மகளிர்

பந்தத்தை சிதைக்கும் மன அழுத்தம்!

கர்ப்ப காலத்தில், ஹார்மோன் சுரப்பு எல்லாமே வழக்கத்தை விட அதிகமாக சுரக்கும். குழந்தை பிறந்ததும், ஹார்மோன் சுரப்பு சட்டென்று குறையும். பிரசவத்திற்கு பிந்தைய பெண்களின் மனநிலையை, ‘போஸ்ட்பார்டம் புளு’ என்று சொல்வோம். இதில், மன அழுத்தம் போன்ற தீவிர பிரச்னைகள் இருக்காது. ஆனால், கோபம், எரிச்சல், பதற்றம், துாக்கமின்மை உட்பட சில பிரச்னைகள் இருக்கும்.… Read More

பெண்களே எச்சரிக்கை…! உங்க சானிட்டரி நாப்கின் பாதுகாப்பானதா?

பெண்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று சானிட்டரி நாப்கின்ஸ். வசதிக்கு ஏற்ப பேட்களை வாங்கிக்கொள்ளலாம் என்றாலும் , சராசரியாக இதற்காக மாதம் செலவிடும் தொகை என்பது அதிகம்தான்.… Read More

பெண்களே உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா? இவற்றை எல்லாம் கட்டாயம் கடைபிடியுங்க..

நாற்பது வயதை நெருங்கும் பெண்கள் கடைபிடிக்க வேண்டிய வாழ்வியல் மாற்றங்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதம், மாவுச்சத்து, வைட்டமின்கள் தாது உப்புக்கள் போன்றவை தேவையான அளவு இருத்தல் அவசியம்.… Read More

பெண்கள் மட்டும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம்.! ஆண்கள் தவிர்த்துவிடுங்கள்.!

பெண்களின் பெரிய கவலைகளில் ஒன்று… மாதவிலக்குப் பிரச்னை. உடலும் மனமும் ஒரேயடியாகச் சோர்ந்துவிடும். ”பொதுவாக, 28 நாட்களுக்கு ஒருமுறை வரக்கூடிய மாதவிலக்கு, பலருக்கு இரண்டு, மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறைகூட வந்து பெரும் அவஸ்தையை ஏற்படுத்தும். ஹார்மோன்… Read More

பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள்?

பெண்களிடம் இருக்கும் ஆபத்தான 5 பழக்கங்கள் நீரின்றி அமையாது உலகு என்பது போல பெண்ணின்றி அமையாது குடும்பம்.ஒரு குடும்பம் சிறந்து விளங்க வேண்டுமென்றால் அந்த குடும்பத்தின் பெண்… Read More

பெண் நலம் காக்கும் பஞ்ச சூத்திரம்!

ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் முதல் வாரம், தேசிய ஊட்டச்சத்து வாரமாக இந்தியாவில் அனுசரிக்கப்படுகிறது. இது அந்த வாரத்துக்கான கொண்டாட்டமாக மட்டுமே இல்லாமல், அந்த வருடத்தில் பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டிய விழிப்புணர்வு தொடர்பாகவும்… Read More

ஹை ஹீல்ஸ் அணியும் பெண்களா நீங்க? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா? இதோ!

நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் நமது உடை, உணவு, பழக்கவழக்கம், நாம் பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்தும் மாறிவிட்டது. இதில் குறிப்பான ஓன்று பெண்கள் அணியும் உயரமான செருப்புகள். ஹை ஹீல்ஸ் என்று சொல்லப்படும் இந்த… Read More

எடைக்குறைப்பு ஏ டு இஸட்: இப்போ இல்லாட்டி எப்போ?

பருமனாக இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் கேள்விகளில் முக்கியமானது இது (தலைப்பை மீண்டும் படிக்கவும்). ‘மெனோபாஸ் வந்துட்டா வெயிட்டைக் குறைக்கிறது சிரமம்’ என்று அவர்களுக்குக் காரணமும் சொல்லப்படும். மெனோபாஸுக்கு முந்தைய காலகட்டத்தில் சில பெண்கள் அனுபவிக்கும் அவதிகள் சொல்லிமாளாதவை. எந்தத் தொந்தரவும் இல்லாமல் அந்தப் பருவத்தைக் கடப்பவர்களும் உண்டு.… Read More

எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணிப் பண்ணணும்!

‘இலக்கை அடைவதில் உங்கள் திட்டம் பலனளிக்கவில்லை என்றால் திட்டத்தை மாற்றுங்கள், இலக்கை அல்ல’ என்றொரு பொன் மொழி உண்டு. எடை குறைப்பு முயற்சிக்கு மிகப் பொருத்தமான பொன்மொழி இது.… Read More

சின்ன பிரச்னையல்ல – சினைப்பை நீர்க்கட்டி!

பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் மகளும், ‘கேதார்நாத்’ திரைப்படத்தின் நாயகியுமான சாரா அலிகான், தனக்கு `பி.சி.ஓ.எஸ்’ எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி  பாதிப்பு இருந்ததாக சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியில் கூறியிருந்தார். அதன் காரணமாகவே, அவருக்கு உடல் எடை வேகமாக அதிகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். சாரா மட்டுமல்ல, இந்தியாவில் வருடத்துக்கு     பத்து லட்சம் பெண்கள், `சினைப்பை நீர்க்கட்டி’ எனப்படும் பி.சி.ஓ.எஸ் (Polycystic Ovary Syndrome) பிரச்னையால் பாதிக்கப்படுகிறார்கள்.… Read More

இன்றே நீங்கள் அறிய வேண்டிய அவசியமான விஷயங்கள்!

பெண்களின் பாதுகாப்பு பற்றி இப்போது பரவலாகப் பேசப் படுவது வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால், பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பு இன்னமும் பேசாப் பொருளாகவே இருந்து வருகிறது. அதையும் பெண்கள் அறிந்து கொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம். ‘உங்க குடும்பத்தின் நெட் வொர்த் என்ன?’ ‘நெட் வொர்த்தா? அப்படீன்னா?’ ‘குடும்பத்தின் மாதச் சேமிப்பு எவ்வளவு?’… Read More

பிரசவத்துக்குப் பிறகு… சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு

உச்சி முதல் பாதம் வரை கர்ப்பிணியின் உடலுக்குள் ஏராளமான மாற்றங்களை ஏற்படுத்துவது கர்ப்ப காலம். உடல் பருக்கும். சருமத்தில் கரும்புள்ளிகளும் சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். வாயைச் சுற்றிய சருமம் உலர்ந்துபோகும்.  கருவைச் சுமந்த வயிற்றில் தழும்புகள் ஏற்படும். கொத்துக் கொத்தாகக் கூந்தல் உதிரும். இவை எல்லாமே தற்காலிகமானவைதான். பத்து மாதங்கள் உடலுக்குள் நிகழ்ந்த ஹார்மோன் மாற்றங்கள்… Read More

நீங்க அம்மா ஆகிட்டீங்க!

நீங்கள் அம்மாவாகப் போகிறீர்கள்’ என்பதைத் தெரியப்படுத்தும் ஆரம்ப அறிகுறிகளில், மாதவிடாய் தள்ளிப்போவதைத் தவிர மற்ற அறிகுறிகள் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரி இருக்காது. அவை என்னென்ன… எப்படியெல்லாம் மாறுபடுகின்றன?… Read More

பெண்களை பாதிக்கும் நோய்கள்

அழகை பாதிக்கும் நரம்பு வியாதிகள் பெண்கள் அதிகம் கவனம் செலுத்தும் ஒரு விஷயம் அழகு. அதிலும் முக அழகுக்கு ரொம்ப அதிகமாகவே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.  முகத்தில் சின்ன பரு வந்துவிட்டாலே வருத்தப்படுகிறவர்கள் பெண்கள். அழகை பெரிய அளவில் பாதிக்கும் வேறு ஏதாவது பிரச்னை  என்றால் சொல்லவே வேண்டாம், உடைந்து போய் விடுவார்கள்.முக அழகை பாதிப்பதில் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு எத்தனை  சம்பந்தம் உண்டோ அதேபோல் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகளும் முக அழகை பாதிக்கும் என்கிறார் மருத்துவர் திலோத்தம்மாள்.… Read More

பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் உண்மையில் உடற்பயிற்சியா?

வீட்டில் உணவு சமைப்பது, சுத்தம் செய்வது, துணி துவைப்பது, குழந்தைகளை பராமரிப்பது ஆகியவற்றை செய்யும் பெண் சுறுசுறுப்பானவரா? இல்லை, அலுவலகத்திற்கு சென்று வேலை செய்யும் பெண்கள் சுறுசுறுப்பானவர்களா?… Read More

அந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்! – மென்ஸ்ட்ருவல் ஹைஜீன்

மாதவிலக்கின்போது பெண் அசுத்தமானவள் ஆவதில்லை. அவளது உடலிலிருந்து வெளியேறு வது அசுத்தமான ரத்தமும் இல்லை. கருவாகாத ரத்தத் திசுக்களே மாதவிடாயின்போது உதிரப்போக்காக வெளியேறுகின்றன. இதை நீங்கள் உணர்வதுடன், உங்கள் பெண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுடன் வளரும் ஆண் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். `அருவருப்பாக அணுகவேண்டிய விஷயமல்ல அது’ என்பதை குழந்தைகளும் புரிந்து கொள்ள வேண்டும்.மற்ற நாள்களைவிடவும் மாதவிலக்கு நாள்களில் அதிகபட்ச சுத்தம் அவசியம். மாதவிலக்கின்போது குளிக்கக் கூடாது என்றொரு நம்பிக்கை அந்த நாள்களில் இருந்தது. அப்போது குளங்களில்… Read More

தாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்? என்ன காரணம்?

அன்னை தாய்ப்பால் கொடுக்கும் பொழுது, குழந்தை தாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை நித்திரை கொள்ள ஆரம்பித்து விடும்; அதுவும் தாயின் மார்பகத்தில் வாய் வைத்து பால் குடிக்க ஆரம்பித்த உடன் சற்று நேரத்திற்கெல்லாம் குழந்தை உறக்கத்தில் மூழ்கி கனவுகளில் மிதக்கத் தொடங்கி விடும். இவ்வாறு அடிக்கடி உறங்குவதால்,… Read More

கருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள் 

கருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலி (What is Ovulation Pain?) சில பெண்களுக்கு சினைப்பையில் இருந்து கருமுட்டை வெளியேறும் சமயத்தில் வயிற்றின் ஒரு புறம் வலி ஏற்படுவதுண்டு. இது மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் ஏற்படுவதால், இதனை மிட்டல்ஸ்மெர்ஸ் (ஜெர்மன் மொழியில் ‘நடு வலி’ என்று பொருள்) என்றும் அழைப்பர். ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சி 28 நாட்கள் கொண்டது எனில், இந்த வலி 14வது நாள் ஏற்படும்.… Read More

PCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா? 

பெரும்பாலான பெண்களுக்கு எடை குறைப்பது கடினமாக உள்ளது. ஆனால் PCOS உள்ளவர்களுக்கு, உண்மையிலேயே இது மிகவும் போராட்டமாக இருக்கும்.   PCOS என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு ஹார்மோன் பிரச்சனையாகும். இது பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்ட்ரோம் என்பதன் சுருக்கமாகும். பல பெண்கள் இன்சுலின்… Read More

வேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்

பணிக்குச் செல்லும் பெண்களின் முதன்மைச் சவால்கள் மற்றும் பாலியல் தொந்தரவுகள் பற்றியும், அவற்றைப் பற்றி அந்தப் பெண்களின் குடும்பத்தினர் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றியும் சென்ற இதழில் பார்த்தோம். இந்த இதழில், ஒரு நிறுவனத்தில் பெண்களின்… Read More