சமையல் குறிப்புகள்

சமையலுக்கு முக்கியமான இந்த 5 குறிப்புக்கள்

சமையலுக்கு பயன்படுத்தும் இந்த முக்கியமான பொருட்களை சரியான முறையில் கையாளும் பொழுது அதனை நீண்ட நாட்களுக்கு வைத்து பராமரிக்க முடியும். இஞ்சி, பூண்டு பேஸ்ட் அரைப்பதாக இருந்தாலும், அதை எவ்வளவு அளவில் அரைக்க வேண்டும் என்று பலருக்கு தெரிவதில்லை. மிக்ஸியில் மாவு அரைப்பவர்கள், கேரட், மல்லி, புதினா, கறிவேப்பிலை போன்றவற்றை பராமரிப்பவர்கள், உருளைக்கிழங்கு கறுத்துப் போகாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற எளிதான குறிப்புகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.… Read More

இது தங்க மசாலா! – ஆரோக்கியம் காக்கும் மஞ்சள் உணவுகள்

தங்கப்பால் தேவை: தேங்காய்ப்பால் – 2 கப், சர்க்கரை – 4 டீஸ்பூன், மஞ்சள்கிழங்கு – சிறிதளவு,  மிளகு – கால் டீஸ்பூன், ஏலக்காய் – 2,  பட்டை –  ஒரு சிறிய துண்டு,  தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு. செய்முறை:… Read More

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் : வெடிக்காமல் சீடை செய்ய ஒரு எளிய முறை!

கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை என்றாலே அனைவரின் நினைவிற்கும் வருவது சீடை. எவ்வளவு திண்பண்டங்கள் இருந்தாலும் கண்கள் சீடையையே தேடும். அப்படிப்பட்ட சீடையை வெடிக்காமல் எப்படி செய்வது?… Read More

ஆப்பிள் ரோல், பிஸ்தா இட்லி, பனங்கற்கண்டு சப்பாத்தி… குட்டீஸூக்கான 10 குவிக் லன்ச் ரெசிபிகள்!

இது ஸ்கூல் ரீஓபன் காலம். குழந்தைகள் சப்புக்கொட்டி சாப்பிட, ருசியான லன்ச் பாக்ஸ் பேக்  செய்ய வேண்டும் அல்லவா? இதோ, சத்துகள் நிறைந்த 10 க்விக் ரெசிப்பிகளைச் சொல்லித் தருகிறார் சமையல் கலைஞர் லஷ்மி சீனிவாசன். வைட்டமின் ஈ சப்பாத்தி!… Read More

ஆரோக்கியம் காக்க… அறுசுவையும் அதிகரிக்க!

கிச்சன் பேஸிக்ஸ் என்றால் என்ன?முழுமையான இந்தியச் சமையல் செய்வதற்கு சில அடிப்படைப் பொருள்கள் தேவை. உதாரணமாக இட்லி, தோசை மாவைப் பயன்படுத்தி ஏராளமான புதிய உணவுகளைத் தயாரிக்கலாம். சாம்பார் பொடி, ரசப்பொடி, இட்லி மிளகாய்ப் பொடி போன்ற சில பொடி வகைகளைப் பயன்படுத்தி மேலும் பல ரெசிப்பிகளை உருவாக்கலாம்.… Read More

காய்கறி பழங்கள் மிக்ஸ்டு சாலட்

தேவையானவை: முட்டைகோஸ்-100 கிராம், வெள்ளரிக்காய் – 2, குடமிளகாய் – 1, தக்காளி – 3, ஸ்ட்ராபெர்ரி – 5, ஆப்பிள் – 1, திராட்சை – 100 கிராம் செய்முறை: ஸ்ட்ராபெர்ரி, தக்காளியை நான்கு துண்டுகளாகவும், வெள்ளரிக்காய், குடமிளகாய், ஆப்பிளை பெரிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும்.   முட்டைகோஸை சற்று பெரிதாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றுடன் திராட்சையைச் சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாகக் கலக்கிச் சாப்பிடலாம். தேவை எனில், சுவைக்காக எலுமிச்சைச் சாறு, உப்பு, மிளகுத்தூள் சிறிது சேர்த்தும்… Read More

ஆரோக்கியம் தரும் அகத்திக்கீரை

அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். நமது உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை  அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு. அகத்திக்கீரை சொதி என்னென்ன தேவை? அகத்தி கீரை- 1 கட்டு பெரிய வெங்காயம்- 1 தக்காளி-2 பச்சை மிளகாய்-4 பால் – 1கப் உப்பு- 1 டீஸ்பூன் மஞ்சள்பொடி- 1டீஸ்பூன் கறிவேப்பிலை- தேவையான அளவு எப்படி செய்வது? கீரையை நன்கு… Read More

கோடை காலத்திற்கேற்ற மூவர்ண லஸ்ஸி

கிரீம் ஆப்பிள்        &    1 கெட்டித் தயிர்        &    2 கோப்பை பன்னீர் திராட்சை    &    50 கிராம் சர்க்கரை        &    3 ஸ்பூன் உப்பு            &    2 சிட்டிகை தண்ணீர்        &    1 கோப்பை சர்க்கரை சேர்த்து ஒர கரண்டி நீர்விட்டு திராட்சைப் பழங்களை வேக விடவும். வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும். ஆறியதும் வடிகட்யில் வடிக்கட்டி விதைகளை நீக்கவும். ஆப்பிளை நன்கு கழுவி விதைகளை நீக்கி, துண்டுகளாக்கி ஆப்பிளை மிக்ஸியில் போட்டு,… Read More

30 வகை சைட் டிஷ் ரெசிபி

  கல்யாணத்துக்கு ஜோடிப் பொருத்தம் அமைவது போல, சாப்பாட்டுக்கு ‘சைட் டிஷ் பொருத்தம்’ அமைவதும் ரொம்பவே அவசியம். காலையில் எழுந்த உடனேயே, ‘இன்னிக்கு என்ன சைட் டிஷ் பண்றது’ என்று கவலையோடு யோசிக்க ஆரம்பிப்பவர்கள் ஏராளம். இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ… சமையல் கலை நிபுணர் உஷாதேவி, தனது சமையல் ஞானத்தை தீவிரமாக பயன்படுத்தி, அலசி ஆராய்ந்து ’30 வகை சைட் டிஷ்’ ரெசிபிகளை இங்கு வாரி வழங்கியிருக்கிறார். ”சாதம், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, நாண்… Read More

மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்

  வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி… காலையில் கண் விழித்த உடனேயே, ‘சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது… கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ’30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால். ”உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு… Read More

பாலக் சிக்கன் மசாலா

  சிக்கன் உணவு என்றாலே ஒரு கட்டு கட்டும் நம்மவர்கள், பாலக்கீரையுடன் இணைந்த சிக்கன் மசாலாவை மட்டும் விட்டு வைப்பார்களா? செய்து பார்த்து சாப்பிட்டு அதன் சுவைக்கு பெருமை சேருங்கள். தேவையான பொருட்கள் பாலக்கீரை -1 கட்டு சிக்கன் -1/2 கிலோ வெங்காயம் -300 கிராம் (நறுக்கியது) தக்காளி -200 கிராம் (நறுக்கியது) மிளகாய்த்தூள் -2 டீஸ்பூன் தனியாத்தூள் – 3 டீஸ்பூன் மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன் பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 2… Read More

வெஜிடபிள் மசால்

  சப்பாத்தி, பூரி, தோசை போன்றவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா செய்து பாருங்கள். தேங்காய் சேர்க்காமல் செய்வதால், டயட்டில் இருப்பவர்களுக்குக் கூட இந்த மசால் ஏற்றது. சத்தானதும் கூட. செய்து பார்த்து சுவைப்போமா! தேவையான பொருட்கள்: கேரட் – 2 பெரியது உருளைக்கிழங்கு -2 பெரியது சவ்சவ் -பாதி பச்சைப்பட்டாணி – 2 கைப்பிடியளவு நறுக்கிய பீன்ஸ் -1/2 கப் நறுக்கிய முட்டைக்கோஸ் -1 கப் காலிப்ளவர் -1/2 கப் பெரிய வெங்காயம் -1… Read More

கோதுமை ராகி அப்பம்

  இந்த கோதுமை ராகி அப்பத்தை வெல்லம் கலந்து தயாரிப்பதால் எளிதில் ஜீரணமாகும். சத்தானதும் கூட. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு வகை இது. செய்முறையை பார்ப்போமா! தேவையான பொருட்கள் கோதுமை மாவு – 1 கப் ராகி மாவு – 1 கப் வெல்லம் – 1 கப் கனிந்த வாழைப்பழம் – 2 தேங்காய்த்துருவல் – 1 மூடி ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன் நெய் – தேவையான அளவு… Read More

தம் சிக்கன்

  சிக்கன் வகைகளில் அலாதியானது இந்த தம் சிக்கன். இதன் ருசிக்காக இதை விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகம். செய்து பார்த்து சுவைப்போமா? தேவையான பொருட்கள் சிக்கன் – 1/4 கிலோ முந்திரிப்பருப்பு – 1/4 கிலோ வெங்காயம் – 1/4 கிலோ(நறுக்கியது) தக்காளி – 200 கிராம் (நறுக்கியது) கசகசா – 150 கிராம் இஞ்சி பூண்டு விழுது – 20 கிராம் சிவப்பு காய்ந்த மிளகாய் விழுது-20 கிராம் கொத்தமல்லி இலை-சிறிதளவு (நறுக்கியது) பால் –… Read More

பர்மா சட்னி

  தினமும் தேங்காய் சட்னி, வெங்காய சட்னி தானா என்று அலுத்துக் கொள்பவர்களுக்காக இதோ பர்மா சட்னி. டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது. இதோ செய்முறை: தேவையானவை: பெரிய வெங்காயம் – 3 பச்சை மிளகாய் – 4 கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தாளிக்கத் தேவையான அளவு கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சம்பழச்சாறு – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு ரீபைன்ட் எண்ணெய் – தேவையான அளவு செய்முறை: வாணலியில்… Read More

மட்டன் கீமா புலாவ்

மட்டன் வகை உணவுகளில் தனி ருசி இந்த மட்டன் கீமா புலாவ். இதன் அட்டகாச ருசியில் சாப்பிடும் போது நீங்களே அளவு தாண்டி விடுவீர்கள். செய்து பார்த்து ருசிப்போமா? தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி – 2 கப் கொத்துக்கறி – 300 கிராம் தயிர் – 2 கப் வெங்காயம் – 1 இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன் லவங்கம் – 6 ஏலக்காய் – 8 மிளகு – 1/2… Read More

பால் கொழுக்கட்டை

  செட்டிநாட்டு இனிப்பு வகைகளில் பிரசித்தி பெற்றது இது. வெல்லம் சேர்த்த இனிப்பு வகை என்பதால், செரிப்பதற்கு எளிதானது. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர் களுக்கும் ஏற்றது. தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி-1 டம்ளர் வெல்லத்தூள்-1 டம்ளர் தேங்காய்ப்பூ-ஒரு மூடி ஏலக்காய் தூள்-1/4 டீஸ்பூன் செய்முறை: அரிசியை ஊற வைத்து நன்கு கெட்டி யாக அரைத்துக் கொள்ளவும். சிறிது உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை பெரிய சைஸ் முறுக்கு அச்சில் ஒரு பேப்பரில்… Read More

இறால் பஜ்ஜி

  வாழைக்காய் பஜ்ஜி தொடங்கி வெங்காய பஜ்ஜி, முட்டை பஜ்ஜி வரை சுவைத் திருப்பீர்கள். இது இறால் பஜ்ஜி. இதையும் தயாரித்து சாப்பிட்டு பார்த்து நாவில் ()தங்கிய இதன் சுவையை மனதோடு மணமாக வைத்துக் கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்: இறால் -1/2 கிலோ மைதா – 2 கையளவு அரிசி மாவு -1 கையளவு சோள மாவு- 1 கையளவு உப்பு -தேவைக்கேற்ப பச்சை மிளகாய் -2 (அரைக்கவும்) இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன் எண்ணெய்… Read More

மசால் தோசை பலவிதம்

உருளைக்கிழங்கு மசால் தோசை புழுங்கல் அரிசி- 500 கிராம், பச்சை அரிசி- 100 கிராம், உ.பருப்பு- 150 கிராம், வெந்தயம் சிறிதளவு கலந்து ஊறவைத்து, தோசை மாவு தயார் செய்துகொள்ளவும். உப்பும் சேர்த்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு- 250 கிராம், பெ.வெங்காயம்-2, ப.மிளகாய்-4, இஞ்சி ஒரு துண்டு, கறிவேப்பிலை, கொத்த மல்லி தழை, உப்பு போன்றவைகளை எடுத்துக்கொள்ளுங் கள். இவற்றை பயன்படுத்தி மசாலா தயார் செய்யுங்கள். தோசைக் கல்லில் நல்லெண்ணெய் தடவி, மாவு ஊற்றி மெலிதான தோசையாக வார்க்கவும். சிறிதளவு… Read More

மொச்சை நெத்திலி குழம்பு

நெத்திலிக் குழம்பு வைத்தால் வாசனை ஊரைத் தூக்கும். நாக்கை சப்புக்கொட்டிக் கொண்டு அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விடுவீர்கள். இந்த நெத்திலியோடு மொச்சையையும் பக்குவமாக சேர்த்துக் கொண்டால் குழம்பு ருசி ஊரைக் கூட்டும். வாசனை தெருவையே திரட்டும். சமைத்து ருசிக்கலாமா? தேவையான பொருட்கள்: மொச்சைப்பயறு – 200 கிராம் நெத்திலி மீன் – 1/2 கிலோ எண்ணெய் – 1 குழிக்கரண்டி சிறிய வெங்காயம் – 1/4 கிலோ தக்காளி – 1/4 கிலோ பூண்டு – 10… Read More