குழந்தை பராமரிப்பு

குழந்தைக்கு உரம் விழுதல் என்றால் என்ன? எப்படி கண்டறிவது, என்ன செய்வது?

கைக்குழந்தை இடைவிடாமல் அழுதுகொண்டே இருந்தாலும், தாய்ப்பால் குடிக்க மறுத்தாலும் காரணம் உரம் விழுதலாக இருக்கலாம். இந்த உரம் விழுதல் என்றால் என்ன, அறிகுறிகள் என்ன, தீர்வு என்ன என்பதை… Read More

வீட்டில் இருக்கும் குழந்தைகளின் வாழ்வு சிறக்க வாசிப்பு வேண்டும்

ஒருவனுடைய வாழ்க்கை அறிவோடுதான் தொடங்குகிறது. அறிவற்றவன் மிருகமாகவே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். இதுதான் யதார்த்தம். குழந்தைப் பருவத்தில் இதை புரிந்துகொள்வது கடினமாக இருக்கும். வேடிக்கைகளிலேயே மனம் செல்லும். பெற்றோர் அவர்களின் கவனத்தை திருப்பி, அறிவின் மகத்துவத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.… Read More

குழந்தை வளர்ப்பு! கவனக் குறிப்பு!!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. குழந்தைகளுக்கு உடலில் வலியோ, காய்ச்சலோ அல்லது வேறு உபாதைகளோ ஏற்பட்டாலும் அவர்களால்  தாயிடம் கூற முடியாது. குழந்தைகளை சரியாக கவனித்து வந்தால் மட்டுமே அவர்களது பிரச்னையை உடனடியாக அறிந்து மருத்துவரை நாட  முடியும். குழந்தைகள் பல விதம் உண்டு. குழந்தைகளை பார்த்தவுடன் அவர்களை கையில் எடுத்து கொஞ்ச தோன்றும். ஆனால் சில குழந்தைகள்  எவ்வளவு தான் சாப்பிட்டாலும் உடல் மட்டும்… Read More

ஒரு வயசு வரை குழந்தைக்கு மறந்தும் கூட இந்த உணவுகளை கொடுக்காதீங்க

குழந்தைகள் பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பால் மட்டுமே போதுமான உணவாகும். குழந்தை பிறந்த முதல் வருடம்… Read More

பாப்பாவுக்கு பல் முளைக்குதா?

குழந்தை பிறந்த ஆறு மாதங்களிலிருந்து பற்கள் முளைக்கத் தொடங்கிவிடும். ஈறுகளின் உள்ளேயிருந்து பற்கள் வெளியே வரும்போது எரிச்சல், ஈறு வீக்கம், ஈறு மென்மையாதல் போன்ற அசௌகர்யங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும். குழந்தைகள் கையில் கிடைக்கும் பொருள்கள்… Read More

ஆராரோ ஆரிரரோ… ‘உயிரைக் காக்கும்!

ஆயர்பாடி மாளிகையில் தாய் மடியில் கன்றினைப்போல் மாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ…’ மாயக் கண்ணனில் ஆரம்பித்து நம் வீட்டு குட்டிக் கண்ணன்கள்வரை தூங்குவதற்கு அம்மாவின் தாலாட்டு வேண்டும். ‘தால்’ என்றால் நாக்கு. நாக்கை ஆட்டிப் பாடும் பாட்டு தாலாட்டு. ‘தாலேலோ’, ‘ஆராரோ ஆரிரரோ’, ‘லுலுலாயி’… என்று வட்டாரத்துக்குத் தகுந்தபடி வார்த்தைகள்தாம் மாறுமே தவிர, அம்மாவின்… Read More

குளிர்காலத்தில் குழந்தைகள் பராமரிப்பு

* குளிர்காலத்தில் குழந்தைகள் பராமரிப்பு எப்படி இருக்க வேண்டும்?குளிர்காலத்தில் குளிரும், பனியும் அதிகமாக இருப்பதால் தகுந்த உடையளிந்து தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அதிகாலை பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு குளிர்தாங்கும் படி உடைகள், ஷூ போன்றவை அணிந்து அனுப்ப வேண்டும். குழந்தைகள் குடிப்பதற்கு ஜில்லென்று தண்ணீர் கொடுக்கக் கூடாது. சற்று வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க கொடுக்கலாம்.… Read More

ஒரு வயதுவரை உள்ள குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள் என்ன…?

பிரசவம் முடிந்து குழந்தை பிறந்துவிட்டால் போதும் என்று நினைப்போம், ஆனால் இனிமேல் தான் வேலையே இருக்கிறது. அது தான் குழந்தையை நன்கு பராமரிப்பது.  குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர  எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். … Read More

புது அம்மாக்கள் கவனத்துக்கு!

பிரசவத்துக்குப் பிறகு தன் குழந்தைக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்யும் அம்மாவுக்கு நிறைய சந்தேகங்களும் தடுமாற்றங்களும் எழும். அவற்றைத் தெளிவுபடுத்தும் ஆலோசனைகளை வழங்குகிறார் மகப்பேறு மருத்துவர் ஆனந்தப்பிரியா.தாய் சாப்பிடும் உணவு… Read More

தூளிப் பாப்பாவை தூக்கம் தழுவட்டுமே!

சில குழந்தைகள் இரவில் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல் அழுதுகொண்டே இருப்பார்கள். தாயின் தூக்கம் கெடுவது மட்டுமே பிரச்னை அல்ல. தூக்கமின்மை காரணமாக உடல்நல, மனநலப் பிரச்னைகளும் பிரசவித்த தாய்க்க ஏற்படக்கூடும். இவற்றைத் தவிர்க்க, கைக்குழந்தைகளின் இரவு… Read More

அடிமைப்படுத்துவதும் தவறு… அடங்கிப்போவதும் தவறு!

சிங்கிள் மதர் பேரன்ட்டிங்கில் உள்ள சிரமங்கள் மற்றும் தீர்வுகளை விளக்குகிறார், மனநல மருத்துவர் ஷாலினி.‘`சிங்கிள் பேரன்ட்டாக குழந்தையை வளர்ப்பது, மொத்தச் சுமையையும் ஒற்றை ஆளாகத் தாங்குவது சிரமமான விஷயம். குறிப்பாக, தாய்க்கு. அவர் பதற்றமாக உணரலாம்; இயலாமை ஏற்படலாம். ‘என்னால முடியவே இல்லை… இந்தப் பாரத்தை யாராவது கைமாற்றிவிட மாட்டாங்களா?’ என்ற எண்ணம் தோன்றலாம். தூரத்திலிருந்து பார்ப்பவர்கள், ‘ஏன், டீச்சர் வேலை பார்த்து அவ வளர்க்கலையா?’, ‘கூலி வேலைக்குப் போனாலும் அவ தனியா புள்ளைங்களை வளர்த்துடலையா?’ என்று… Read More

குழந்தைகள் வளர தேவைப்படும் வைட்டமின்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருடைய உடல் வளர்ச்சிக்கும் சமச்சீரான வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள் நிறைந்த உணவை சரியாக எடுத்துக்கொள்ளாவிட்டால் உடல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். நோய்களும் சொல்லாமல் கொள்ளாமல் வந்து ஒட்டிக்கொள்ளும். குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதவை, வைட்டமின்கள் ஆகும். ஆகையால், குழந்தைகளுக்கு கட்டாயம் அளிக்க வேண்டிய வைட்டமின்கள், இவ்வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் மற்றும் வைட்டமின்கள் குறைந்தால், என்னென்ன நோய்கள் ஏற்படும் என்பது பற்றி பார்க்கலாம்.… Read More

குழந்தைகளின் பேச்சுத்திறன் முக்கியம்

குழந்தைகளுக்கு பேசும் திறன் எந்த வயதில் நன்றாக வரும்?ஒரு வயதில் குழந்தை ஒரு வார்த்தை பேச வேண்டும். உதாரணமாக மா, பா, தா, போன்றவை. ஒன்றரை வயதில் குழந்தை அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதில் 30 அர்த்தமுள்ள வார்த்தை பேச வேண்டும். 2 வயதுக்கு மேல் வாக்கியங்களாக பேச வேண்டும்.குழந்தைகள் பேசும் திறனுக்கு எந்தெந்த காரணங்களாக தடைகள் ஏற்படும்?… Read More

உங்க பாப்பாவைப் பத்திரமாப் பார்த்துக்கங்க..!

குழந்தை வளர்சியில் சரியும்… தவறும்…! 1. குழந்தை அழுதால் மட்டுமே சாப்பாடு கொடுக்கும் வழக்கம் சிலருக்கு உண்டு. இது தவறு. குழந்தையின் பசி அறிந்து உணவளிக்க வேண்டும். இல்லை எனில், குழந்தைக்கு, ‘நம்மை யாரும் கவனிக்கவில்லை’ என்ற எண்ணம் வந்துவிடும்.… Read More

குழந்தைகள் மனஅழுத்ததில் உள்ளார்கள் என்பதற்கான அறிகுறிகள்

உங்கள் செல்ல குழந்தை வளர்ந்து பள்ளிக்கு செல்ல தயாரானவுடன் உங்கள் கடமை என்பது அவர்களை பள்ளிக்கு அனுப்புவது, தயார் செய்வது, சரியாக சாப்பிடுகிறீர்களா என்று சோதனை செய்வது என்று இதனுடன் நின்றுவிடாது. அவர்கள் பள்ளியில் பழகும்விதம், அவர்களின் நண்பர்கள், ஆசிரியர்கள் என அவர்களுடன் தொடர்புடைய அனைத்தையும் கவனித்து பார்க்க வேண்டும்.… Read More

குழந்தைகள் விரல் சூப்பினால், அவர்களுக்கு எத்துப்பல் குறைபாடு ஏற்படுமா?

குழந்தைகள் பலருக்கு விரல் சூப்பும் பழக்கம் இருக்கும்; ஏன் நாம் சிறுவயதினராய் இருந்த பொழுது, நம்முடைய குழந்தை பருவத்தில் நாமே விரல் சூப்பி தான் வளர்ந்திருப்போம். விரல் சூப்புவதால் என்ன விளைவு ஏற்படும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் நாம் வளர்ந்ததால் தான் இன்று பலவித பற்கள் குறைபாடுகளுடன், விரல்களின் வலுவிழந்து, மனதில் நம்பிக்கையற்று நம்மில் பலர் வாழ்நாட்களை நகர்த்தி வருகின்றனர்.… Read More

குழந்தைகள் பெற்றோர்களிடம் இருந்து கற்றுக் கொள்ளும் சில முக்கிய பழக்க வழக்கங்கள்!

குழந்தைகளுக்கு ஓரளவுக்கு நினைவு தெறித்த பின் குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் செய்யும் அனைத்து செயல்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து, பெற்றோரை போலவே செய்ய முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியில் குழந்தைகள் கண்டிப்பாக நூறு சதவிகிதம் பெற்று, பெற்றாரை போலவே மாறுகின்றனர். இந்த காரணத்திற்காக தான் தாய்-தந்தை தான் குழந்தையின் முதல் கதாநாயகன் மற்றும் கதாநாயகி என்று கூறப்படுகிறது.பெற்றோர்கள் நல்லவர்களானால், குழந்தையும் நல்லவர்களாக வளர்வர்; பெற்றோரே கேடு கெட்டவர்களானால், குழந்தையும் அப்படியே வளரும். நீங்கள் பெற்று எடுத்த குழந்தை நல்லவராவதும்… Read More

குழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் 

குழந்தைகளுக்கு ஒரு தலையணை போன்ற பொருளை டையப்பர் என்ற பெயரில் மாட்டி விடும் சம்பிரதாயம் இந்த காலகட்டத்தில் வாழும் தாய்மார்களிடத்தில் அதிகம் காணப்படுகிறது. டையப்பர்… Read More

உங்கள் குழந்தை `சூப்பர் கிட்’ ஆக வேண்டுமா?

உங்க புள்ளைய அருமையா வளர்த்திருக்கீங்க’ என்ற பாராட்டைவிட, பெற்றவர்களுக்கான கிரீடம் என்னவாக இருக்க முடியும்? குழந்தைகளைப் பண்புடனும் அறத்துடனும் வளர்த்தெடுக்க, பெற்றோர்களுக்கு அவசியமான சில ஆலோசனைகளைப் பகிர்கிறார்  உளவியல் நிபுணர் சரஸ் பாஸ்கர்.* குழந்தைகளின் ஒரு வயதிலிருந்தே, விளையாட்டுப் பொருள்களை, விளையாடி முடித்த பின்னர் மீண்டும் எடுத்துவைக்கப் பழக்குங்கள். எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கக் கற்றுக்கொடுங்கள். இதனால் பொறுப்பு உணர்வும் நேர மேலாண்மையும் அவர்களுக்குக் கைகூடும்.… Read More

ஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்!

பள்ளிகளின் ரீஓப்பன் காலம் இது. அம்மாக்களுக்கு லஞ்ச் பேக் வேலைகள் மீண்டும் தொடங்கி விட்டன. ‘இன்னிக்கு லஞ்ச்சுக்கு என்ன கொடுக்கலாம்னு யோசிக்கிறதுதான் பெரிய டாஸ்க்காக இருக்கு’ என்று பெருமூச்சுவிடும் மம்மீஸுக்கு, ஆரோக்கியம் நிறைந்த, அதே நேரம் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடக்கூடிய சாப்பாடு, ஸ்நாக்ஸுக்கு வழிகாட்டும் லஞ்ச் பாக்ஸ் ஐடியாக்கள் சொல்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரியா ராஜேந்திரன். எனர்ஜிக்கு கார்போஹைட்ரேட், புரோட்டீன்!… Read More