வணிகம்

பணக்காரர் ஆக இந்த 7 உதவிக்குறிப்புகளைப் பின்பற்றினால் போதும்!!

கோடீஸ்வரர் ஆவது கடினம்? பெரும்பாலான மக்கள் அதை கடினமாக கருதுகின்றனர். ஆனால், உலக ஜாம்பவான்கள் பில் கேட்ஸ் அல்லது ஜெஃப் பியூஸ், வாரன் வேஃப் அல்லது ஜாக் மா போன்ற கோடீஸ்வரர்கள் யாரும் இல்லை. இருப்பினும், கடின உழைப்பால், அவர் ஸ்மார்ட்… Read More

வங்கியில் டெபாசிட் செய்யப்போறீங்க.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதோ தெரிந்து கொள்ளுங்கள்..!

என்னதான் பல வகையான முதலீடுகள் குறித்தான அறிக்கைகள், விழிப்புணர்வுகள் வந்து கொண்டிருந்தாலும், இன்றளவிலும் மக்களின்… Read More

ஃப்ளிப்கார்ட், அமேசான்… இ-காமர்ஸ் நிறுவனங்களின் நஷ்டத்துக்கு என்ன காரணம்?

இந்தியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் மாற்றங்களை ‘இன்டர்நெட் புரட்சி’ என்றுதான் சொல்ல வேண்டும். ஜியோ வருகைக்குப் பிறகு ‘டேட்டா ப்ளஸ்’ நாடாக இந்தியா இன்று மாறியிருக்கிறது. இப்போது கடைக்கோடி இந்தியனுக்கும், `போதும்… போதும்’ என்கிற அளவுக்கு அதிகமான டேட்டா கிடைக்கிறது. இதனால் டிஜிட்டல் சார்ந்த புதிய தொழில்கள்… Read More

உலகளாவிய கடன் மதிப்பீடுகள் எவ்வாறு செயல்படுகின்றன?

இந்தியப் பொருளாதாரம் மீதான தனது பார்வையை ‘மூடி’ஸ் நிறுவனம் மாற்றியுள்ளது. இந்தியப் பொருளாதாரம் தீவிர நெருக்கடி நிலையில் இருப்பதாக அந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. இந்தியாவின் பொருளாதார மந்தநிலை முன்பு இருந்ததைவிட தற்போது தீவிரம் அடைந்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.… Read More

40 வயது… காப்பீடுகள், முதலீடுகள்! – நடுத்தர வயதினருக்கு நச் ஆலோசனை

நாற்பது வயதைத் தாண்டும்போதுதான் நம்மில் பலருக்கும் சேமிப்பு, முதலீடு குறித்த சிந்தனையே பெருக்கெடுத்து ஓடத்தொடங்குகிறது. குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானபின் கல்விக் கட்டணங்கள் நம் கழுத்தைப் பிடிக்கத் தொடங்குவது இந்த வயதில்தான். தீராத கால்வலி என்று மருத்துவமனைக்குச் சென்றால், மூட்டுத் தேய்மானம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது என உடல்நலக்கோளாறுகளை மருத்துவர்கள் பட்டியலிடுவதும் இந்த வயதில்தான். இதற்கான மருத்துவச் செலவு, நோயைவிட மிக மோசமான பயத்தினை நம்மிடம் உருவாக்குவதாக உள்ளன.… Read More

வீட்டுக் கடன்… இ.எம்.ஐ தொகையை மீட்டெடுக்கும் எஸ்.ஐ.பி ஃபார்முலா!

இன்றைய சூழலில், இ.எம்.ஐ எனும் மூன்றெழுத்தை  உச்சரிக்காதவர்கள் மிகக் குறைவு. அதைப் பயன்படுத்த விரும்பாத சம்பளக்காரர்களும்  மிகக் குறைவு. அந்த அளவுக்கு, நம் எதார்த்த வாழ்க்கையில் இயல்பான ஒன்றாகிவிட்டது இந்த இ.எம்.ஐ.  இ.எம்.ஐ செலுத்துவது என்பதே ஒருவிதமான அவஸ்தைதான். வாங்கிய பொருளிற்கான இ.எம்.ஐ தொகையைச் செலுத்துவதற்காக ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் தொகை ஒதுக்குவதில் தொடங்கி, பணத்தைச் செலுத்தி முடிப்பது வரை எல்லோருக்கும் ஒரேமாதிரியான அனுபவம்தான் கிடைக்கிறது.  … Read More

வருமான வரிச் சேமிப்பு… இ.எல்.எஸ்.எஸ் ஃபண்ட் ஏன் சிறந்தது?

பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டமான இ.எல்.எஸ்.எஸ் (ELSS – Equity Linked Savings Scheme) ஃபண்டில் முதலீடு செய்தால் வருமான வரியை மிச்சப்படுத்த முடியும். இந்த ஃபண்டில் செய்யும் முதலீட்டுக்கு நிதி ஆண்டில் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு உண்டு. இந்த ஃபண்டில் போட்ட முதலீட்டை மூன்று ஆண்டுகள் வெளியில் எடுக்கமுடியாது. மாதம் குறைந்தபட்சமாக 500 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம். யாருக்கு ஏற்றது?… Read More

பட்ஜெட் 2019: யாருக்கெல்லாம் வருமான வரிச் சலுகைகள்?

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் 2019-20-ஐ பொறுப்பு நிதி அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். கடந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்களுக்கு அளித்த வரிச் சலுகை மற்றும் வரிச் சலுகையைப் பற்றி பட்ஜெட்டின்போது பெருமையாகக் குறிப்பிட்ட பியூஷ் கோயல்,  புதிய நிதியாண்டுக்கான வருமான வரிச் சலுகை பற்றி எதுவும் கூறாமல் வேறு அறிவிப்புக்குச் சென்றுவிட்டார். கடந்த பட்ஜெட்டில் சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு அறிமுகப்படுத்தப் பட்ட நிலைக்கழிவு இப்போது, ரூ.40,000-லிருந்து ரூ.50,000-ஆக உயர்த்தப் படுகிறது.… Read More

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்!

பல வருடங்களுக்குமுன்பு, தொலைபேசியைப் பயன்படுத்தவே தடுமாறிய மக்களின் கைகளில், இன்று ஆண்ட்ராய்டு போன்கள் எப்படி வெகு சாதாரணமாகப் புழங்குகிறதோ, அதேபோன்று அன்று பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் போன்றவையெல்லாம் சூதாட்டம் என்றும், இது நமக்குச் சரிப்பட்டுவராது என்றும் ஒதுங்கியவர்கள், இன்று இந்த முதலீட்டுத் திட்டங்களின் பக்கமாக கவனத்தைத் திருப்பியிருக்கிறார்கள். இந்த முதலீட்டுத் திட்டங்களின் வெளிப்படைத்தன்மை அதன் லாபகரமான செயல்பாடுகள் மற்றும் அவை தரும் சிறந்த வருமானம் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் பரவலாக அறிந்துகொண்டு, முதலீட்டை… Read More

வளைக்கும் மோசடிகள்… தப்புவது எப்படி?

செபி மற்றும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது மக்களை எச்சரித்து வந்தாலும்,  பொதுமக்கள் ஏமாறுவது தொடர்கதையாக உள்ளது. விஜய் மல்லையாக்களும், நீரவ் மோடிகளும் வங்கிகளைக் குறிவைத்து மொத்தமாகப் பணத்தை வாரிச் சென்றதைப் பார்த்தோம். இந்த வகை மோசடிகளைத் தவிர்க்க நாம் செய்யக்கூடியது ஏதுமில்லை. சீனியர் சிட்டிசன்களை குறி வைத்து…… Read More

கடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன?

கடந்த வாரம் சில டிவியில் எஸ்பி்ஐ வங்கி மற்றும் பிற முன்னணி வங்கிகளுக்கும் இடையே கடன் ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டதாகப் பரபரப்பான செய்திகள் உலா வந்தன. வங்கிகளுக்கு இடையே கடன் ஒப்பந்தங்களா? அப்படி என்றால் என்ன? என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கலாம். இது தொடர்பான விளக்கங்களை இங்குக் காண்போம்.… Read More

ஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா?

சமீபத்தில் நடந்த ஜி.எஸ்.டி கவுன்சிலின் 28-வது கூட்டத்தில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், பெயின்ட்டுகள், வார்னிஷ்கள் உள்பட 88 பொருள்களின் ஜி.எஸ்.டி வரியானது குறைக்கப் பட்டுள்ளது. இந்த வரிக் குறைப்பு ஜூலை 27 முதலே நடைமுறைக்கு வருகிறது.  18 சதவிகிதமாக வரி குறைக்கப்பட்டவை… Read More

குறுகிய கால முதலீடு… எது பெஸ்ட்?

வட்டி விகிதம் 2015-ல் 9 சதவிகிதமாக இருந்தது; இன்று படிப்படியாகக் குறைந்து 7 சதவிகிதமாக இருக்கிறது. இது பாதுகாப்பான முதலீட்டை நாடிச்செல்பவர்களுக்கும் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்பவர்களுக்கும் ஒரு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால், குறுகிய கால முதலீடுகளான ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் ஃபண்ட் திட்டங்களுக்குப் பதிலாக ‘மாற்று முதலீட்டுத் திட்டங்களை’ பரிசீலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.    குறுகிய காலத்தில் பங்குச் சந்தை தந்த லாபம்… Read More

எதில் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

யூனிஃபை ஜி.மாறன் எழுதும் சிறப்பு கட்டுரை ஜி.மாறன் செயல் இயக்குநர், யுனிஃபை கேப்பிட்டல் (Unifi Capital). 2018 இதோ வந்தேவிட்டது. ‘இந்த ஆண்டில் நம் அஸெட் அலோகேஷன் எப்படி இருக்க வேண்டும்?’ என்கிற  கேள்வி எல்லா  முதலீட்டாளர்களின் மனதிலும் இருக்கும். நமது செல்வத்தைப் பெருக்க உதவும் அந்த அஸெட் அலோகேஷன் வழிமுறைகளைப் பார்க்கும்முன், சில கேள்விகள்…   1. பங்குச் சந்தை நன்கு ஏற்றம் கண்டிருக்கும் இந்தச் சமயத்தில் நம்  முதலீட்டை அதிகரிக்கலாமா?… Read More

நீங்கள் கோடீஸ்வரர் ஆவது ஒன்றும் கஷ்டம் இல்லை…!

இந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய நிதி ஆண்டு பிறந்திருக்கிறது. நீங்கள் கோடீஸ்வரர் ஆவதற்கான முயற்சிகளை இப்போதே தொடங்குங்கள்.கோடீஸ்வரரா…? நம்மால் முடியுமா என்கிற சந்தேகமே வேண்டாம். உங்களால் நிச்சயமாக கோடீஸ்வரர் ஆகமுடியும், எப்படி என்பதை நீங்கள் தெரிந்துகொண்டு செயல்பட ஆரம்பித்தால். நீங்கள் கோடீஸ்வரர் ஆவதற்கு தவறான முதலீடுகளை சிலர் உங்களிடம் எடுத்துச் சொல்லி,  ஆசை விதையைத் தூவுவார்கள். ஃபாரக்ஸ் டிரேடிங், ஈமு கோழி வளர்த்தல் போன்ற  திட்டங்களில் பணத்தைப் போடச் சொல்வார்கள். இந்த வழிகளில் ஒருவர்… Read More

பட்ஜெட் எதிரொலி: கார்களின் விலை குறையுமா?

கடந்த மத்திய பட்ஜெட்டில் கார்களுக்கு பல புதிய வரிகள் விதிக்கப்பட்டதை தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி முதல் கார்களின் விலை உயர்ந்துள்ளது. பல கார் நிறுவனங்கள் இந்த விலையேற்றத்தை (பார்க்க விலை அதிகரிப்பு பட்டியல்) கடந்த மார்ச் மாதமே  செய்துவிட்டன. உதாரணமாக, ஹோண்டா கார் ரூ.4,000 முதல் ரூ. 79,000 வரை உயர்ந்திருக்கிறது. இந்த விலையேற்றத்தினால் கார் விற்பனை கொஞ்சம் சரிந்திருப்பதாக சொல்கின்றன கார் விற்பனை நிறுவனங்கள். … Read More

`கமாடிட்டி’ சந்தையில் தங்க வர்த்தகம்

    தங்கத்தை ஆபரணமாக வாங்கி, விற்பதன் மூலம் ஏற்படும் செய்கூலி, சேதார இழப்புகளைக் கணக்கிட்டால் ஆபரணமாக தங்கமë வாங்குவது சரிப்பட்டு வராது என்று சிலர் நினைக்கின்றனர். அவர்கள், தங்கத்தில் முதலீடு செய்ய `ஈ.டி.எப்’ எனப்படும் `எக்சேஞ்ச் டிரேடட் பண்ட்’கள் (Exchange Traded Fund ETF) பக்கம் போகின்றனர். வேறு சிலர், குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் ஊக வணிகத்தில் ஈடுபடுகின்றனர். வேறு எந்த முறையில் தங்கத்தில் முதலீடு செய்தாலும் முழுத் தொகையையும் செலுத்தியே அதற்கான… Read More

தங்கத்தின் தேவை அதிகரிப்பதற்குக் காரணம்!

  இந்திய நகைச் சந்தை தங்க நகைகளுக்கு உலகிலேயே பெரிய சந்தையாக இநëதியா விளங்குகிறது. கடந்த ஆண்டில் இந்தியா இறக்குமதி செய்த ஆயிரம் டன் தங்கத்தில் பெரும் பகுதி, தங்க நகை செய்வதற்கே சென்றுள்ளது. உலக தங்க கவுன்சில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், இந்தியப் பெண்களில் 75 சதவீதம் பேர் தாங்கள் எப்போதும் புதிய டிசைன் நகைகளைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். `டிமாண்டின்’ பின்னணியில்… இந்தியாவில் தங்கத்துக்கான `டிமாண்டின்’ பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. அதில், பெருமைக்காக… Read More

தடுமாற வைக்கும் தங்கம்!

  `கிடுகிடு’வென்று உச்சத்தை எட்டியிருக்கிறது தங்கம். ஆனால் இந்த விலையிலும் தங்கம் தங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இனி தங்க நகை வாங்குவதே காஸ்ட்லியான கனவாகி விடுமோ என்று தயங்கி, தேங்கி நிற்கிறார்கள் நடுத்தர மக்கள். தங்கத்தின் எவரெஸ்ட் சிகர உயர்வின் பின்னணி, தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவை குறித்த விஷயங்களைப் பார்ப்போம்… விலை உயர்வு ஏன்? தங்கம் பொதுவாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. அதிகம் படிக்காதவர்கள் கூட தங்கத்தில் முதலீடு செய்வதில் நல்லது என்று புரிந்துவைத்திருக்கிறார்கள்.… Read More

எதைப் பொறுத்து கடன் கொடுப்பார்கள்?

  `நானும் பாங்க் பாங்கா ஏறி இறங்குறேன்… யாரும் கடன் கொடுக்க மாட்டேங்கிறாங்க…’ என்று சிலர் புலம்புவார்கள். அவர்கள், `கடன் நிலை தகவல் அறிக்கை’யின் (`கிரெடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட்’- சுருக்கமாக `சி.ஐ.ஆர்.’) அடிப்படையில்தான் ஒருவருக்குக் கடன் கொடுப்பதா, இல்லையா என்று வங்கிகள் தீர்மானிக்கின்றன என்பதை அறியாதவர்கள். வங்கிகள், நிதி நிறுவனங்கள் சார்பில் `சி.ஐ.ஆர்.’கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கடன் கொடுப்பது குறித்து முடிவெடுப்பதில் `சி.ஐ.ஆர்.’ தான் வங்கிகளுக்கு வேதம். ஆனால் இதன்… Read More