வரலாற்று நிகழ்வுகள்

மனிதருள் மாணிக்கங்கள்

ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தக் காலத்திற்குத் தேவையான மாற்றங்களை உருவாக்க மனிதருள் மாணிக்கங்கள் தோன்றினார்கள். மத தத்துவங்களால் மனித மனங்களை புனிதப்படுத்தினார்கள் மகான்கள். மனித சமுதாய தேவைகளை கண்டுபிடிப்புகளின் வழியே நிறைவேற்றி முன்னேற்றம் ஏற்பட செய்தனர் விஞ்ஞானிகள். அரசியல் தொண்டறம் புரிந்து மாற்றங்களை உருவாக்கினார்கள் சீர்திருத்தவாதிகள். இவர்களின் போதனைகள், கண்டுபிடிப்புகள், கொள்கைகள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஊடுருவி நிற்பதால் அவர்கள் என்றும் மறக்கக்கூடாதவர்களாகிறார்கள். *** மகான்கள், விஞ்ஞானிகள், சீர்திருத்தவாதிகள் போன்றவர்களால்தான் மனித சமுதாயம் இன்றைய நவ நாகரீகத்துக்கு வளர்ந்திருக்கிறது. இவர்களில்… Read More

Japan Tsunami 2011 photos

Japan Tsunami 2011 photos

————————————————————————————————-———-———————-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-———-

அநியாய ஆடம்பரம்!

தன்னை `சூரியக் கடவுள்’ என்று அழைத்துக் கொண்ட பிரெஞ்சு மன்னன் பதினான்காம் லூயி வீண் ஆடம்பரத்துக்காகக் கட்டியதுதான் வெர்செய்ல்ஸ் அரண்மனை. நாட்டையே திவாலாக்கிய இதைக் கட்டி முடிக்க 50 ஆண்டுகள் ஆயின. முப்பதாயிரம் பேர் வலுக்கட்டாயமாக கூலியில்லாமல் வேலை செய்ய வைக்கப்பட்டனர். பணியின்போது நூற்றுக்கணக்கான பேர் கொள்ளை நோயால் உயிரிழந்தனர். கட்டுமானப் பணிகளை மன்னன் நேரடியாக மேற்பார்வையிட்டான். சலவைக் கல், வெண்கலச் சிலைகள் பல நிறுவப்பட்டன. 250 ஏக்கர் பரப்பில் தோட்டம் அமைக்கப்பட்டது. ஏராளமான நீரூற்றுகள் அமைக்கப்பட்டன.… Read More

அங்கோர் அதிசய அழிவுகள்

வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம்ரெப்ஐ விமானத்தில் சென்றடையலாம். சிம்ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து தற்சமயம் நன்று சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம். வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்? அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், அங்கோர் என்கிற ஒரு பெரும் நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. அப்பெரு நகரின் பேரழிவு களாய் இன்றும் விரவி நிற்கின்றன அங்கோர் கோயில் கூட்டங்கள். மிகப் பெரியவை, பெரியவை,… Read More

ஊரை மறந்த விஞ்ஞானி-ஐன்ஸ்டீன்

உலக புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ரெயிலில் பயணம் செய்தார். அவர் மனதிற்குள் ஒரு கஷ்டமான கணக்கிற்கு விடை தேடிக் கொண்டு இருந்தார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்தார். அவர் ஒவ்வொருவரிடமும் டிக்கெட் வாங்கி சோதித்து கையெழுத்து போட்டார். ஐன்ஸ்டீனிடம் டிக்கெட் கேட்டார். அவர் தான் அணிந்திருந்த கோட்டு பைக்குள் கையை விட்டார். டிக்கெட்டைத் தேடினார். அது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. டிக்கெட் பரிசோதகர் அவரை உற்று பார்த்தார். அவர் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் என்பதை அறிந்து… Read More

அன்னையின் பேச்சை மறுத்த அக்பர்

அக்பர் தன் அன்னையின் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தார். ஒருநாள் ஆக்ராவிலிருந்து லாகூருக்கு அவர் தனது அரண்மனை பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவருடன் அன்னையும் உடன் சென்றார். அன்னை பல்லக்கிலும், அக்பர் குதிரை மீதும் பயணம் செய்தனர். அவர்கள் செல்லும் வழியில் சிறிதளவே தண்ணீர் ஓடும் சிற்றாறு ஒன்று குறுக்கிட்டது. ஆனால், இவர்கள் கடக்கும் நேரம் இடுப்பளவிற்கு தண்ணீர் பெருகத்தொடங்கியது. அக்பர் தனது குதிரையை விட்டு இறங்கி, தன் அன்னை அமர்ந்திருந்த பல்லக்கை நோக்கி ஓடினார்.… Read More