தங்கம் மட்டுமே காரணமல்ல! எப்படி நடப்புக் கணக்கில் உபரி பற்றாக்குறையானது என்பதையும், இறக்குமதி அதிகரித்து உற்பத்தி குறைந்தது என்பதையும் ஆட்சியில் இருக்கும் பொருளாதார மேதைகள் வேடிக்கை பார்த்தார்கள் என்பதைப் பார்த்தோம். அதற்கு இவர்கள் சொன்ன சமாதானம், சர்வதேச அளவில் காணப்பட்ட பொருளாதார மந்த நிலை. தொழில் துறை உற்பத்தி குறைந்ததற்கு 2008-ல் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையைக் காரணமாகக் கூற முடியாது. ஏனென்றால், 2008-09இல் 6.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி… Read More

திவாலாகும் இந்தியப் பொருளாதாரம்! என்ன காரணம்? என்ன தீர்வு? (பகுதி 1)

1. பற்றாக்குறை அதிகரிப்பும் ரூபாயின் வீழ்ச்சியும்! இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைவதை 18 மாதங்களாக மெளன சாமியாராகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, ரூபாயின் மதிப்பை நிலைநிறுத்துவதற்கு நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கப் போவதாக ஆகஸ்ட் 12-ம் தேதி அறிவிக்கிறார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். 2012 ஜனவரியில் ரூ.45 கொடுத்து ஒரு டாலரை இந்தியர்களால் வாங்க முடிந்தது. ஆனால், ஆகஸ்ட் 12-ல் ஒரு டாலர் வாங்க ரூ.61 கொடுக்க வேண்டியிருந்தது. 2012 ஜனவரியில் இருந்து தற்போது வரை… Read More

ஒலிம்பிக்ஸின் கதையும் சில துணைக் கதைகளும்

ஒலிம்பிக்ஸின் கதையும் சில துணைக் கதைகளும்: சரிசமநிலையற்ற ஐந்து வளைய விளையாட்டுகள் ஒலிம்பிக்ஸின் பூர்வீகம் கிரேக்க நாட்டின் ஒரு பட்டணம் என்பது விளையாட்டுகளை அரைகுறையாகக் கவனிப்பவர்களுக்குக்கூடத் தெரியும். இன்றைக்குப் புதிய வடிவங்களோடு பரிணமித்திருக்கும் நவீன ஒலிம்பிக்ஸுக்கும் இங்கிலாந்துக்கும் சுற்றுமுகமான ஆனால் நெருக்கமான தொடர்பு உண்டு. இந்த உறவை வெளிப்படுத்தியவர் ஓர் ஆங்கிலேயர் அல்ல. ஆங்கிலக் கலாச்சார நேசகரான Charles Pierre Coubertin (1863 – 1937) என்ற பிரான்சு நாட்டவர். கொபார்ட்டின்தான் செயலற்றுப்போன இந்தப் பண்டைய விளையாட்டுகளை… Read More

மதுவிலக்கில் ஏன் “சில விலக்கு’?

மதுவின் தீமை குறித்து எத்தனையோ விதமாகக் கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. வெளிவருகின்றன. வெளிவரும். காரணம், மது நேற்றும் விற்கப்பட்டது. இன்றும் விற்பனையாகிறது. நாளையும் விற்பனையாகும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதில்லை என அரசுகள் மிகுந்த உறுதியாக இருக்கும்போது, மதுவின் தீமைகளை விளக்கி, மதுவிலக்கை வலியுறுத்தி கட்டுரைகள் வெளிவர வேண்டியதும் அவசியம்தானே? குடங்குடமாய் பாலைத் தந்தேனே என அரசுகள் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டாலும் கூடவே ஒருதுளி விஷத்தைத் தந்தால் எப்படியிருக்கும்? அப்படித்தான், ஏழைகளுக்காக எனக் கூறி எண்ணற்ற திட்டங்களைச் செயல்படுத்தினாலும் கூடவே… Read More

கைப்பேசி என்கிற எட்டப்பன்!

உனக்கு ஒரு பரம ரகசியமான விஷயம் சொல்லப் போகிறேன். தப்பித் தவறிக்கூட நீ அதை வேறு யாரிடமும் சொல்லிவிடக் கூடாது?” என்று நீங்கள் கைப்பேசி மூலம் உங்களுடைய நண்பரிடம் குசுகுசுவென்று ஒரு செய்தியைச் சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அந்தப் பரம ரகசியத்தை இந்தியாவிலிருந்து மட்டுமன்றி, அகில உலகத்திலிருந்தும் பல நூறு பேர் ஒட்டுக் கேட்டுக்கொண்டும் பதிவு செய்துகொண்டுமிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது! வனவிலங்குகள், கடல் ஆமைகள், திமிங்கிலங்கள் போன்றவற்றின் கழுத்தில் ஓர் அலைபரப்பிக் கருவியைப்… Read More

மதுவிலக்கு வருகிறதாமே! ஃபுல்லாவா? குவாட்டர் கட்டிங்கா?

அரசாங்கமே நேரடியாக மதுக்கடைகளை நடத்துகின்ற ‘பெரும் புரட்சி’ தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் புரட்சியைத் தொடங்கிவைத்தவர்  இன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாதான். 2004ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவருடைய அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அந்தப் படுதோல்விக்குப் பிறகு, அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் மதுக்கடைகளை அரசின் டாஸ்மாக் நிறுவனமே நேரடியாக நடத்துகின்ற முடிவை ஜெயலலிதா அரசு எடுத்தது. ஆனால், இப்போது அவர் 2014 எம்.பி. தேர்தலில் 40க்கு 40தொகுதிகளையும் ஜெயித்து, இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்ற… Read More

கூகுள் யு-ட்யூப் சாதனை

வீடியோ காட்சிகளுக்கென கூகுள், ஏற்கனவே இயங்கி வந்த யு–ட்யூப் தளத்தினை வாங்கிச் செம்மைப் படுத்தி, அடிக்கடி அதனை மேம்படுத்தும் செயலில் இறங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களின் வீடியோ பைல்களை அப்லோட் செய்திடவும், வீடியோ காட்சிகளைப் பார்க்க விரும்பு பவர்கள், தேடிக் கண்டறிந்து காணவும் பல வசதிகளையும் தேடல் பிரிவுகளையும் தந்துள்ளது. இந்த இமாலய சாதனை இப்போது பல புதிய சிகரங்களை எட்டியுள்ளது. தினசரி இந்த தளத்தில் 400 கோடி வீடியோ காட்சிகள் பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 60… Read More

முல்லைப் பெரியாறு அணையின் வரலாறு

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் போது வறட்சியின் காரணமாக மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி கடுமையான பஞ்சம் ஏற்பட்டு மக்கள் பட்டினியால் இறந்தனர். இதற்கு முக்கிய காரணம் ஆண்டுதோறும் வரும் தென்மேற்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்பட்டு, மலையிலேயே பெய்துவிடுகின்றது. மலையின் மறைவு பிரதேசமான தமிழகத்தில் மழை பெய்வதில்லை. வெறும் காற்றுதான் வருகிறது. அதேசமயம் மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நதியாக உருவாகி, அரபிக் கடலில் கலந்துவிடுகிறது. மேற்கு நோக்கி பாய்ந்து, நீரை கடலில் கலந்து வீணாகும்… Read More

ஏன் பல்லி கொன்றீரய்யா

மெத்தைமடி அத்தையடி என அதன்மீது காலின் மேல் காலை மடக்கிப்போட்டு மல்லாக்க விஸ்ராந்தி தீவிரமான “வீக்கெண்டில் ஒரு உலக இலக்கியம் சமைப்போமா” யோஜனையிலிருக்கையில், விட்டத்தில் செல்லும் பல்லியை கவனித்திருக்கிறீர்களா? அதுவும் நம்மை கவனித்தபடியே “ம்க்கும், இவனாவது இலக்கியமாவது” என்றபடி தலைகீழாய் விட்டத்தில் நகரும். நாம் கவனிப்பதை அறிந்து, உற்றுப்பார்த்து ஊர்ஜிதம் செய்து, சட்டென்று டியூப்லைட் சட்டம், மின்சார ஒயரிங் குழாய் என மறைவிடத்திற்கு பின் பதுங்கும். வேறெங்காவது பார்த்துவிட்டு மீண்டும் கடைக்கண்ணால் கவனித்தால், உண்டிவில்லிருந்து தயிர்பானைக்கு புறப்பட்ட… Read More

தாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும்

வைரஸ் நுண்னுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் எனும் நுன்னூடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்த்தியை நேனோ என்று பெயரிடும் அளவிற்கு, நேனோ என்றதும் அறிவியலாளர்களுடன் நேனு நேனு என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் நேனோ டெக்னாலஜி என்கிற அறிவியல் துறை இன்று பிரபலம். இயற்கையை அறிதலுக்கு அறிவியல்சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ டெக்னாலஜி விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், டெக்னாலஜிகள், இயற்கையில்… Read More

விவாகரத்தின் `மறுபக்கம்'

பார்த்து வாங்கும் ஒரு மாம்பழத்தை சுவையாக இருக்கும் என்று நினைத்து சாப்பிட ஆரம்பிக்கிறோம். ஆனால் அது ஒரு புறத்தில் அழுகிப்போயிருந்ததைக் கண்டால் உடனே தூக்கி தூரவீசிவிடுகிறோம். அதுபோலத்தான் இப்போது திருமண வாழ்க்கையும் ஆகிக்கொண்டிருக்கிறது. அதனால் விவாகரத்துக்கள் பெருகிக் கொண்டிருக்கின்றன. திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று பலரும் சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறோம். அதன் பிறகும் விவாகரத்து ஏன் ஏற்படுகிறது? என்று ஆராய்ந்தால் விடை எளிதாகவே கிடைத்துவிடும். ஒரு காலத்தில் விவாகரத்து என்பது சமூகத்தினரால் கூர்ந்து கவனிக்கக்கூடிய பெரிய சம்பவமாக இருந்தது.… Read More

அண்டை மாநிலத்தை கண்டு தமிழக அரசு விழிக்குமா?

கேரளாவில் வயல்கள் அழிவதை தடுக்க, அம்மாநில அரசு எடுத்த சாதுரிய நடவடிக்கையால் விளைநிலங்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. இதை பார்த்தாவது தமிழக அரசு அதிவேக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகின்றனர். ரியல் எஸ்டேட் கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் தொழில். ஆனால் இந்த தொழில் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை வேரோடு அழித்துக்கொண்டிருக்கிறது. நல்ல காற்றோட்டம், தண்ணீர், போக்குவரத்து வசதிகள் இப்படிப்பட்ட இடங்களில்தான் மக்கள் வீடு வைக்க விரும்புவர். இதை பயன்படுத்திதான் ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் வயல்களை அடிமாட்டு விலைக்கு… Read More

உண்ணாவிரதம்: ஒளிந்திருக்கும் உண்மைகள்!

“உண்ணாவிரதம்”… இப்போது நாடெங்கும் உச்சரிக்கப்படும் மந்திரச் சொல். சுதந்திர போராட்டத்துக்குப் பிறகு சமீப காலமாகத்தான் உண்ணாவிரதம் மீண்டும் ஒரு போராட்ட முறையாக ஏற்கப்பட்டு அனேக மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. உண்ணாவிரதம் என்பது எளிதான போராட்டமல்ல. அது வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் தன்னைத்தானே வருத்திக் கொள்ளும் போராளி கள் பல விஷயங்களை கவனிக்க வேண்டும். உடல் நலம், உயிருக்கு பாதுகாப்பு, உண்ணாவிரதத்தின் நியாயம், மக்களின் ஆதரவு, உண்ணாவிரதத்தால்பலனடைவோர் எண்ணிக்கை, அது நிறைவேறக் கூடிய சாத்தியக்கூறுகள் என பல… Read More

மழை தவிப்பு தனிமை

மழைக்கும், தனிமைக்கும் அப்படி என்னதான் சம்பந்தம் இருக்கிறதோ தெரியவில்லை… மழை என்றாலே நாம் தனிமைப்படுத்தப்பட்டதைப் போன்ற ஓர் உணர்வு நம்மை ஆட்கொண்டு விடுகிறது. மழை நம் மனதுக்கு உற்சாகம் அளித்தாலும், தொடர்மழை ஒருவித தடுமாற்றத்தை ஏற்படுத்தவே செய்யும். மழை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் யாவும், இன்னொரு மழையில் நினைவுக்கு வரும். மழையில் ஏற்பட்ட விபத்துக்கள் நினைவிழந்தவர்களுக்கு மீண்டும் அதே மழையில் நினைவு திரும்ப வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள், மருத்துவ நிபுணர்கள். மழையால் ஏற்படும் தனிமையுணர்வு நாம் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் இனிய… Read More