தொடர்கள்

தடுப்பூசி ரகசியங்கள்!

முதியோருக்கும் வேண்டும் தடுப்பூசி!   தடுப்பூசி என்றாலே அது குழந்தைகள் சமாச்சாரம் என்றே, பலரும் நினைக்கின்றனர்.  தடுப்பூசி அட்டவணையில்கூட, பத்து வயதுக்குள் போடப்பட வேண்டிய தடுப்பூசி விவரங்கள் மட்டுமே தரப்பட்டிருக்கும். அதற்குப் பிறகு, உங்கள் விருப்பத்தின்பேரில் போட்டுக்கொள்ளலாம் என்று, ஒரு தனிப் பிரிவில் சில தடுப்பூசிகளின் பெயர்கள் மட்டும் தரப்பட்டிருக்கும். நடைமுறையில், இளம் வயதினருக்கும் முதியவர்களுக்கும் பல தடுப்பூசிகள் இருக்கின்றன.  இவற்றைப் போட்டுக்கொள்வது அவர்களின் உயிரையே காப்பாற்றும். ஆனால், இது தொடர்பான விழிப்புஉணர்வு மக்களிடம் மிகவும் குறைவாகவே… Read More

தடுப்பூசி ரகசியங்கள்! – 15

பேரிக்காய் அளவில் இருக்கின்ற கர்ப்பப்பையின் கீழ்ப்பகுதியில், பிறப்பு உறுப்பு இணைகின்ற இடத்தில் கர்ப்பப்பை வாய் (செர்விக்ஸ்) உள்ளது. ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ (Human Papilloma Virus (HPV) ) என்கிற கிருமி இந்த இடத்தைத் தாக்கும்போது புற்றுநோய் வருகிறது. இந்த வைரஸ் கிருமி பாலுறவு மூலமே பரவுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பவருக்கு, புற்றுநோய் வராது. எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு இந்த வைரஸ் கிருமி கர்ப்பப்பை வாயை ஆக்கிரமித்து, அங்குள்ள செல்களைத் தாக்கிப் புற்றுநோயை உருவாக்குகிறது.… Read More

நலம் 360’ – 24

இடுப்பின் சுற்றளவு அதிகமாக அதிகமாக, வாழ்நாளின் நீளம் குறையும் என்பது நமக்குத் தெரியும். ஆனால், கடந்த ஆண்டு உலகம் எங்கும் நிகழ்ந்த மரணங்களில் அதிகம், உடல் எடை அதிகரித்து ஏற்பட்ட மாரடைப்பினால்தான் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. மாரடைப்பின் பின்னணியில் அதிகம் இருப்பது சர்க்கரை நோயும் ரத்தக் கொதிப்பும்தான். உடல் எடை அதிகரிப்பதால் மட்டுமே பெரும்பாலும் இந்த இரண்டு நோய்களும் வருகின்றன. உலகில் 65 சதவிகித மக்கள் வாழும் நாடுகளில், ஊட்டச்சத்து குறைவைக் காட்டிலும், ஊட்டி ஊட்டி… Read More

தடுப்பூசி ரகசியங்கள்! – 11

அம்மை நோயை தடுப்பது ஈசி! நம்மிடம் இருக்கு எம்.எம்.ஆர். தடுப்பு ஊசி! அம்மை நோய் என்றாலே, அலறுபவர்கள்தான் அதிகம். காரணம்… பயம். சொல்லிவைத்த மாதிரி சில வாரங்கள் படுக்கையிலேயே கிடத்திவிடும். சாப்பிடப் பிடிக்காது. காய்ச்சல் அனலாய்க் கொதிக்கும். எந்த மருந்துக்கும் கட்டுப்படாது. உடல்வலி படுத்திவிடும். மிகக் கொடுமையாக அம்மைத் தடிப்புக்கள் கொஞ்ச காலத்திற்கு வெளியே தலைகாட்ட விடாது. இத்தனை வேதனைகளில் இருந்தும் நம்மைக் காக்கிறது, ‘எம்.எம்.ஆர்’ என்ற தடுப்பு ஊசி (MMR vaccine). இது, தட்டம்மை, அம்மைக்கட்டு,… Read More

தடுப்பூசி ரகசியங்கள்! – 9 நிமோனியா இனி நெருங்காது!

பச்சிளம் குழந்தைகளைக் குறிவைத்துத் தாக்கும் கொடிய நோய், நிமோனியா. ‘ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே’ (Streptococus Pneumoniae) என்ற பாக்டீரியா, காற்றின் மூலமாகப் பரவி நுரையீரலைப் பாதிப்பதால் இந்த நோய் ஏற்படுகிறது. நிமோனியா நோயாளி இருமும்போதும், தும்மும்போதும், சளியைக் காறித் துப்பும்போதும் இந்தக் கிருமி, சளியுடன் காற்றில் கலந்து, அதைச் சுவாசிக்கும் நபருக்கும் தொற்றிக்கொள்ளும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களோடு நெருங்கிப் பழகும் குழந்தைக்கும், நோய் பரவக்கூடிய வாய்ப்பு அதிகம். சரியாகத் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள், குறைந்த எடையில் பிறக்கும் குழந்தைகள்,… Read More

மனிதன் மாறி விட்டான்!-26

15. உங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தினரைச் சாப்பிட அழைக்கிறீர்கள். எப்படி பரிமாறுவீர்கள்?  விடை: விருந்தினர் அமர்ந்த பிறகு, ஒவ்வொரு பதார்த்தத்தின் பெயரையும் சொல்லி அவர் அனுமதி பெற்று பரிமாறுவேன். இலையில் எதையும் வீணாக்கக் கூடாது. விருந்தினர்களுக்குச் சில பொருட்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். சில பதார்த்தங்கள் பிடிக்காமல் போகலாம். அவர் சர்க்கரைப் பிரச்னை உள்ளவராக இருக்கலாம். எனவே, அவரை அமரச் செய்து இன்ன பதார்த்தம் என்று சொல்லி, அவர் பரிமாறலாம் என்று சொன்ன பிறகுதான் பரிமாற வேண்டும். 16.… Read More

மனிதன் மாறி விட்டான்! -25

1.சிம்பன்சிகளுக்கு நெருங்கிய உறவினர் யார்? விடை : மனிதன். மனிதர்களும் ‘ஏப்ஸ்’ என்று சொல்லப்​படுகின்ற குரங்கினங்களும் சாதாரண குரங்குகளைவிட அதிகம் தொடர்பு உடையவை. நம்முடைய மரபுக்கூறுகள் சிம்பன்சிகளிடமிருந்து 1.6 சதவிகிதம் மட்டுமே வேறுபடுகின்றன. கொரில்லாக்களோ சிம்பன்சிகளிடமிருந்து 2.3 சதவிகிதம் வேறுபடுகின்றன.  ‘ஒராங்குட்டான்’ என்கிற குரங்கினம் நம்மிடமிருந்து 3.6 சதவிகிதம் வேறுபடுகிறது.  கிப்பன்களுக்கும் நமக்கும் 2.2 சதவிகிதம் மரபுக்கூறுகள் வேறுபடுகின்றன.  எப்படிப் பார்த்தாலும் நமக்கு நெருங்கிய மரபுக்கூறு கொண்டது சிம்பன்சிதான். 3. நட்சத்திர ஹோட்டல்களில் ஆறேகால் அடிக்குமேல் இருக்கும்… Read More

மனிதன் மாறி விட்டான்!-24

மருத்துவம் என்பது மனித வாழ்க்கையை நீட்டிப்பதற்கான முயற்சியாக ரத்தம் செலுத்துவது, இருதய சிகிச்சை போன்ற பலவற்றை மேற்கொண்டு வருகிறது.  மருந்துகள், மாத்திரைகள் ஆகியவற்றால் நாம் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்றவற்றைக்  கட்டுப்படுத்தி உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.  அதேநேரத்தில் இயற்கை அதை வேடிக்கை பார்ப்பதில்லை.  அது வேறுவிதத்தில் சில எதிர்வினைகளைச் செய்கிறது.  நம் உடலில் புற்றுநோய் வராமலிருக்க புற்றுக் கட்டியை அமுக்குகிற  ஒரு ஜீன் இருக்கிறது.  ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் வாழுகிறபோது அந்த ஜீனின் செயல்பாடு குறைந்துவிடுகிறது. … Read More

மனிதன் மாறி விட்டான்!-6

உடலின் வளர்ச்சி ஒவ்வொரு பிராணிக்கும் ஒவ்வொரு மாதிரி, பல் முளைப்பதில் இருந்து பாத அமைப்பு வரை. நான்கு முழங்கால்கள் உள்ள பிராணி யானை மட்டும்தான். ஆனாலும், பாவம் அது மட்டும்தான் எம்பிக் குதிக்க முடியாது. மனிதனுக்கு இரண்டு முறை பற்கள் விழுந்து முளைக்கின்றன. யானைக்கு ஆறு முறை, சுறா மீன்களுக்கு வாழ்வின் இறுதி வரை விழுந்து விழுந்து முளைக்கின்றன. நாம் கடைசி வரை ஒரே எலும்புக் கூட்டோடு இருக்கிறோம். சிங்கி இறால் போன்றவை அடிக்கடி வெளிப்புற எலும்புக்கூட்டில்… Read More

மனிதன் மாறி விட்டான்!-4

அடுத்தவர்களை ஏமாற்றுவதற்காகச் சில குறியீடுகளை நாம் பயன்படுத்துகிறோம்.  அவற்றை நம்பி சிலர் வழி தவறி விடுவதும் உண்டு.  நிதி மோசடிகள் இப்படித்தான்.  ஒத்துழைப்பது போல ஏமாற்றுவதும், மகிழ்ச்சியாக இருப்பதுபோல நடிப்பதும் இந்த வகையறாக்களே.  இது மனிதர்களிடம் மட்டும் இல்லை, விலங்குகளிடம் உண்டு.  பலசாலியான குரங்கு பக்கத்தில் இருக்கும்போது  ஓர் உணவுப் பொருளில் அக்கறை இல்லாதது போல நடக்கிற சில குரங்குகள், அந்த பலசாலியான குரங்கு வேறுபக்கம் திரும்பியதும் அதைச் சட்டென்று  மின்னல் வேகத்தில் எடுத்து விழுங்கி விட்டு… Read More

மனிதன் மாறி விட்டான்!-3

யார் எல்லோரோடும் கலக்கும் ஆற்றல் பெற்றிருக்கிறார்களோ, அவர்களையே இயற்கை ஆசீர்வதிக்கிறது! இந்த உண்மையை எளிமையான உதாரணம் மூலமாக விளக்குகிறேன். ஸ்டான்லி மில்லர், ஹெரால்ட் யூரே… ஆகிய இருவரும் சிகாகோ பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். ஏராளமான பரிசோதனைகளைச் செய்தவர்கள். மீத்தேன், அமோனியா, ஹைட்ரஜன், தண்ணீர் ஆகிய நான்கையும் கண்ணாடிக் குடுவைகளில் வைத்து அவர்கள் ஒரு பரிசோதனைச் செய்தனர். இது நடந்து அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்டது. சுமார் ஏழு நாட்கள் அந்தச் சோதனை நடந்தது. அவற்றின் முடிவில், கார்பன் பற்றி… Read More

தடுப்பூசியின் அவசியங்கள்! தடுப்பூசி ரகசியங்கள் – 2

உலகில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் வரை ஒரு நோய்க்கான எதிர்ப்பு சக்தி என்பது, அந்த நோய் ஒருவருக்கு ஏற்பட்டு, அதன் மூலம் அவருக்கு எதிர்ப்பு சக்தி பெறப்படுவதாக இருந்தது. உதாரணத்துக்கு… சின்னம்மை ஒருவருக்கு வந்து குணமான பிறகு, அந்த நோய்க்குரிய எதிர்ப்பு சக்தி கிடைத்துவிடுவதால், அவரது வாழ்நாளில் அந்த நோய் மீண்டும் வருவது இல்லை. ஆனால், நோய் ஏற்படும்போது அவர் நோயின் தன்மையால் துன்பப்படுவார். அவருடன் நெருங்கிப் பழகும் குடும்பத்தினர்கள், நண்பர்கள் அல்லது மாசடைந்த சுற்றுச்சூழல் வழியாக மற்றவர்களுக்கும்… Read More

உணவு யுத்தம்!-19

  தொட்டுக்கொள்ளலாமா? பள்ளிப் பிள்ளைகள் இருக்கின்ற வீடுகளின் ஃபிரிட்ஜில் தவறாமல் இடம் பெறுகிறது டொமடோ கெட்சப் (Ketchup). சமோசா, நூடுல்ஸ், சாண்ட்விட்ச், ஃபிங்கர்சிப்ஸ், பஃப்ஸ். கட்லெட்… ஏன் உப்புமாவுக்குத் தொட்டுக் கொள்வதற்குக்கூட கெட்சப் தேவைப்படுகிறது. தக்காளி சாற்றின் மீது ஏன் இத்தனை மோகம்?… Read More