பொதுஅறிவு செய்திகள்

உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடம்!

உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையை, சமீபத்தில் துபாய் நகரில் உள்ள, “புர்ஜ் துபாய்’ என்ற கட்டடம் பெற்றுள்ளது. அதற்கு போட்டியாக, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவில், மிக உயரமான ஓட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. புர்ஜ் துபாய் கட்டடத்தை விட, உயரத்தில் இந்த ஓட்டல் 36 அடி மட்டுமே குறைவு. எனினும், இந்த ஓட்டலின் உச்சியில் வைக்கப்பட இருக்கும் கடிகாரம், உலகின் மிகப் பெரிய கடிகாரம் என்ற பெருமையைப் பெற உள்ளது. “மெக்கா கிளாக் டவர்… Read More

உயரமான அணைகள்!

தண்ணீரை தேவைக்கேற்ப சேமித்துப் பயன்படுத்த மனிதன் அணைகளைக் கட்டத் தொடங்கினான். இன்று உலகெங்கிலும் அணைகள் உண்டு. அவற்றில் அதிக உயரமான 5 அணைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். உயரத்தில் நம்பர் 1 தஜிகிஸ்தானில்தான் உலகிலேயே மிக உயரமான அணை இருக்கிறது. வாக்ஸ் ஆற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டிருக்கிறது. `நூரக் டேம்’ என்பது இதன் பெயராகும். இது 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1980ல் கட்டி முடிக்கப்பட்டது. 314 மீட்டர் உயரமுடைய இந்த அணைதான் இதுவரை உலகின் உயரமான… Read More

அமெரிக்க நாட்டின் அழகிய தலைநகரம் வாஷிங்டன்

உலக வல்லரசாகத் திகழும் அமெரிக்க நாட்டின் அழகிய தலைநகரம் வாஷிங்டன். இது பொதுவாக `வாஷிங்டன் டி.சி.’ என்று அழைக்கப்படுகிறது. `டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா’ என்பதன் சுருக்கமே `டி.சி’. 1790-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதியன்று இந்நகர் நிறுவபட்டது. தொடக்கத்தில் கொலம்பியா பகுதியில் தனி நகரசபையாக இருந்த வாஷிங்டன், 1871-ம் ஆண்டு ஒரு சட்டத்தின் முலம் `டிஸ்ட்ரிக்ட் ஆப் கொலம்பியா’ என்று ஒரே பகுதியாக மாற்றப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 68.5 சதுர மைல்கள் ஆகும். நகரத்தின் மக்கள்தொகை… Read More

இது யானைகளின் கதை

கம்பீரத்தின் அடையாளம்; காட்டுக்குள் வலம் வரும் பிரமாண்டம்; குழந்தைகளுக்கு குதூகலம்; பெரியவர்க்கு கடவுளின் மறுவுருவம்; காட்டை விளைவிக்கும் விவசாயி; உலகில் வாழும் வன உயிரினங்களில் உருவில் பெரிய மிருகம்; இத்தனை பெருமைகள் அனைத்தும் கொண்ட வன உயிரினம், வேறெது…நம்ம யானையார்தான். யானை மிதித்து ஒருவர் சாவு; மின்சாரம் தாக்கி ஆண் யானை சாவு…என்று தமிழகத்தில் சமீபத்திய செய்திகளில் யானைகள் இடம் பெறாத நாட்கள் குறைவு. இந்தியாவிலேயே யானை-மனித மோதல் அதிகம் நடப்பது, கோவை வட்டாரத்தில்தான் என்கிறது, ஒர்… Read More

மாநிலங்களும் இந்திய ஒன்றியமும்!

இன்றைக்குஇந்தியாவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்தி வருகிறது தெலுங்கானாபோராட்டம். தனி மாநில கோரிக்கைக்கான இப்போராட்டம் ஆந்திர சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல், மாணவர்களின் போராட்டங்கள், உயிர்தியாகங்கள் போன்றவற்றால் அம்மாநிலமே நிலை குலைந்து போயுள்ளது. கடலோரமாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா என மூன்று பகுதிகளையும் உள்ளடங்கியதுஆந்திர மாநிலம். இதில் தெலுங்கானா ஒப்பிட்டு அளவில் பெரியது. வாரங்கல்,ஹைதராபாத், ரெங்காரெட்டி, கரீம்நகர், நிஜாமாபாத், மேடக், நலகொண்டா ஆகியமாவட்டங்கள் தெலுங்கானா என்று அழைக்கப்படுகிறது. நாடு விடுதலை அடைந்தபோது ஹைதராபாத் நிஜாம் தனது சமஸ்தானத்தை இந்தியாவுடன்இணைக்க மறுத்தபோது… Read More

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர், மனிதனால் உருவாக்கபட்ட மிகச் சிறந்த, பயனுள்ள வானூர்தி ஆகும். ஹெலிகாப்டரால் செங்குத்தாக மேலே உயரவும், கீழிறங்கவும், முன்னோக்கி, பின்னோக்கியும், பக்கவாட்டிலும் பறக்க முடியும். இதனால் நகராமல் ஒரே இடத்திலும் தொடர்ந்து பறக்க இயலும். ஹெலிகாப்டர் தரையிறங்கவும், மேலேறவும் சிறிய இடமிருந்தால் போதும் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹெலிகாப்டர் பறக்கும் நுட்பம் பல நுற்றாண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கபட்டுவிட்டது என்பதே உண்மை. கி.பி. 4-ம் நுற்றாண்டில் சீன நாட்டில் ஒரு விளையாட்டுக் கருவி உருவாக்க பட்டது. அக் கருவியில் ஹெலிகாப்டர்… Read More

செல்லப் பெருச்சாளி!

எலி என்றாலே எல்லாருக்குமே கிலி ஏற்படுவது இயற்கைதானே! வீட்டில் எங்காவது பார்த்தால், அதை விரட்டும் வரை தூக்கமே வராது; அதிலும், பெருச்சாளி என்றால் கேட்கவே வேண்டாம்; இப்படி இருக்கும் போது, பெருச்சாளியை வீட்டில் செல்லமாக வளர்க்கின்றனர் என்றால் வியப்பாகத் தானே இருக்கிறது. நம்மூரில் செல்ல நாய் வளர்ப்பது போல, அமெரிக்காவில் டைபல்டோஸ் என்ற பெண், பெருச்சாளியை, ஒரு குழந்தையை போலவே வளர்த்து வருகிறார். தினமும், அது அடிக்கும் லூட்டிக்கு அளவேயில்லை. நான்கு அடி நீளமுள்ள இந்த பெருச்சாளியின்… Read More

செல்லபிராணிகளுடன் பயணிக்க…

செல்லபிராணிகளான நாய், பூனை போன்றவற்றை பயணத்தில் உங்களுடன் அழைத்துச் செல்வதற்கு முன்பே அவற்றின் உடல் பயணத்திற்கு தேவையான அளவில் ஆரோக்கியமாக இருக்கிறதா என்று பிராணிகள் நல மருத்துவரின் முலம் உறுதிசெய்து கொள்வது நல்லது. மேலும் அதற்குரிய தடுப்பூசிகள் மற்றும் சான்றிதழ்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். சுற்றுலாவிற்கு செல்வதற்கு முன்பே உங்கள் செல்லபிராணியை கார் பயணத்திற்கு படிபடியாக பழக்கபடுத்த வேண்டும். நீண்ட தூர கார்பயணம் என்றால், 5 மணிநேரத்திற்கு முன்பாகவே உணவளிப்பதை நிறுத்திவிடுங்கள். எப்போதும் கொடுக்கக்கூடிய வழக்கமான உணவு… Read More

தோசைக் கல்லும்.. பூமியும்…!பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்?

செய்தித்தாள்கள், டி.வி., இன்டர்நெட் என எல்லாவற்றிலும் இடம்பிடிக்கும் முக்கியச் செய்தியாக `புவி வெப்பமயமாதல்’ உருவெடுத்துள்ளது. ஆராய்ச்சியாளர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை, தினமும் புவி வெப்பமடைவது குறித்த அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றனர். அவ்வளவு ஏன்? பட்டிமன்றங்களில் தொடங்கி பட்டிதொட்டி வரை இதுகுறித்த விவாதங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன. ஆனால், தீர்வுதான் கிடைத்தபாடில்லை. பூமி வெப்பமடைவதற்கு யார் காரணம்? சந்தேகமேயில்லை. மனிதர்களாகிய நம்முடைய செயல்களினால் தான் பூமி வெப்பமடைகிறது. நாம் பயன்படுத்துகின்ற பொருட்களில் இருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள்,… Read More

ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!

`ஒலிம்பிக்’ – உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல… விளையாட்டு ரசிகர்களுக்கும் ஓர் கனவு. அங்கே ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை. அப்படி அரங்கேறிய ஆச்சரியங்களை இங்கே பார்ப்போம். 1900-ம் ஆண்டில் பாரிசில் நடந்த ஒலிம்பிக் தொடரில் மைதானங்கள் மிகவும் சிறியதாக அமைக்கப் பட்டிருந்தன. இந்த சிறிய மைதானத்தில் வட்டு எறிதல் போட்டியில் வீரர்கள் எறிந்த வட்டுகள், அங்கிருந்த மரத்தில் சிக்கிக் கொண்டன. தங்கம் வென்ற ஹங்கேரி வீரர் டால்ப் போயர் எறிந்த வட்டு முன்று வாய்ப்புகளிலும் ரசிகர்கள்… Read More

2009 நிகழ்வுகளின் தொகுப்பு- விருதுகள்

கோல்டன் குளோப் விருது உலகம் முழுவதும் திரைப்படம், நாடகம், தொலைக்காட்சித்துறையில் சாதனை படைத் தவர்களுக்கு ஹாலிவுட்டைச் சேர்ந்த திரைப் பட விமர்சகர் அமைப்பு ஆண்டுதோறும் விருது வழங்கிவருகிறது. ஸ்லம்டாக் மில்லியனர்’என்ற ஆங்கிலப் படத்துக்கு மிகச்சிறப்பாக இசை யமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு உலக புகழ் பெற்ற கோல்டன் குளோப் விருது வழங்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றுள்ளார். 81-வது ஆஸ்கார் விருதுகள் திரைப்படத் துறையில் மிக உயரிய… Read More

2009 நிகழ்வுகளின் தொகுப்பு சர்வதேசம்

* வங்கதேச நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில், ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அதையடுத்து ஷேக் ஹசீனா தலைமை யிலான புதிய அரசு பதவியேற்றுக் கொண்டது. * கடலோரக் காவலை வலுப்படுத்த 8 விமானங்களை அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்குகிறது. சுமார் 10 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தம் சமீ பத்தில் கையெழுத்தானது. * தரையிலிருந்து ஏவப்பட்டு தரை இலக் கைத் தாக்கும் பழமையான ஆர்.எஸ்.-18 ரக… Read More

2009 நிகழ்வுகளின் தொகுப்பு தேசம்

* இஸ்ரேல் நாட்டின் ஒத்துழைப்புடன் வடிவமைக்கப்பட்ட நாட்டின் அதிநவீன ரிசாட்-2 என்ற உளவு செயற்கைக்கோளை முதன்முறையாக ஏவி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புதிய சாதனை படைத்துள்ளது. ரேடார்கள் பொருத்தப்பட்ட ரிசாட்-2 செயற்கைக் கோள் எல்லைப் பகுதிகளில் நாட்டின் கண்ணாக செயல்படும். எதிரிகளின் ஊடுரு வலைத் தடுக்கவும், தீவிரவாதிகளுக்கு எதி ரான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பாதுகாப்புப்படையினருக்கு இது பேருதவி யாக இருக்கும். * அண்டார்டிகா பகுதியில் புதிய ஆராய்ச்சி மையம் அமைக்க இந்தியா திட்டமிட் டுள்ளது.… Read More

தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு

முடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல் முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. ஐம்பெருங் குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங் கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட ஜனநாயகக் குருத்துகள் எனலாம். பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வெள்ளையர்கள்… Read More

பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் இது பரப்பளவு அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட உலகநாடுகளின் பட்டியலாகும். அரசுரிமை (இறையாண்மை) பெற்றுள்ள நாடுகளை மட்டுமே இங்கு எண்ணிக்கையுடன் தொகுத்துள்ளோம். அரசுரிமை (இறையாண்மை) இல்லாத நிலப்பரப்புகளை, வாசகர்கள் பொருந்தி காண்பதற்காக, சாய்வெழுத்துக்களில் தொகுத்துள்ளோம். குளங்கள், நீர்தேக்கங்கள், ஆறுகள் போன்ற நிலம்சார்ந்த நீர்நிலைகளும் இப்பரப்பளவுகளில் அடக்கம். அண்டார்டிகாவின் சில பகுதிகளை பல நாடுகள் உரிமை கொண்டாடுகின்றன. அப்பகுதிகளின் பரப்பளவுகளை இங்கு கணக்கில் சேர்த்துக்கொள்ளவில்லை. இப்பட்டியலின் வரைகலையை காண்க பரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (படிமம்).… Read More

மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல

மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல் பரப்பளவின் அடிப்படையில் நாடுகள் தனி நாடுகளிலும் சில ஆட்சிப்பகுதிகளிலும் 2005 ஆண்டிற்கான மக்கள்தொகைப் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாட்டுகள் சபையின் 191 உறுப்பினர் நாடுகள் மற்றும் சீனக் குடியரசு, தைவான், வாட்டிக்கன் நகரம் ஆகியவை மட்டுமே எண்வரிசை இட்டுக் காட்டப்பட்டுளது. பிற ஆட்சிப்பகுதிகள் எண்வரிசைப் படுத்தாமல் ஒப்பீட்டுக்காக தரப்பட்டுள்ளன.… Read More