சுற்றுலா

இளஞ்சிவப்பு கடற்கரைகள்

வெள்ளை மற்றும் சாம்பல்  வண்ணம் கொண்ட கடற்கரைகளைக் கேள்விப்பட்டிருப்போம்; பார்த்திருப்போம். உங்களுக்கு வித்தியாசமான வண்ணங்களில் இயற்கை எழில் கொஞ்சும் அழகு களில் கடற்கரைகளைக் காண வேண்டுமா? அதற்கு பெர்முடா, கிரீஸ், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பஹாமாஸ் நோக்கி பயணிக்க வேண்டும். அங்கே குறிப்பிட்ட இடங்களில் உள்ள… Read More

சுகாதாரத்திலும் சுவிட்சர்லாந்து பெஸ்ட்டுதான்!

சுவிட்சர்லாந்து என்றவுடனே அதன் கொட்டிக்கிடக்கும் இயற்கை அழகு சட்டென்று நினைவுக்கு வரும். உலக கோடீஸ்வரர்கள் எல்லாம் தங்கள் பணத்தைப் பதுக்குவார்களாமே என்ற செய்தியும் நினைவுக்கு வரும். இயற்கை அழகு, பாதுகாப்பான பண பரிவர்த்தனையைப் போல சுகாதார… Read More

கோடை கொண்டாட்டத்தை குதூகலமாக்க கனவு தேசத்தில் கால் பதிக்கலாமா?

மூணாறு: உலக சுற்றுலா வரைபடத்தில் தனக்கென்று தனி முத்திரை பதித்து சுற்றுலாப்பயணிகளின் சொர்க்க பூமியாக திகழ்கிறது கேரள மாநிலம், மூணாறு. தேனி மாவட்டத்தை ஒட்டி இருக்கும் மூணாறுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா சென்றவண்ணம் உள்ளனர். அப்படி என்ன அங்கே இருக்கு என்கிறீர்களா?… Read More

சுற்றுலா போகலாம் வாரீங்களா!

‘வேறு வேலையே இல்லையா…’ என நினைத்து ஒதுக்கும் பல விஷயங்களில் ஒன்று, நிறைய இடங்களுக்கு பயணப்படுவது. அதாவது, வருடம் ஒரு முறையேனும் நம் அன்றாட வேலை, பிரச்னையிலிருந்து விலகி, வேறு இடம் சென்று, அந்த சூழ்நிலை, பழக்க வழக்கங்களை தெரிந்து கொள்ள விரும்புவது.அதுக்கெல்லாம் நேரம் ஒதுக்க முடியாது என்று சொல்வோர், இனியாவது, அவ்வப்போது இரண்டு, மூன்று நாட்களுக்கு, ஒரு சின்ன, ‘டூர்’ சென்று வருவது நல்லது. இது மாதிரி இரண்டு, மூன்று நாட்கள் என்றால், நம் குடும்ப… Read More

போவோம் மலம்புழா அணை!

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, ‘குளு குளு’ பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா? பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள். கோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதாக இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் மலம்புழா, முன் தமிழகத்தோடு இணைந்திருந்தது.… Read More

மச்சு பிச்சு!

  தென் அமெரிக்காவில் கஸ்கோ நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ளது மச்சு பிச்சு. கடல் மட்டத்துக்கு மேல் 2 ஆயிரம் மீட்டர் உயரத்தில் ஒரு மலையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் புராதன நகரம். இந்த நகரில் தோட்டங்கள், அடுக்கு மாடிகள், பெரிய பெரிய கட்டிடங்கள், அரண்மனைகள் உள்ளன. இந்த நகரில் தண்ணீர் செல்லும் கால்வாய்கள், நீரூற்றுகள், குளிக்கும் இடம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான படிக்கட்டுகள் மூலம் தோட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய கற்களில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.… Read More

அமைதியான நதி‌யினிலே…குமரகம்.

ஆடி முடிந்தது. ஆவணி பிறந்தது. மனம் சிறகடிக்க திருமணம் முடிந்தது. அடுத்தது என்ன? தேன்நிலவு தான். எங்கே போவது? அருகிலேயே கடவுளின் தேசம் இருக்க குழப்பம் ஏன்? குமரகம். இங்கு குதூகலத்திற்கு அளவே இல்லை. இயற்கை அன்னை தன் செல்வங்களை எல்லாம் வாரி, வாரி இந்த குமரகத்திற்கு தானமாக கொடுத்து விட்டாளோ! என்ற எண்ணம் அங்கு சென்றதும் நிச்சயம் ஏற்படும். திரும்பிய இடமெல்லாம், நிலமங்கை பசுமை போர்வை போர்த்தி இருக்கிறாள். ஒரு புறம் செழித்து வளர்ந்த நெற்கதிர்களுடன்… Read More

பாலைவன மஞ்சள் ரோஜா-ஜெய்சால்மர் கோட்டை

மன்னராட்சி மாய்ந்துவிட்டது. மகுடங்கள் சாய்ந்து விட்டன. மக்களாட்சி வீறுகொண்டு நடக்கிறது என்கிற காலகட்டம் இது. ஆனாலும், கற்சுவர்களால் கைகோர்த்து, கோட்டை என்று பெயர் பெற்று, மன்னர்களையும் அவர்தம் வம்சாவளிகளையும், மக்களையும் காத்து இன்றளவும் அழியாமல் தலைநிமிர்ந்து நிற்கின்ற கோட்டைகள், இந்த பாரததேசம் முழுவதும் ஆங்காங்கே நிலை கொண்டு, மன்னராட்சியை நினைவூட்டுகின்றன. அப்படி உயிர்ப்போடு இருக்கும் கோட்டையை கண்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஜெய்சால்மர் கோட்டைக்கு ஒருமுறை போய் வாருங்கள். அந்த கோட்டைக்குள் இன்றளவும் மக்கள் இன்பமாக வாழ்ந்து… Read More

உள்ளம் கவரும் எல்லோரா

எல்லா மதங்களும் அன்பøத்தான் போதிக்கின்றன என்றாலும். நவீன விஞ்ஞான யுகத்தில் மதங்கள் என்ற பெயரில் அடித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதைத் தவிர்த்து. வேற்றுமையில் ஒற்றுமையை காண அற்புதமான கலை பொக்கிஷங்களை நம் முன்னோர்கள் உருவாக்கி சென்றிருக்கிறார்கள். அவற்றுள் ஒன்றுதான் சரணதாசி குன்றுகளின் மடியில் அமர்ந்திருக்கும் எல்லோரா குகைக்கோயில்கள். அவுரங்காபாத்திலிருந்து 29 கி.மீ வடமேற்கு திசையில் பயணித்தால் எல்லோரா கோயில்களை அடைந்துவிடலாம். எல்லோரா ஒரு அழகிய சிறு கிராமாகவும் பண்டைய இந்தியாவின் வர்த்தக இணைப்புத் தலமாகவும் இருந்திருக்கிறது. இந்த… Read More

மனபலம் தரும் பகுபாலி

ஓங்கி உயர்ந்து நிற்கும் கோமதீஸ்வரின் சிலை அழகு கண்களுக்கு விருந்தளிக்க, அவருடைய புனித வாழ்க்கையின் சாரம் கேட்கும் காதுகளின் வழியாக.. உட்புகுந்து. கருத்தை கவர. ஆன்மாவை பேரானந்தம் தழுவிக் கொள்ள.. அடடா!” இதயம் நழுவும் இந்த அனுபவம் கிடைக்கும் இடம் கர்நாடக மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் இருக்கும் ஷ்ரவணபெலகோலா. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 67 அடி உயரமும் 60 டன் எடையும் கொண்ட பகுபாலியின் சிலை. பகுபாலியின் மற்றொரு பெயர்தான் கோமதீஸ்வரர். யார் அந்த பகுபாலி? போதான்… Read More

ஆரோக்கிய சுற்றுலா: (பூலாம்பட்டி நீர்த்தேக்கம்)

மேட்டூர் அணைக்கு தம்பி என்று சொல்லும் அளவிற்கு பரந்து கிடக்கிறது பூலாம்பட்டி நீர்த்தேக்கம்) காவிரிக் கரையோரம் மலை அதனையொட்டி கடல் போல் தண்ணீர். தென்னை மரங்கள். கேட்கவா வேண்டும்… அளவான பசுமை, இதமான படகுப் பயணம் என அச்சு அசலாக கேரளா போலவே உள்ளது நம்ம சேலத்துப் பக்கமுள்ள பூலாம்பட்டி. இப்படியொரு அழகான இடமா என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. காவிரி, தனது பயணத்தில் மேட்டூரில் இளைபாறிவிட்டு, அடுத்த 15-வது கிலோ மீட்டரில் பயணத்தின் நடுவே டீ… Read More

ஒரே நாளில் இரண்டு இடங்கள் – வெப்பம் தணிக்கலாம் வாங்க!

தேனி மாவட்டம் பெரியகுளம் வழியாக தேவதானப்பட்டியிலிருந்து 6-வது கிலோ மீட்டரில் கொடைக்கானல்-பழனிமலை அடிவாரத்தில் ரம்மியமாக அமைந்திருக்கிறது மஞ்சளாறு அணை. போகும் வழியிலே பிரசித்தி பெற்ற மூங்கிலணை காமாட்சியம்மன் திருக்கோயில் முன்பாக ஓடும் மஞ்சளாறு. “U’ வடிவில் அமைந்த மஞ்சளாறு அணையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகள். சுற்றிலும் மூன்று பக்கமும் உயர்ந்த அடர்ந்த பசுமையான மலைகள். கொடைக்கானல் மலையடிவாரத்தில் அமைந்த இந்த அணைக்கு இருட்டாறு, தலையாறு, மூலையாறு என மூன்று மலையருவிகளில் இருந்து வரும் நீர் தேங்கி நிற்கும். தென்மேற்கு,… Read More

பயணிகளின் கனிவான கவனத்திற்கு

விடுமுறை விட்டாச்சு. டூர், பிக்னிக் என்று ஊர், உறவு, வீடு, நண்பர் வீடு என நகர்ந்து விட வேண்டியதுதான். புறப்படுவதற்குமுன், என்ன செய்யணும். எதை தூக்கணும், யாருகிட்ட சொல்லணும் என்று ஒரு ரவுண்டு போவோமா! பயணச்சீட்டின் ஜெராக்ஸை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் கை கொடுக்கும். பயணத்தில் “மூத்த குடிமக்கள்’ இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும். நீண்ட நாள் டூர் என்றால், நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை வங்கி… Read More

இந்த கோடைக்கு ஐரோப்பா போகலாமே!

இந்தியாவின் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று அலுத்துப் போனவர்கள், ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான நீர்வழி சுற்றுலா மூலமாக, பல்வேறு நாடுகளின் சுற்றுலாத் தலங்களை பார்த்து ரசிக்கலாம். ஹாலந்து, பெல்ஜியம் ஆகிய நாடுகளில் நீர் வழிச் சுற்றுலா செல்லும் போது வண்ண, வண்ணமாக பூத்து குலுங்கும் மரங்கள், வித்தியாசமான கனிகள், பிரமிக்க வைக்கும் விண்ட் மில்கள் கண்களை கவரும். ஆம்ஸ்டர்டாம் – புடாபெஸ்ட் இடையேயுள்ள இடங்களை, இரண்டு வாரங்களில் நீர்வழி மூலம் பயணம் செய்து ரசிக்கலாம். நீர் வழிச்… Read More

மலம்புழா – அனுபவிக்க ஓர் அணை!

ஒரு அணைக்கட்டுதான், ஆனால் அதனைச் சுற்றி, பார்ப்பதற்கும் இனிமையாய் பொழுதைப் போக்குவதற்கும் ஏகப்பட்ட இடங்கள் இருக்கின்றன. மலம்புழா கேரளாவில் இருக்கும் அணைக்கட்டு. கேரளா என்றதும் ஏதோ பெரிய தூரத்தில் இருக்கிறது என்று நினைத்துவிடவேண்டாம் கோவையிலிருந்து ஒன்றரை மணிநேர பயணம்தான். பேருந்தில் பயணம் செய்தால் கோவையிலிருந்து 48 கி.மீ. தொலைவில் பாலக்காடு. அங்கிருந்து 9 கி.மீ. தொலைவில் மலம்புழா. கோவையிலிருந்து பயணிக்கும் பாதை முழுதும் நெஞ்சை அள்ளும் இயற்கைக் காட்சிகள். அணைக்கட்டை நெருங்கும்போதே குளிர்காற்று நம் முகத்தில் தவழ்ந்து… Read More

முதலிடத்தில் தாஜ்மகால்

சுற்றுலாவுக்கு மூட்டை முடிச்சுகளைக் கட்டும் நேரம் இது. அவரவர் தங்கள் வசதிக்கேற்ற இடங்களைத் தேர்வு செய்து சுற்றுலா செல்கின்றனர். சுற்றுலா தொடர்பான சில விவரங்கள்… * இந்தியாவுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை அடுத்து அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவது சுற்றுலாத் துறை. கடந்த ஆண்டில் இத்துறை, 64 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டித் தந்துள்ளது. * நம் நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு 1 கோடியே 10 லட்சம் பேர் சுற்றுலா சென்றுள்ளனர். * வெளிநாடுகளில் இருந்து… Read More

பாரம்பரிய பெருமைமிக்க அழகுக் களஞ்சியம்

தமிழகத்தை பாரம்பரிய பெருமைமிக்க அழகுக் களஞ்சியம் என்று சொல்லலாம். பிரமிக்க வைக்கும் கலை நுட்பங்கள் நிறைந்த கோவில்கள், வரலாற்றுக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் பிரமாண்ட கோட்டைகள், இயற்கையிடம் சிறப்பு வரம் வாங்கி எழிலோவியம் தாங்கி நிற்கும் பசுமைப் பள்ளத்தாக்குகள், அழகைக் கொட்டும் அருவிகள் என தமிழகத்தின் வனப்பு அளவிடற்கரியது. *** நீண்ட கடற்கரைகள், விதவிதமான விழாக்கள், மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய உணவுகள், உபசார உணர்வு மிக்க மக்கள்… என எல்லாமும் கொண்டது, தமிழ்நாடு. இவ்வளவு சிறப்புகளையும்… Read More

ஆரோக்கிய சுற்றுலா – நெஞ்சம் மகிழும் மேகமலை!

மலை முழுவதும் மேகங்களின் ஆட்சி. மேகமலைக்கு அதுதான் காரணப் பெயராம். மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி பச்சை பசேல் என விரிந்து பரந்து கிடக்கும் மேகங்களின் தாய்வீடு. தேனி மாவட்டம் சின்னமனூரிலிருந்து முப்பது கி.மீ. தூரத்தில் இருக்கிறது மேகமலை. அடிவாரத்தில் இருக்கும் சிறிய முருகன் கோயில் படுபிரசித்தம். மலை அடிவாரம் வரை கருங்கூந்தல்போல் விரிந்து நீண்டு கிடக்கும் சாலை, போகப் போக 20 அடியாகக் குறைந்து போகிறது. அதனால் பஸ்கள் மெல்ல மெல்ல ஊர்ந்துதான் செல்கின்றன. போகிற… Read More

இயற்கையோடு பழகி வர தேக்கடி

இயற்கையோடு பழகி வர தேக்கடி தமிழக எல்லையில் கேரளப்பகுதியில் அமைந்திருக்கும் அழகான இடம் தேக்கடி. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் எல்லையில் குமுளியையொட்டி கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தேக்கடி அமைந்துள்ளது. இயற்கையுடன் கொஞ்சம் பழகிட்டு வரலாமே என நினைப்பவர்களுக்கு எழில் கொஞ்சும் தேக்கடி நல்ல சாய்ஸ். வனவிலங்கு சரணாலயம்: எழில் கொஞ்சும் தேக்கடியில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. 673 சதுர கி.மீ பரப்பளவில் பச்சைப் பசேலென பரந்து விரிந்து கிடக்கும் இந்த சரணாலயம் கடல் மட்டத்தில் இருந்து… Read More

அந்தமான் அற்புத தீவு

அந்தமான் அற்புத தீவு வங்கக்கடல் தனது மடியில் வைத்து தாலாட்டிக் கொண்டிருக்கும் வனப்புமிக்க தீவுக்கூட்டம்தான் அந்தமான், நிகோபர். இவை இயற்கை விரும்பிகளின் சொர்க்கபுரியாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. வங்கக்கடலில் வடக்கில் இருந்து தெற்காக சுமார் 700 கி.மீ நீளத்துக்கு விரிந்து கிடக்கும் இந்த தீவுக்கூட்டங்களில் மொத்தம் 36தீவுகளில்தான் மனிதர்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். பிற தீவுகள் அடர்ந்த காடுகளைக் கொண்டவை. இவற்றில் அரிய வகை விலங்குகளும், பறவைகளும், தாவர வகைகளும் நிறையவே உண்டு. அழகு மிளிரும் அந்தமான் நிகோபர் தீவுகளில்… Read More